Back

Philosophy

December 29, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

#சிறுகதை. #அப்பா_சொன்னது_தான். "வா மாமா.. வா ப்பா" என விருந்தாளிகளாய் வந்து வீட்டின் வெளித்திண்ணையில் உட்கார்ந்து இருந்த பெரியப்பாவையும் தாய் மாமனையும்
அழைத்தபடி தன் இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டி கொண்டு வீட்டினுள் இருந்து வெளியில் வந்தான் கோவிந்தராசு. தென்னங் கீற்றும் பன ஓலை யும் கலந்து வேயப்பட்டிருந்து அந்த வீடு.
அங்கங்கு சாக்கு பைகளாலும், டயர் ட்டூயுப்களாலும் ஒட்டுப் போடப்பட்டிருந்தது அதன் கூரை. பாதி கழுவியும் கழுவாலும் இருந்த சோற்றுத் தட்டுகளும் , பாதி தண்ணியும் பாதி
அழுக்குமாய் இருந்த சொம்பும், அழுக்குத் துணிகளும், கரிப் படித்த பாத்திரங்களும் திட்ட மிட்டே கலைத்து போடப் பட்டதைப் போல வீட்டின் வெளித் திண்ணையில் கிடந்தன. கோவிந்த ராசு
பார்ப்பதற்கு ஒரு மூங்கில் வாரையைப் போல உயராகவும் திடமாகவும் இருந்தான். " ம்ம் வரங் கண்ணு" என்று அவன் அழைப்பை ஏற்று புன்னைகைத்தார்கள் இருவரும். " செத்த
இருங்க டீ வச்சகிட்டு வரேன்" என்று லூங்கி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டினுள் நுழைய முற்பட்டவனை "அதெல்லாம் வேணாம். வா இப்படி உட்காரு " என்று
அவர்கள் சொன்ன உடனேயே ஊகித்து அறிந்து கொண்டான் அவர்கள் வந்த காரணத்தை. மூன்று நாளைக்கு முந்தி புதன் கிழமை இரவு நல்ல மழை. ஒழுகும் கூரையினுள் அம்மா, பாட்டி அப்பா இவன்
எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் அடைந்து கிடந்தார்கள். மழை ஒழுகும் இடத்தில் வைக்கப் பட்ட பாத்திரத்தில் ஒழுங்க்கில்லாத இசையாக ட்டொப் ட்பொப் என்று மழை நீர் சொட்டிக்
கொண்டிருந்தது. மழையோடு சேர்ந்து காற்றும் வெளுத்து வாங்கியது. கோவிந்தராசு ஒரு கிழிந்த போர்வையை போர்த்திக் கொண்டு வீட்டின் வாசப்படி ஓரமாய் உட்கார்ந்து வெளியில் வேடிக்கை
பார்த்து கொண்டு இருந்தான். காட்டுத் தனமாய் சோ என்று பெய்து கொண்டிருந்தது மழை. இதுவரையில் பெய்தது ஒரு உழவு மழையா அர உழவு மழையா என்று கண்டறியும் பொருட்டு உரல் இருந்த
திசையையே பார்த்து கொண்டிருந்தான். மழை நேரம் என்பதால் அந்த ஊரில் கரண்டு இல்லை. ஊரே இருண்டு கிடந்தது. இவன் நேரம் என்று தான் சொல்ல வேண்டும். வானில் வெட்டி மறைந்த ஒரு
மின்னல் உரலையும் அதில் நிரம்பி வழிந்த தண்ணீரையும் காட்டி மறைந்தது. அதைப் பார்த்த கணத்தில் இவனுக்குள் ஆனந்தம் அலையடிக்கத் தொடங்கியது. மேல் கூரையில் கூடி கட்டி குடி
இருந்த குருவி சின்னதாய் க்கீச் என சப்தமிட்டு அடங்கியது. ஒரு அரை மணிப் பொழுதுக்கு விடாமல், ஓட்டைப் பானை போல கொட்டித் தீர்த்த மழை, ஒரு வழியாக மெல்ல ஓய்ந்தது. சற்று
நேரத்தில் கரண்டும் வந்தது. அதுவரையில் இருண்டு கிடந்த வீடு குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சதில் தங்க முலாம் பூசியதைப் போல பளிச்சிட்டது. ரொம்பவுமே சிறிய பரப்புடைய வீடு.
