Back

Short story

January 9, 2018

புருஷி

SHARE

புருஷி


"Date ஆகி அதுவும் pad வைக்காத நாளதுமா ஏன் டா இப்படி பண்ற? கோவமா இருக்கப்போ லாம் கொஞ்சிடாத.... இனி கொஞ்சுறதுக்கு இன்னும் நாலு நாள் பொறுக்கனும்...
வுடு டா..லூசு" இப்படி எப்போதும் என்னை கொஞ்சும் இவனா.... அப்படி அழ வைத்தான். எல்லாத்திற்கும் காரணம் நான் தான். சாப்பிட்டு உறங்க போகும் முன் கொஞ்ச நேரம் என் மடியில்
படுத்திருந்து என்னோடு எதாவது பேசிக் கொண்டு இருந்துவிட்டே bed க்கு உறங்க போவோம். எங்களின் பிரதான இருக்கை மாடிப் படி தான். எப்போதும் போல அன்றும் சாப்பிட்டு இருவரும் மாடி
படியில் அமர்ந்தோம். இல்லை நான் அமர்ந்திருந்தேன். அவன் படுத்திருந்தான்.என் மடியில். கொஞ்ச நேரம் கொஞ்சினான் என்னை குழைய வைத்தான்.அவன் பேச்சும் கைகளும் கண்களும் என்னுள்
எங்கெங்கோ உலவித் திரிந்தன. "டேய் புருசா..." " ம்ம் சொல்லு புருஷி " " என் வாழ்க்கை ல நடந்தத எல்லாம் நெனைச்சு பார்த்தா நானும் ஒரு item மாதிரியோனு
தோனுது டா" "இருந்திட்டு போ எனக்கு மட்டுமான item ஆ" "இல்ல டா சின்ன வயசுல ஐஸ் பாய் விளையாட்டு விளையாடும் போது நான் நெறய பேர கட்டி பிடிச்சு இருக்கேன்..
அப்புறம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடும் போது நான் பசங்களோட ஒன்னா படுத்து இருக்கேன் டா" " சிரிப்பு காட்டாத புருஷி... வயிறு வலிக்கும்... ஏற்கனவே நெறய
சாப்டுட்டேன்.. உன் கை பக்குவமே தனி புருஷி... உன் கைக்கு வைர மோதிரம் தான் போடனும்" " தங்கம் இன்னும் நெறய இருக்கு... ஒரு item த்துக்கான எல்லா தகுதியும் எனக்கு
இருக்க மாதிரி feel பண்றேன் டா." மடியில் மல்லாந்து படுத்து இருந்தவன் புரண்டு என் பக்கமாய் திரும்பி சேலையை விலக்கி வயிற்றில் முத்தம் வைத்து கூச்சமூட்டினான்.
"ம்ம் அப்பறம்? சொல்லு புருஷி... நல்லா காமெடியா இருக்கு " "புருஷி சொல்லாத தங்கம்.. நான் அதுக்கு தகுதியானவள் இல்ல" "என் புருஷி க்கு என்னென்ன
தகுதி இருக்குனும் ன்ற நான் தான் முடிவு பண்ணனும்.... வா" என்று மடியிலிருந்த படி பின்னங்கழுத்தில் கையோட்டி என் முகத்தை உதட்டுக்கு இழுத்தான். "வேணாம் தங்கம்...
இன்னும் நெறய இருக்கு ..... நான் கேவலமானவ" "நெறய இருக்கு நெறய இருக்கு னு சொல்றியே அப்படி என்ன நெறய இருக்கு னு சொல்லு" "இல்ல புருசா வேணாம்..
சொல்லிட்டப்பறம் நீ என்னைய இதே மாதிரி Love பண்ண மாட்ட கொஞ்ச மாட்ட" "சொல்லு டி... எனக்கு என்ன னு தெரிஞ்சிக்கனும் சொல்லு..." "நான் ஏன் இப்படி
இருக்கேன்... ஒரு வேள அப்பா இருந்திருந்தா நல்லா வளர்ந்திருப்பேனோ" என அழ ஆரம்பித்து விட்டேன். "லூசி... அழாதடி... ஐ லவ் யூ..." " இல்ல தங்கம் சும்மாவா
சொன்னாங்க ஒல்லியா இருக்க பொண்ணுக்கு sex உணர்ச்சிகள் அதிகம் னு (விசும்பல்)" "புருஷி அழாத புருஷி..... வா தூங்கலாம்" அவன் தோள் மீது சாய்த்து கொண்டு என்னை
