Philosophy
August 29, 2020
தத்துவம்
SHARE

அன்பின் பித்தனே,
நான் நலம்.உன் சகிக்களோடு நீயும் நலம் என்பதை நானறிவேன். ஒரு தீராப் பெருங்காதலை, வற்றாத அன்பின் சுனையை யார் யாரிடத்தோ தேடி அலைந்து தொய்ந்து ஓய்ந்து இறுதியில் தனிமையை நாடுகிற போதும் கூட, நீ என்னை
நாடுவதில்லையே ஏன்? Be single. Be happy? நல்லது. உனக்கே உனக்கென்று தான், நான் உடல் வளர்த்து உயிர் காத்து உள்ளத்து மரத்தில் காதல் கனி வளர்த்து கொண்டிருக்கிறேன். கனி என்றவுடன். இதழோரம் நகை
விரிந்திருக்கும். நானறிவேன். ஆமாம் கனி தான், கனிந்து தான் காத்திருக்கிறேன். ஆனால் என்னை மரமென்று சொன்னது உனக்கு புரிந்திருக்காதே.? தெரியும். உன்னிடம் கெஞ்சி கெஞ்சி நிராகரிப்பின் வலியால் மரம்
போல மரத்து போய்விட்டதென் மனம்.
நானெழுதிய கவிதைகளை எல்லாம் நீயே உனக்கு எழுதிக் கொண்டதென்று சொல்கிறாயேமே? ஆமாம் நீ தான் சொல்கிறாய் என்றால் கேட்கிற வர்களுக்கு கொஞ்சம் கூட கவியாழம் தெரியாது? பெண்ணெழுத்து தெரியாது? ஆமாம்
எழுத்துக்கும் அன்புக்கும் ஏது பால் பேதம்.
"உனக்காக
பூவை நான் குழலாகி நிற்கிறேன்
ஊது குழல் நானாகி
ஊதும் இதழ் நீயாக காத்திருக்கிறேன்"
"கரம் தொட்டு என்னில் காதல் சுரம் மீட்டு காதலா
வரம் கேட்டு வந்த என்னை விரட்டித் துரத்தாதே..
மரம் தானோ நீ..உன்னுள் மனமில்லையோ..
தனமிரண்டில் உன்னை தானே
தாங்கி நிற்கிறேன்
வனத்தில் பூத்த மலரென அழகை ஏந்தி நிற்கிறேன்.. "
" வழிப்போக்கியே..
என் வலி நீக்கியே
ஏனடா...
கை விட்டுப் போனவளை எண்ணி
கவலையுற்று கிடக்கிறாய்
என் செழித்த மார்பிரண்டும்
உன் நினைவின் சேகரிப்பில் வளர்ந்தவை.."
" அணியாடும் கனியிளம் முலையாடும்
அதை மூடித் துணி யாடும்
எந்தன் நெஞ்சிலுன்னை
கனிவோடு எண்ணி உன்மேல் காதலுற்றேன்"
இந்த, இந்த... அழுது கொண்டு தான் எழுதுகிறேன். வாயெல்லாம் குழறுகுகிறது. கையெல்லாம் நடுங்குகிறது. இந்த வரிகளில் இருக்கிற தவிப்பு உனக்கு தான் புரியவில்லை. வாசித்த அவர்களுக்குமா புரியவில்லை? எப்படி
நம்பினார்கள் நீ எழுதியதென்று. என் காதல் என்ன சாபம் செய்ததுவோ? யாருக்குமே புரியாதா என் காதலும் தவிப்பும். நின் நினைவின் விரி நெடுங் குடையின் கீழ் தான் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆமாம் எழுத்தில் கூட அன்பு செய்யுங்கள் அன்பு செய்யுங்கள் என்று அன்பை வாரி வாரி இரைக்கும் நீ, என் மேல் தூரலாகக் கூட பொழிய மாட்டேன் என்பது சரி தானா? இதை கூட வாசித்து விட்டு நீயெழுதியென்று
சொன்னாலும் சொல்வாய். அவர்களும் நம்பினாலும் நம்புவார்கள். நம்பட்டும். உன்னிடத்து காதலை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருக்கும் என்னைப் போல அவர்களும் ஏமாந்து போகட்டும். அஜி, ஐ லவ் யூ அஜி. உனக்கு
ஒன்று தெரியுமா? ஐ லவ் யூ சொன்னால் லவ் யூ டூ என்று ஏன் பதில் மொழிச் சொல்கிறார்கள் என்று தெரியுமா? Too means, excessively. ஆமாம், அஜி எதைத் தந்தாலும் திருப்பித் தரும் போது அதிகமாய் தர வேண்டும்.
அதிலும் அன்பில் மிக அதிகப்படியாக தர வேண்டும். அதற்காகத் தான் அந்த டூ. நீ அதிகப்படியாக எல்லாம் தர வேண்டாம். கொஞ்சத் திலும் கொஞ்சமாய் தா. போதும். எனக்கு தெரியும் நான் ரொம்ப பிற்போக்குத்தனமான
பெண்ணாகத் தான் இருக்கிறேன் என்பது. நீ மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. ஒன்றை மட்டிலும் நினைவில் நீ எவ்வளவுக்கெவ்வளவு நிராகரித்தாலும் அத்தனையையும் கடந்து நான் உன்னை அன்பு செய்து கொண்டு தான்
இருப்பேன்.
என்றைக்குமான காதலுடன்
உன்
பாரேன் நீ என்னை வேண்டாவே வேண்டாம் என்று சொல்கிற போது கூற என்னை உன் என்ற அடை மொழியோடு தான் எழுதத் தோன்றுகிறது. I need you aji.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...