ஒருவர் தாராளமாய் புழங்குவதே பெரும்பாடு. அதில் எப்படி நாலு பேர் குடித்தனம் செய்கிறார்களோ.! அங்கங்கு வீட்டின் தரை வேறு பெயர்ந்து கிடந்தது. சுவற்று சுண்ணாம்புகள் எல்லாம்
பத்தை பத்தையாக உதிர்த்து கிடந்தது. வீட்டின் தெற்கு மூலையில் சுண்ணாம்பும் நீலமும் கலந்தடிக்கப்பட்ட குதிர் கோவிந்தராசு வின் செத்துப் போன மாரியப்பன் தாத்தா போல விறைப்பாக
நின்று கொண்டிருந்தது. கூரையின் மூங்கிலிடையில் கொத்து கொத்தாய் காகிதங்கள் சொருகப்பட்டு இருந்தன. அவை எல்லாம் அவர்களின் சொத்து பத்திரமாகவா இருந்து விட முடியும்.? எல்லாம்
வெத்துக் காகிதங்கள் தான். "மல தான் ஓஞ்சு கரண்டும் வந்திடுச்சு இல்ல. இப்போ வாச்சும் காபி வச்சு குடு" - அப்பா. கூரையில் சொருகப்பட்டிருந்த காகிதங்களை உருவி
அடுப்பில் போட்டு பற்ற வைத்து, ஒரு நூறு ஒடுக்கம் கண்டிருந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, பார்த்தால் வீட்டில் தூளும் இல்லை சர்க்கரையும் இல்லை.
அம்மா அப்பாவிடம் சொன்னாள். " காசு இருந்தா பையன் கிட்ட குடுத்து வுடு. தூளும் சர்க்கரையும் வாங்கி கிட்டு வரட்டும்" " என் கிட்ட என்ன காசு இருக்கு.? நானே
வெத்தல வாங்க கூட காசு இல்லாம இருக்குறேன்" - அப்பா. "ஏன் உன்கிட்ட இல்லயா.. சம்பாதிக்கற காசை எல்லாம் எங்க தான் போடுவ.. சீட்டு கட்டுறியா.. ஒன்னு கட்டுறியா..
வூட்டுல சாத்துக்கு சோத்துக்கு கூட வாங்கி போட முடியாதா உன்னால? இன்னும் நாளு நாலு தான் இருக்கு இருவதனாயிரம் ரொக்கமா கட்டனும் சீட்டுக்கு. " என்று அப்பா தன்பாட்டுக்கு
புலம்பத் தொடங்கி விட்டார். இனி நிச்சயம் சண்டை வெடிக்கும் என்று கோவிந்தராசு க்கு நிச்சயப்பட்டு விடவே வீட்டை விட்டு எழுந்து வெளியில் போகப் பார்த்தான். " மழை.. சொளோனு
பேயுது எங்க டா போற" என்று பாட்டி கேட்க, " எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தா " என்பது போல் அப்பா அவனையும் சேர்த்து வையத் தொடங்கி விட்டார். அவன்
எத்தனையோ தடவை சொல்லி இருக்கிறான். பணப் பிரச்சினைய மனப் பிரச்சனையா ஆக்காதப்பா.. அப்பறம் மனசுங் கெட்டு குடும்பமும் கெட்டுப் போய்டும். பணத்த சேர்த்துக்கலாம் குடும்பம்
போய்ட்டா ஒன்னும் பண்ண முடியாது" என. ஆனால் அப்பா எப்போதும் அப்படித் தான். பணப் போதைமை ஒரு பக்கம் என்றால் அதை வைத்துக் கொண்டு இவர் செய்கிற பிரச்சனை பெரும்பிரச்சனை.
