Back

Philosophy

August 15, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

"2000 வருஷத்து" சிறுகதை - பிரபஞ்சன்

"யார் விரும்புகிறார்களோ, இல்லையோ, எருக்கஞ்செடிகள் பூக்களைப் புஷ்பிக்கத் தவறுவதில்லை . மணமில்லாத பூக்கள் ஆகவே மனிதர்கள் அவைகளை மதிப்பதில்லை. குழந்தைகளுக்கு இந்தப் பேதம் எல்லாம்
தெரிவதில்லை. எருக்கம் பூக்களை அழுத்தி அவை டப்பென்று வெடிக்கும் சப்தத்தைக் கேட்டு அவை குதூகலம் கொள்ளவே செய்யும். ஒரு காலத்தில் குட்டை ஒன்று அங்கு இருந்திருக்க வேண்டும். பூமி அம்மைத் தழும்பு
மாதிரி பள்ளம் கொண்டிருந்தது. கரையில் திடீரென்று ஏழெட்டுப் பனை மரங்கள் வளர்ந்து நின்றன. எப்போதும் குடித்துவிட்டுச் சப்தம் செய்கிற குடிகாரனைப் போல் இவை ஒலித்துக் கொண்டிருக்கும் கொஞ்ச தூரத்தில்,
விழுதுகள் விட்டு வளர்ந்திருந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்தச் செடி மர வகைகள் எவையும் எந்த மனிதராலும் நீருற்றிப் பாத்தி கட்டி வளர்க்கப்பட்டவை அல்ல. இயற்கையாய் எப்படியோ பிறந்த தான் தோன்றிகள் -
காதலைப் போல பிறந்தவை. வளர்ந்து, பிழைக்கப் போராடுகின்றன காதலைப் போலவே."

இப்படியாக காதலின் தான் தோன்றி தனத்தை விவரித்து கொண்டு போகிற பிரபஞ்சன், மகளின் காதல் அப்பனுக்கு தெரிய வந்து அவரின் மனத்தின் ஆக்ரோச நிலைப்பற்றியும் காலங் காலமாய் இருந்து வருகிற பெண்களின் நிலைப்
பற்றியும் இப்படியாக எழுதிக் கொண்டு போகிறார்..

" சக்குபாயின் அப்பா, அன்று வழக்கத்துக்கு மாறாக மிக அதிகமாகக் குடித்தார். கடைசியாகத் தன் கையிலிருந்த தம்ளரைப் போட்டு உடைத்தார். அவருடைய ரெண்டாயிரம் வருஷத்து ரத்தம் கொதித்தது, தன் மூத்த
மகள் தனக்கு ஏற்படுத்தி வைத்து விட்டுப் போன அவ மானம், அதை மேலும் கொதிக்க வைத்தது. ஒரு பெண், ஒரு ஆணுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் என்ன அவமானம் என்று யாரும் அவரைக் கேட்டுவிட முடியாது. இந்த
மண்ணில் பிறக்க நேர்கிற ஒவ்வொரு பெண்ணும் கண்ணுக்குத் தெரியாத பூட்டுச் சாவியுடன்தான் பிறக்க வேண்டும். அந்தப் பூட்டு சாவியை கல்யாணம் ஆகும் வரை பெற்றோர்களிடம் அவள் கொடுத்து வைக்க வேண்டும்.
அப்பாவும் அம்மாவும் பூட்டைப் போட்டு சாவியை கையில் வைத்துக் கொண்டு பெண்ணின் கற்புக்குக் காவல் இருப்பார்கள். கல்யாணத்துக்குப் பிறகு, பெற்றோர்கள் அந்தச் சாவியைக் கணவனிடம் ஒப்படைத்து விட்டு
'எப்படி என்று ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். அப்புறம் அவள் கற்புக்குக் கணவனே பொறுப்பு. சாவி, அவன் கையில் அப்புறம்."

இந்தப் பத்தியில் ரெண்டாயிர ஆண்டுகள பெண்ணடிமைத் தனத்தின் கேவலத்தைச் எள்ளி நகையாடுகிறார். பெற்றவர்களும் கணவன் மாரும் பெண்ணின் செலுத்துகிற ஆதிக்கத்தின் மீது போகிற போக்கில் சாட்டை சுழற்றி
போகிறார். அன்றிலிருந்து இன்று வரை பெண் மற்றும் எளியவர்களின் மீதான ஆதிக்கமும் வன்முறையும் மாறவே இல்லை. என்ன தான் தொழில் நுட்ப ரீதியாக வளர்ந்து வந்தாலும் கருத்தியல் ரீதியாக இன்னும் மாட்டு
மூளைகளாகவே இருக்கிறோம். கோவணத்தில் இருந்து ஜட்டிக்கு மாறியது விட்ட பின்னும் குஞ்சி முடியில நம்மாளுக ஜாடை பின்னிட்டு தான் இருக்கானுங்க. மசுர மழிச்சுக்கனும் ன்ற புத்தி வரவே இல்லை. என்று
பகுத்தறிவு வளர்ந்து மனிதமும் அன்பும் ஓங்கி உயர்ந்து நிற்கிறதோ அன்று தான் மனிதன் குலத்துக்கு விடிவு.

நேரமிருந்தால் கதையை வாசித்து விட்டு வாருங்கள் உரையாடுவோம்.

மேலும் பெண்ணடிமைத்தனமும் சாதிய வன்முறைகளும் ஒழியும் காலத்தில் தான் இந்திய முழு சுதந்திர நாடாகும். அது வரையிலும் இந்திய என்பது அடிமை நாடே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...