Philosophy
April 30, 2021
தத்துவம்
SHARE

இங்கு ஆணின் நிர்வாணம் எந்தக் கிளர்ச்சி நிலையையும் உண்டு செய்வதில்லை. செய்தாலும் அது பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஆனால் பெண்ணின் அரைநிர்வாணம் கூட பெரும் பேசு பொருளாகிறது.
ஏன்? முதலில் பெண்ணுடல் குறித்தான புரிதல் மேம்பட வேண்டுமென நினைக்கிறான். ஆண், பெண் என எல்லாமே வெற்றுச் சதைப் பிண்டங்கள் தாம். இதைப்பற்றி இதற்கு முன்னும் எழுதி
இருக்கிறேன். இப்போதும் எழுதுகிறேன். இனியும் எழுதுவேன். இந்த உலகத்தில் மனிதனைத் தவிர எல்லா உயிரினமும் ஆடையில்லாமல் அம்மண கோலத்தில் தான் இருக்கின்றன? இருந்தும் அவை
எப்போதும் காஜி பிடித்தும் புணர்ந்து கொண்டுமேவா அலைகின்றன? இல்லையே. அது அது அதனதன் உடல் கிளர்ச்சியுறும் போது மட்டும் புணர்தலை மேற்கொள்கின்றன. ஆனால் இந்த ஆண்
குஞ்சுகளுக்கு மட்டும் எப்படி எந்த ஒரு பெண்ணின் நிர்வாணத்தை கண்ட மாத்திரத்திலும் குறி விறைக்கிறது? எல்லாப் பெண்ணின் நிர்வாணம் கண்டாலும் குறி விறைக்கிறதெனில் உன் தாய்
மற்றும் மகளின் நிர்வாணத்தை எப்படி காண்கிறாய் ஆண் மகனே.? பெண் என்பவள் யாருடைய உடைமையும் இல்லை. ஆனால் அவள் பெரிதும் அடிமைப் படுத்தப் படுவது உடலை முன்னிறுத்தியே. அவள் உடல்
ஒரு பொக்கிசமாய் பாதுகாக்கப்படுகிறது. இந்திய குடும்பங்களின் மானம் முழுதும் அந்த வீட்டுப் பெண்களின் நிர்வாணத்தில் தான் இருக்கிறது போலும்.( இன்னும் பச்சையாகச் சொன்னால்
அவளின் ஜட்டிக்குள்ளும், ப்ராக்குள்ளும் மட்டுமே) அப்படித் தான் அவள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போது சமூக வலைத்தளங்களில் நிறைய பெண்கள் தன் உடலை உடல் என்பதையும்
தாண்டி ஒரு கலையாகக் காட்சிபடுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அதை காமத்தின் குறியீடாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். (இன்னும் சிலர் அதை சந்தைபடுத்திக்
கொண்டு கூட இருக்கிறார்கள்.) இன்னும் சிலருக்கு முலை, மார் என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலும் கூட காமம் கிளர்ந்து விடுகிறது. இவர்களை எல்லாம் என்னச் செய்வது? கிடைக்கிற
எல்லாப் பெண்ணின் புகைப்படத்தை வைத்துக் கொண்டும் கர மைதுனம் செய்வார்களே ஒழிய அது வெறும் உடல் என்றோ, அதையும் தாண்டி அது ஒரு புகைப்படம் என்றோ உணரவே மாட்டார்கள்.
இவர்களுக்கு தேவை எல்லாம் எதுவாக இருந்தாலும் பெண்ணாக இருந்தால் போதும். இப்போது ஒரு பெண் பதிவிட்ட கருத்து தான் என் நினைவுக்கு வருகிறது. "காஜியானால் ஒரு பூசணிக்காயை
வாங்கி உனக்கு தேவையான அளவு hole போட்டு விட்டு எடுக்கவும் . என்னிடம் வராதீர்கள் தோழர்களே. கட் செய்து விடுவேன்" இப்படித் தான் இந்த மாதிரியான ஆண்களை எல்லாம் கையாள
வேண்டும். எது எப்படியோ சகி, எனக்கு மனம் கிளர்ந்தால் மட்டுமே என்னுள் காமம் கிளரும். அந்த நேரம் நீயும் உடன்பாட்டல் மட்டும் கூடல். மேலும், நான் உன்னை எனக்கு சமமாகவே
எண்ணுகிறேன். எண்ணுவதை விட, நீ எனக்கு சமமானவள் என்பது தான் உண்மையும் கூட. மேலும், உன் உடலை சதையாக, கவிதையாக, ஓவியமாக, கலைப் பொருளாகத் தான் பார்க்கிறேன். உன்னை
நிர்வாணமாய் நிறுத்திப் பார்த்து கவிதை எழுதி இருக்கிறேன். ஓவியம் கூட வரைய முயன்றிருக்கிறேன். சகி, உன் நிர்வாணம் காமம் மட்டுமே இல்லை என்பதை நானறிவேன். ஏனெனில் என் தாயின்
நிர்வாணத்தில் பசியாறி வளர்ந்தவன். உன் நிர்வாணம் என்பது தாய்மை. உன் நிர்வாணத்தில ஒரு ஓவியத்தின் காட்சி இன்பம் உண்டு; கவிதை இன்பம் உண்டு; நடக்க அதிரும் உன் அவயங்களிலும்
அணிகளிலும் இசையும் உண்டு சகி. மேலும் சகி ஒரு பெண்ணின் நிர்வாணத்தை நான் விடுதலையின் குறியீடென்பேன். ஆமாம் சகி, எதை முன்னிறுத்தி பெண்ணினம் அடிமைபடுத்தப்பட்டதோ, அதை
முன்னிறுத்தி தான் விடுதலை அடைய முடியும் சகி. மட்டுமின்றி, என்னளவில் உன் உடல் என்பது முதலி்ல் சதை; அடுத்து, அது ஒரு மாபெரும் கலை கூடம். இந்தக் காமம் எல்லாம் கடைசி தான்.
ஐ லவ் சகி. - தொடர்ந்து உரையாடுவோம் - பைத்தியக்காரன். https://m.facebook.com/story.php?story_fbid=1373694566324098&id=100010507024645
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...