Philosophy
August 26, 2021
தத்துவம்
SHARE

கடிதம் - 04 சகி, நாளுக்கு நாள் உன் மீதான காதல் கூடிக் கொண்டே போகிறது. நகமாய், மரமாய் ஊற்றாய் என் காதலின் உரு வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஐ லவ் யூ சகி. என் உடலை என் ஆண்
திமிரை எல்லாம் தூக்கி தூர எறிந்து விட்டு தான் உன்னை காதலிக்கிறேன். இதை நீ நிறைய கணங்களில் உணர்ந்திருக்க கூடும். எனக்கு என்னை விட நீ முக்கியம், என்னை விட நம் காதல்
முக்கியம். சகி அன்று தந்தையார் தினத்தன்று "father's day க்கு நீ status வைக்கலயா" என்று நீ கேட்டதற்கு நான் "அப்பா வ பிடிக்கும்... ஆனா கொண்டாடுற அளவு
அப்பா க்கள் சிறப்பானவங்க இல்ல" என்றும் "அப்பா க்கள் னு இல்ல ஆண்களே னு கூட சொல்ல லாம்" என்றும் சொன்னது நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன் சகி. ஆமாம் சகி,
எனக்கு அப்பாவைப் பிடிக்கும். ஏனென்றால் என் நலனில் அவர் நிறையவே அக்கறை பாராட்டி இருக்கிறார். ஆனால் அதற்கென்று அவர் கொண்டாடப்பட வேண்டியவர் இல்லை. ஏனென்றால் நான் பார்த்த
எல்லா அப்பாக்களுமே தான் ஆண் என்கிற, தானே குடும்பத்தை தாங்க வல்லவன் என்கிற திமிருடையவர்கள் ஆண் வர்க்கத்திற்கான அடக்குமுறை எப்போதும் கையிலே வைத்திருந்தவர்கள். பெண்
என்பதாலே அம்மாவை அடிமை போல நடத்துகிறவர்கள். கொடுமைச் செய்கிறவர்கள். ஆண்மையை எப்போதும் தூக்கிச் சுமந்து கொண்டு திரிகிறவர்கள். அப்பாக்கள் என்று சொல்வதை ஆண்கள் என்று
சொல்வது மிகவும் பொருந்தும். அதனால் தான் அவ்வாறெல்லாம் சொன்னேன். சகி, நான் அந்த ஆண் திமிரை, ஆண் என்பதற்காகவே இந்தச் சமூகம் கொடுக்கிற அதிகாரத்தை, சலுகையை, இந்த வெற்று
மயிராலான மீசைக்குசச் சொல்லப்படுகிற மிடுக்கு என அத்தனையையும் தூக்கி தூர எறிந்து விட்டு, உன்னை காதலிக்கிறேன். முழு மனதாக. சகி, என் போதாத காலம் உன்னை என்னோடு தக்க வைத்துக்
கொள்ளவதற்கு இந்த ஆணாதிக்க சமூகம் வகுத்து வைத்துள்ள சமூக அந்தஸ்தை நான் பெறவில்லை என்றே கருதுகிறேன். என்ற போதும் சகி, எனக்கு நீ வேண்டும். உன் சொற்கள், என் துயராற்றும்.
முடிகோதும் உன் விரல்களின் உஷ்ணம், என்னை உறங்க வைக்கும். சகி, என்னோடான உன் இருத்தலை நீட்டித்துக் கொள்ள நீயேனும் ஒரு வழி சொல்லேன். சகி உன் சொற்களின் கை பிடித்து பயணிக்கவே
ஆசைப்படுகிறேன் நான். உடனிருந்து சொல்லுமிழ்ந்து என்னை வழி நடத்து சகி. நம் பரஸ்பர அன்பில், நம் பரஸ்பர புரிதலில், நம் பரஸ்பர காதலில் இந்த ஆண் பெண் என்கிற அடையாளமாய் -
தடையாய் நிற்கிற உடல் கடந்து, உட்கலந்து உயிரிணைவோம் வா சகி. என் வாசகி. சகி வந்து விடுவாய், எப்போதும் என்னை நீங்காதிருப்பாய் என்ற நம்பிக்கை உடனும். காதலுடனும் எங்கெல்லாம்
முடியுமோ அங்கெல்லாமும் உன் அங்கமெல்லாமும் உன்னிரு கலசங்களுக்கும், தொட்டணைத்தூறுமந்த வாலிபக் கேணிக்கும் எண்ணில்லா எச்சில் முத்தங்களுடனும் உனதாக ஏங்கும் பித்தன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...