அப்பா வீட்டில் இருக்கிற அத்தனை பேரையும் ஏசத் தொடங்கி விட்டார். ஏதோ பேச வாயெடுத்த கோவிந்த ராசுவை அமைதியாக இருக்கத் தான் சொன்னாள் அம்மா. ஆனால் " என்ன டி ங்கொப்பனோலி
ஓலு ஓலு னு கிட்டு இருக்க" என தகாத வார்த்தைகளால் தாக்கத் தொடங்கி விட்டார். " எங்க கொண்டு போயி போடறியோ திருட்டுக்கூதி, வேலைக்குத் தா போறானு பேரு. ஆனா ஒரு ரூவா
இல்ல ங்கறா மூளி." என அப்பா அம்மாவை திட்டத் தொடங்கி அம்மா வீட்டாரையும் சேர்த்து திட்டத் தொடங்கி விட்டார். கெட்ட வார்த்தையில் பேசினதும் கோவிந்த ராசுக்கு கோபம்
தலைக்கேறி விட்டது. ஆமாம் தாய் தாக்கப் பட்டால் நாய் நரிக்கு கூட கோவம் வருமில்லையா? அவங்க போட்டாங்களா இவங்க போட்டாங்களா அது பண்ணாங்களா இது பண்ணாங்களா மூளியா அனுப்புனாங்க
உங்க அப்பமுட்டாரு என்ன பண்ணாங்க அது இது என்று சரமாரியாக எப்போதும் போல எங்கோ தொடங்கி எப்போ சென்று தகாத வார்த்தைகளை அள்ளி வீசினார். பொறுத்து பொறுத்து பார்த்த கோவிந்த ராசு
எருக்கம் பூவாய் வெடிக்கத் தொடங்கி விட்டான். "பொண்டாட்டி கட்டி, சம்பாரிச்சு குடும்பம் நடத்த துப்பு இல்லான.. உனக்கு என்ன இதுக்கு பொண்டாட்டி புள்ளைங்க.. அன்னாடம்
வேலைக்கு போய்ட்டு வந்து வூட்டுல சாறு சோறு வடிச்சு கொட்டி.. உனக்கு சட்டித் துணியல இருந்து தொவைச்சு போடுறது போதாதா.. எப்போ பாரு அது பண்ணாங்களா இது பண்ணாங்களானா.. ஆதி
புரணத்தையே பாடுறது..ஆமா பணம் பணம் ங்கிறயே.. வூட்டுல பண்ற வேலைய எல்லாம் உங்கொப்பனா கணக்கெடுப்பான்.. இதுக்கு ஆளு வச்சாலே.. நீ மாசம் பாத்தாயிரம் கூலி குடுக்கனும்.. ஆனா
ஊனா.. மூளி கீலி னு.. இன்னொரு வாட்டி கெட்ட வார்த்தை வந்துச்சுனா.. அப்பன்னு கூட பார்க்க மாட்டேன் அடிச்சு... " என்று முடிப்பதற்குள் வாசப்படியோரம் நின்று
கொண்டிருந்தவனுக்கு பளார் என்று ஒரு அறை விழுந்தது. எதிர்பாராத இந்த தாக்குதலில் அதிர்ந்து போயிருந்தவனை " எம் புருசன் என்ன என்னமோ கேட்கறான் உனக்கு என்ன டா..
