Back

Philosophy

January 14, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

¤காலங்காலமாய்
கலவிக்கு மட்டுமே
துழவுகிறார்கள்.
¤தன் இன விருத்திக்கான
இயந்திரங்கள் என்றே
எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
¤அடுப்பங்கரைக்கு
வாக்கப்பட்டு வந்த
அடிமாடுகளாகவே
அவமதிக்கிறார்கள்.
¤வீட்டை சுத்தம் செய்யும்
விலக்கமாராகத்தான்
மதிக்கிறார்கள்.
¤ஏ
பெண்ணினமே
எழு!!!!!
¤அழு
உப்புக்கண்ணீரில்
உன் புண்களெல்லாம்
பட்டுப் போகட்டும்
அழு!!!!
¤எழு
அழுதது போதும்
மீண்டு
எழு!!!!!
¤உடை
உன் தடைகளனைத்தையும்
உடை!!!!
¤தகர்
தயங்காமல்
தகர்
படுக்கைக்கும்
அடுப்படிக்கும் மட்டுமே
உன்னை
அனுமதித்தோரின்
இழிவான எண்ணமெல்லாம்
இல்லாமல் போகட்டும்
தகர்!!!!!!!!
¤நுகர்
இந்த
சுத்தமான
இயற்கை காற்றில்
இதயம் நனையும்படி
நுகர்!!!!!
¤எரி
உன்
அச்சம்,மடம்,நாணம்
அனைத்தையும்
அடுப்பிலிட்டு
எரி!!!!!!!
¤உரி
புலி உனக்கு போர்த்தப்பட்ட
பூனைத் தோல்
உரி!!!!!
¤அறி
உன்னால்
எல்லாம் முடியும் என்(று)
அறி!!!!!!!!!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...