Back

Philosophy

August 29, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

உன் அன்புக்குரிய சகி எழுதிக் கொள்வது

உன் இரண்டு தற்கொலைக் கடிதத்தையும் இன்று தான் படித்தேன் இதைப் பற்றி எழுதும் முன் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு உன்னைப் போல் தமிழ் அவ்வளவு வராது. அதுமட்டும் இல்லாமல் உனக்கு
பிடிக்கும் என்பதற்காகத் தான் ரொம்ப சிரமப்பட்டு இப்படி பிள்ளைத் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலும், அது ஏதோ சொல்வார்களே க், த் போடாம எழுதினா ஏதோ பிழை னு.. ம் ஒற்றுப் பிழை. அதுலாம் நிறையவே
இருக்கும் னு நெனைக்கிறேன். அப்படி இருந்தா மன்னிச்சுகோ. அச்சச்சோ. மன்னிப்பு தமிழ் இல்லை தான? நீ சொல்லிருக்க. ஆமா. ஆனா மறந்துட்டேன். அப்பறம், எங்கேனும் கவிதையா எதாவது எழுதினேன் அப்படினா அது உன்
வரிகள போல தான் இருக்கும். எல்லாம உன் writings oda impact தான். மாமா, love you மாமா. இங்கிலீஷ் வருதேனு கோவப்படாத. இது தான் எனக்கு convenient ah இருக்கு. தங்கம் ல Read பண்ணு. Miss you lot mama.
மனசுலாம் ஏதோ கனமா இருக்கு மாமா. உனக்கு இப்படி சொன்னால புத்தி தப்பு தப்பா தான போகும். பொறுக்கி. Love you டா. Come, let us have a tight hug. அந்த லெட்டர படிச்ச உடனே அழுதிட்டேன் டா பொறுக்கி பையா.
கருவாயா. உனக்கு எழுத வேற விசயமே இல்லையா டா. வா உள்ளங்கை தரேன் அழு. அழுத்திட்டு அப்படியே அழுந்த அழுந்த டைட்டா இறுக்கமா கட்டிகோ. இனி அப்படி எழுதாத. உனக்கு நான் இருக்கேன். சரியா.?!
ஆமா, டேய் Fraudu...என்ன நீ.. புக் ல என்னென்னமோ மாதிரி லாம் எழுதி வச்சிருகக்க.. யாரு டா அவளுகலாம்.? ஆட்டுக் கல் இடுப்பாம் மாட்டுத் திமில் மார் பாம். இருளடர் வனமாம்.. பொறுக்கி.பொறுக்கி. இன்னும்
நிறைய இருக்கு. எல்லாம் eighteen plus. ஆனா எனக்கு னு எழுதினது எல்லாம் அன்பு அழுகை னு மட்டும் தான். என்னைய பத்தி அழகா இருக்க னு எதாவது ஒரு லைன் ஆ வது எழுதி இருக்கியாடா fraud.. இன்னும் முழுசா
படிக்கல.. படிச்சிட்டு..உன்ன கொன்னுடுறேன்.

மாமா.. உனக்காக யோசிச்சு யோசிச்சு பொறுமையா ஒவ்வொரு சொல்லாக் கோர்த்து ஒரு கவிதை எழுதி இருக்கேன்.

மேலே உபயோகிச்ச ஆங்கில வார்த்தைகளுக்கான பிரயாச்சித்தமா நெனைச்சிகோ சரியா.

பெருசா எதும் எதிர்பார்த்து படிக்காத உனக்கு பிடிச்சதுகள போல குட்டியா தான் இருக்கும்.

அன்பின் கடல் ஆனவனே.
உன்னை (இங்க க் ன்னா வருமா? ) கேட்டு கேட்டு
என் நெஞ்சம் விம்மியழுகிறது தினம்.
இருந்தும் கோபத்தின் இறுமாப்பு எனக்கு.
மாமா
என் நினைவில் அழுதிருந்தால்
அந்த கண்களுக்கு முத்தங்கள்
என்னை நினைத்திருந்தால்
அந்த நெஞ்சுக்கு நிறைய முத்தங்கள்.
என் கை கேட்ட அந்த
விரல்களுக்கு முத்தங்கள்.
(ஆனா பொறுக்கி எவ எவளையோ பத்தி எழுதினதுக்காக அந்த விரல்கள கடிச்சு வைக்கறேன் இரு)
இனி உன்னை பிரியனடா என் பிரியனே.
வா
அழுது நனைந்த உன்னை
முத்தங்களால் நனைக்கிறேன்.
என் நினைவுகளால் நிறைந்திருந்ந உன்னை
என் இளமையாலும் அன்பாலும் நிரப்புகிறேன் வா.

Copy கீபி னு கவிதைய பத்தி எதாவது சொல்லாத மாமா. உன்னோட imapct தெரியுது எனக்கு என்ன பண்ண? அந்த அளவு எனக்குள்ள நிறைஞ்சிட்ட நீ. I love you daaa frauduu பொறுக்கி.

  • இனி உன்னை பிரிய மாட்டேன் என்ற உறுதிமொழியோடு

உன் சகி

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...