இடக்கையால் அணைத்தபடி படுக்கைக்கு அழைத்து சென்று படுக்க வைத்து கண்களை துடைத்து விட்டு போர்வையை போர்த்தி விட்டு... என்னருகில் அவனும் படுத்து கொண்டான். என்னை தீண்டவில்லை.
புரண்டு புரண்டு படுத்தேன்.உறக்கம் வரவில்லை. அந்த பக்கம் திரும்பி படுத்திருந்த அவன் கன்னத்தை தொட்டு என் பக்கம் திருப்பி எனக்குள் அவனை அடைத்து கொள்ள முற்பட்டேன்.
"போடி......" சிரித்து கொண்டே எதையோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டான். "திட்டு புருசா.... கெட்ட வார்த்தை சொல்லு" " வாடி லூசி... விளையாட்டுக்கு
கோவிச்சுகிட்டேன் வாடி(என்னை அவன்வசம் இழுக்கிறான்)" "திட்டு புருசா..." "ஏய் புருஷி " "சும்மா விளையாட்டுக்கு தான் புருசா... திட்டு... கெட்ட
வார்த்தைல திட்டு" "(சிரித்து கொண்டே) வாடி... கேவலமா திட்டிட போறேன்" "அதுக்கு தான் wait பண்றேன்... திட்டூஉ" "ஏன்டி உன் அரிப்பு க்கு நான்
தான் கிடைச்சேனா? Item... " எனக்கு மட்டுமான item என காதோரம் வந்து கிசு கிசுக்கிறான். "போடா... கெட்ட வார்த்தை வேணும் " "உன்ன அடிக்க போறேன்"
"ம்ஹூம்.... காதால கேட்க முடியாத கெட்ட வார்த்தை வேணும்" "I hate you புருஷி... " "டேய் எவ்வளவு நேரம் டா கெஞ்சுறது சீக்கிரம் திட்டு புருசா"
"your my concubine only... Your my use and throw" " எனக்கு English புடிக்காது... தமிழ் ல தான் வேணும் அதுவும் காது கூசுற அளவுக்கு கெட்ட வார்த்தை
வேணும்" இருவருக்கும் இடையில் பேரமைதி நிலவியது.ஏதோ யோசித்தவன்.. மூச்சு சுடும் அளவு கிட்ட நெருங்கி வந்தான் .என் மேல் மார்பை விலக்கி வலது கையின் ஆட் காட்டி விரலால்
அந்த வார்த்தையின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் என் கழுத்தடியில் எழுதி காட்டினான். "ம்ம் இந்த... இந்த வார்த்தைக்காகத் தான் wait பண்ணேன்" "வாடி
லூசுப் புருஷி..." "வரேன் அந்த வார்தைய உன் வாயால சொல்லு" "நான் பொண்ணுங்கள கெட்ட வார்த்தை ல திட்றது இல்ல" "சொன்னீனா வரேன் சொல்லு"
"உன்னைய திட்ற மாதிரி நல்ல கெட்ட வார்த்தை தெரியாது புருஷி வா..." "சொல்லுடா.. தங்கம்" "ஏய்... தே " "ஏன் நிறுத்திட்ட சொல்லு... தங்கம்
நான் உன்ன கட்டிக்றதுக்கு முன்ன... ரெண்டு பேர... லவ் பண்ணிருக்கேன்... Please கோவப்படாத... உன் கிட்ட ஜனாவ பத்தி மட்டும் தான் சொல்லி இருக்கேன்.. ஜனா விட்டு போன அப்பறம்...
உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு ரெண்டு மாசம் முன்ன... பிரதீப் னு ஒருத்தன லவ் பண்ணேன்......அவனும் பண்ணான்.. ரெண்டு மூனு முறை நேர்ல சந்திச்சிருக்கோம்.. Please
தங்கம் sorry... மன்னிச்சுக்கோ... புதுசு புதுசா ஒன்னொன்னா சொல்லிட்டு இருக்கேன்... ஒரு முறை படம் பார்க்க போனப்போ... என் மேல கை வைக்க பார்த்தான்...நான் விடல .. அதுக்கு
அப்பறம் அவன் என்னைய Friend... Friend னு சொல்லிட்டு இருந்தான்.. உடனே நீ என்ன நெனைச்சிட்டு இருக்க உன் மனசில... என்னைய love பண்றியா இல்லையா...னு.. கேட்டேன் அவனுக்கு நான்