சம்பாரிச்சு போட்டா நாயி பிய் யி திங்கற மாதிரி தின்னுபுட்டு பேச்ச பாரு.. உன்னால தான்டா இத்தன பிரச்சினையும்.. ஆளு தான் வளர்ந்து நிக்குறியே...ஒத்த ரூவா ய்க்கு வழி
இருக்கா.. உன்ன பெத்த நேரம் கல்ல பெத்திருந்தா கூட பீய் தொடைக்கறதுக்காச்சும் ஆயிருக்கும்.. " என்று வார்த்தைகளாலும் கூறு போடாத் தொடங்கி னாள் கோவிந்தராசு வின் அம்மா
செல்வி. இது போதாதென "ஏன்டா தேவ்டியா பையா நான் துப்புக் கெட்டு பொழைக்கறனாடா. உன் நாக்கு அழுவி போய்டும் டா. அடிச்சி புடுவானாம் ல்ல அடிச்சி. நாய உழைச்சு நரியா
ஊளையிட்டு படிக்க வச்சதுக்கு இதுவும் கேட்ப இன்னமும் கேட்ப" என்று அப்பாவும் எப்போதும் எதிர்த்து கூட பேசாத கோவிந்தராசு இப்படியான வார்த்தைகளைக் கேட்டு விட்ட
ஆத்திரத்தில் ஆற்றாமையில் கெட்ட கெட்ட வார்த்தைகளாக கொட்டத் தொடங்கி விட்டார். " ஏன்டா.. எம்பாட்டையே தின்னு புட்டு என்னையே பேசுறியா டா.. உனுக்குலாம் வெக்கமானம் சூடு
சொரண இல்ல.. நான் லாம் யாராவது சுருக்கு னு ஒரு சொல்லு சொன்னா அத்தோட செத்து கூட போய்டுவேன்.. அடுத்து அந்த இடத்துல இருக்க மாட்டேன்..நீ எனுக்கு தான் பொறந்தியாடா.. ஏன்டா..
நான் படுற பாட்டுல உசரு வாழ்ந்து கிட்டு.. என்னைய இப்படிலாம் கேட்க சொல்லுதாடா உனக்கு.. ஏன்டா தேவ்டியா பையா" என்று அடிப்பட்ட புலி போல உறுமிக் கொண்டே இருந்தார். ஒரு
சொல் ஒரு மனிதனை எந்த அளவு பாதித்து விடுகிறது. ஆத்திரத்தில் மனிதன் எப்படி எல்லாம் மாறி விடுகிறான். அந்த இரவு, அந்த வீட்டில் யாருமே தூங்க வில்லை. எல்லாம் வார்த்தைகளின்
குடைச்சல். பொழுது மெல்ல விடியத் தொடங்கியதுமே அப்பா வீட்டை விட்டு கிளம்பி விட்டார். வெளிச் சாலையின் கீழ் தொங்கல் விழுந்த கயித்து கட்டிலில் அழுதழுது கண்கள் வீங்கி
தூங்கிக் கொண்டிருந்த கோவிந்த ராசு வை "போயி பாரு டா.. உங்கப்பன் எங்கயோ போறான்.. எதாவது பண்ணிக்க போறான்.. போடா.. வாழு வூட்டுல இப்படி போரு கட்டி யாரக் கொல்லப்
போறிங்களோ தெரியலயே போடா போயி கூட்டியாடா.. நீ கூப்டா வந்துடுவான் போ" என்று எழுப்பினாள் பாட்டி செம்பி. முதலி்ல் வார்த்தைகளின் வடு ஆறாத கோபத்தில் "செத்த
சாவுட்டும் வுடு.. எப்போ பாரு பணம் பணம் னு வாழுற வூட்டுல வற நாயாட்டம் கத்தி கிட்டு... உனுக்கு பையன் வேணும்னா நீ போ.. நான் தேவ்டியா பையானாச்சே..எனக்கு அப்பன் னு யாருமில்ல
" என்று பேசினாலும்.. கொஞ்ச நேரம் கழித்து எழுந்து போயி அங்கும் இங்குமாக தேடிப் பார்த்தான். என்ன செய்தாலும் அன்புக்கு தான் சாவில்லையே. ஆனால் எங்கு தேடிப் பார்த்தும்
எங்கும் காணவில்லை. பையன் காணாத துக்கத்தில் "பெரியதாயி.. பெரியாண்டிச்சி.. பொடவாகரி.. உனக்கு நவூண்டு கூட எரக்கமில்லியா... நா யாருக்கு என்ன பாவம் பண்னேன்..
