Back
Philosophy
December 12, 2021
தத்துவம்
SHARE

நீங்கள் இனிமேல் யாரையும் 'சாமி' என்று கூப்பிடக்கூடாது. வேண்டுமானால் 'அய்யா' என்று கூப்பிடுங்கள்.
நீங்களாகவே பதுங்குவதும் ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள்.
- பெரியார் (சிராவயலில், 7-4-1926-ல் சொற்பொழிவு-'குடிஅரசு' 25-4-1926)
// //
ஆமாம்,
முதலில், தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் பண்பு ஒழிய வேண்டும். தான் யாரினும் தாழ்ந்தவன் இல்லை, யாரும் தன்னினும் (பிறப்பால்) உயர்ந்தவன் இல்லை என்பதை சிந்தித்து உணர வேண்டும்.
மேலும், தன்னளவில் விடுதலை அடைந்தவனே தன் சமுகத்தின் விடுதலையைச் சிந்திக்கவும் அதற்காக செயலாற்றவும் முடியும்.
இங்கு, தன்னளவிலான விடுதலை என்பது உடல் மனம் கருத்து ஆகிய மூன்றிலும் உள்ள ஆரோக்கியத்தையும் தெளிவையும் பொருத்தது. ஆனால் இவைகளை பேண பொருளாதாரம் மிக முக்கியமான ஒன்று.
நிற்க. இங்கு பொருளாதார உயர்வுக்கு உழைப்பே மூலதனம். எனினும் முறையான சிந்தனையற்ற உழைப்பு வீண். ஆக, பொருளாதர விடுதலைக்கும் சரி மேற் சொன்னபடியான பிறப்பு பேதமற்ற சமூக விடுதலைக்கும் சரி சிந்தனையே
மிக முக்கியமானதாக இருக்கிறது.
எனவே, எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேட்டு செயலாற்ற வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. இந்த கேள்விகள் வெறுமனே தோன்றி விடாது.
கடந்த கால வரலாற்றையும் அப்போது இழைப்பப்ட அநீதிகளையும் தெரிந்து கொள்ளா விட்டால் சமகாலத்தில், இது இது ஏன்? எதற்காக? எப்படி? நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவோ எந்த ஒரு சிறு விசயத்தையும் மாற்றவோ
முடியாது. எனவே, வரலாற்றைத் தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்று.
இந்த வரலாற்றை தீவிரமான தொடர் தேடல் மிகுந்த வாசிப்பால் மட்டுமே சரியாக தெரிந்து கொள்ள முடியும். ஆக நண்பர்களே இந்த சமூகத்தின் மாற்றத்திற்கான மூல விதை வாசிப்பில் இருந்து தொடங்கிறது. தொடர்ந்து
வாசியுங்கள். நிறைய வாசியுங்கள். வாசிப்பின் தொடர்ச்சியாக சிந்தியுங்கள். சிந்தனையின் தொடர்ச்சியாக செயலாற்றுங்கள். மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.
- Ajithkumar Ajithkumar R ❤️💙🖤
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...