tym கொடுத்தேன்..... அதுக்கு அப்பறம் அவன் ஆளையே காணோம்.. நானும் அவன விட்டுட்டேன்.. Please டா என்னைய....(தேம்பல்)... மன்னிச்....(தேம்பல்)... டேய் புருசா.. இது தான் last
எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. மன்னிச்சுக்கோ புருசா.. உன் முகத்துல முழிக்கவே கேவலமா இருக்கு.. மன்னிச்சுக்கோ தங்கம் " அவன் கண்ணில் மாலை மாலையாக கண்ணீர். "
எல்லாத்துலயும் நீ மனசு நோகக் கூடாது னு சொல்லி சொல்லி ஒரே அடியா உன் மனச நோகடிச்சிட்டேன் ல... மன்னிச்சுக்கோ தங்கம்.. வா.. " " நெசமா நீ ஒரு தே... தான் டி "
" தேவடியா தான... அதுக்கு என்ன அர்த்தம் புருசா " " அதுக்கு அர்த்தமே நீ தான் டி " படுக்கையில் இருந்து எழ முற்பட்டவனை அணைக்க முயன்றேன்... என்னை உதறி
தள்ளிவிட்டு எழுந்து ஓடும் வேகத்தில் நடந்தான். நான் எழுந்தோடி அவன் கால் களை பற்றிக் கொண்டேன்.அழுது புரண்டேன்... கெஞ்சினேன். மன்னிக்க சொன்னேன். என்னை அடித்து கோபத்தை
தணித்து கொள்ளச் சொன்னேன். ஆனால்.. அவன் கால் களை பற்றி இருந்த கைகளின் பிடி.. தளர்த்தி.. எதிர் அறையில் புகுந்து தாழிட்டு கொண்டான். என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.
"டேய் புருசா வெளில வாடா... நீ இல்லனா நான் செத்திடுவேன் டா.. வா... நீ தான் டா என் உசுரு... என் உலகம் எல்லாம்... வா டா....please டா... அழுகைய நிறுத்த முடியலடா...
அழுதே செத்திடுவேன்..வாடா... தங்கம்......" "டேய் கதவ தொற டா... வேணும் னா நீயே வந்து என்னைய கொன்னுடு டா... வா... என்னைய என்ன வேணா பண்ணு டா... ஆனா.... டேய்...
அழுகையா வருது.... வாடா... இப்படி அமைதியா..." பேச நா எழாமல் அழுது கரைந்து கொண்டிருந்தேன்..... கண்கள் இருண்டது.... மயக்கமா உறக்கமா... "பு.....
புருஷ்....புருசா..." அடிஸ்வரத்தில் கடைசியாய் இந்த வார்த்தைகள் தான் என் வாயிலிருந்து வெளியேறியதாய் ஞாபகம். கண்களை திறந்து பார்த்தேன். Bed ல் கிடந்தேன். அவனும்.
விடிந்திருந்தது. நான் விழித்து கொண்டதை அவன் அறிந்து கொண்டான்.என் இடுப்பில் கையோட்டி இறுக்கினான். கண்களால் சிரித்து கொண்டே " ஐ லவ் யூ புருஷி.... ஐ லவ் யூ லாட்.... ஐ
எம் வெரி ஸாரி.... நான் விளையாட்டா தான் திட்டிட்டு இருந்தேன்... நீ அந்த ஜனாவ பத்தியும் பிரதீப் பத்தியும் சொன்னது கூட பெருசா வலிக்கல... ஆனா இத்தனை நாள் பொய்யோ
இருந்திருக்கியோனு தோனிடுச்சு... உன்னோட past ல நீ எப்படி வேணா இருந்திருக்கலாம் எனக்கு கவலை இல்ல புருஷி... இப்போ... இனி....என்னைய... என்னைய மட்டும் தான் Love பண்ணனும்...
உன் Love எனக்கு மட்டுமானதா இருக்கனும்... புருஷி.... ஐ லவ் யூ....லவ் யூ லாட்...புருஷி...." பேசிக் கொண்டே இருந்தவன் நெத்தியில் அழுந்த முத்தமிட்டான். அழுதே
விட்டேன்.அப்போதும் இப்போதும். "ஏய் புருஷி...என்ன டி யோசனை.. எதுக்கு டி அழற..." "ஒன்னும் இல்ல புருசா...ஐ லவ் யூ...வா" "அடியேய்... இன்னும்
அஞ்சு... இல்ல இல்ல நாலு நாள் இருக்கு டி புருஷி." முற்றும்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...