என்னூட்டுக்கு மட்டும் யேயிப்பிடி.." என்று கிழட்டு வார்த்தைகளால் இல்லாத தெய்வங்களை எல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள் செம்பி கிழவி. அன்று மதியனாமே அக்கறையில்
இருந்து போன் வந்தது. அப்பா அக்கறையில் இருக்கும் அவருடைய அக்கா வீட்டிற்கு - கோவிந்தராசு வின் அத்தை வீட்டிற்கு - போய் விட்டாராம். அன்று சாயந்தரத்திற்குள்ளே " அப்பன
வூட்ட வூட்டு அடிச்சு தொரத்திட்னானாம் அப்பூட்டு பையன்" னு ஊருக்குள்ள பேச்சா போச்சு. இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கத் தான் இப்போது இவர்கள் வந்திருக்கிறார்கள்.
கோவிந்த ராசு ஏதும் பேசாமல் அவர்களுக்கு ஏதிரே மர முக்காலியில் உட்கார்ந்தான். "ஏன்டா என்ன பிரச்சினை.. வூட்ல.. உங்கொப்பன் எதுக்கு அங்க போனான்.. எப்பவும் பொறுமையா தான
இருப்ப.. ரெண்டு பேரும் வூட்ல இருந்தா இப்படி தான்.. கம்முனு நீ வூட்ட வுட்டு கெளம்பு.. அவங்க என்னமோ பண்ணட்டும். நீ இருந்தா.. அவன் ஒன்னு சொல்ல நீ ஒன்னு சொல்ல சண்ட தான்
வரும்" என்று பெரியப்பா அவர் பாட்டுக்கு அவர் கேட்டறிந்த விசயங்களை வைத்து நியாயம் சொல்லத் தொடங்கி விட்டார். கோவிந்தராசு க்கு தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல முடியாத
ஆற்றாமையில் அழுகை தான் வந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டே " சேரி.. ப்பா.. நான் கெளம்பிடுறேன்.. " என்று சொல்லி விட்டு, எழுந்து வீட்டிற்குள் நுழைய முற்பட்டான்.
" எதுக்கு அழுவாச்சி.. வெளில போயி எதாவது வேல வெட்டி பண்ணி.. நாலு காசு சம்பாதிக்க பாரு.. நாயாட்டம் பாடு பட்டு படிக்க வச்சவங்க.. ஆத்திரத்துல எதாவது சொல்லத் தான்
செய்வாங்க.. அதுக்கு சரி க்கு சரியா பேசலாமா" என்று மாமா ஒரு பக்கம் பேசத் தொடங்கி விட்டார். ___________ ஒரு வழியாக சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு
பெரியப்பாவும் மாமாவும் புறப்பட்டுப் போன பிறகு அழுத தேம்பல் நிற்க தண்ணீர் குடிக்க வீட்டுக்குள் போனான் கோவிந்தராசு. பானையில் இருந்து ஒரு சொம்பு தண்ணியை முகர்ந்து, குடிக்க
அன்னாந்தான். மேலே கருங்காலி விட்டத்தில் அம்மா வின் சேலை ஒரு கேள்வி போல தொங்கி கொண்டிருந்தது. அப்பா சொன்ன வார்த்தைகள், விடாமல் அவன் காதுக்குள் விடை சொல்லிக்
கொண்டிருந்தன. முகர்ந்த தண்ணீரை குடித்த கையோடு தேவ்டியா பையானாக வாழப் பிடிக்காமல் ஊசலாடிக் கொண்டிருந்த கேள்விக் குறிக்குள் தலை மாட்டிக் கொண்டான் கோவிந்தராசு. ஆனால்,
அப்பாவின் வார்த்தைகள் அப்போதும் ஒலித்து கொண்டே தான் இருந்தன.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...