Philosophy
January 16, 2023
தத்துவம்
SHARE

பிறர் அன்பின் இருப்பை உணர்ந்து அதற்கு பழகிக் கொள்வதென்பது குடிப்பழக்கத்தை விடவும் - தன்னை தானே தற்கொலைக்கு தயார் செய்வதை விடவும் - மோசமானது - அபாயகரமானது. அன்பின்
இருப்புக்கு பழகி விட்ட பின்-அதன் இல்லாமை / போதாமையின் ரணம் நெஞ்சில் நடுக்கம் உண்டு பண்ணும். மனதையே நாசம் பண்ணும். மனப்பிறழ்வுறச் செய்யும். ஆக, யாரோ போல, அன்பு
செய்கிறவர்களையும், எதுவோ போல அன்பையும், கடந்து வர பழகிக் கொள்ளுங்கள். வாழ்தல் சுகம். மேலும், அன்பென்பதோர் மாயக் கற்பிதம் - மனம் மயக்கும் ஓல் - தோற்ற மயக்கம் - நம்
வாழ்வை நாமே சீரழித்து கொள்ள வழி தந்து விட்டு போகும் - அபாயச் சங்கு. புரிந்து தெளி. விலகி நட. முடியாவிட்டாலும் பரவாயில்லை அன்புக் காதல் என்றெல்லாம் அரை போதையில் அணத்திக்
கொண்டிருப்பதை விட்டுவிட்டு அமைதியாய் வேடிக்கை பார். முடிந்தால் ரசி. ஒரு மூக்குத்தியின் சிறு ஒளி கீற்றில் பொலிவேறும் அழகில் மனம் மயங்கிச் சரிகிற போதும் - அவ்வளவு
முடியும் அள்ளி முடிந்திருக்கப்படுகிற போது - இரு புறமும் - திட்டமிட்டு தனித்தெடுத்து விடப்பட்ட - மயிரின் - பாவனை அழகை கண்டு கொண்ட உள் மனம் போல - எதாவது ஒரு காட்சியின்
வழி ஞானம் பெறுவாய். ஆக அமையதியாய் வேடிக்கை பார். அல்லது ரசி💙🖤❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...