Back

Philosophy

April 26, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

#யார்_அவள்? #யார்_அவன்?

இவை எல்லாம் கதையா, கற்பனையா, நடந்து முடிந்த ஒன்றா, நடக்கப் போகிற ஒன்றா, இல்லை நடந்து கொண்டிருக்கிற ஒன்றா எதுவும் தெரியவில்லை. மனத்துள் ஒரு நிழல் பிம்பம் போல ஒன்றோடொன்று தொடர்பில்லாத இந்த சின்ன
சின்ன நிகழ் கூத்துகள் திரும்ப திரும்ப வந்து வந்து போகின்றன.

அவள் :-
நல்ல மழை நாள்.இரவு. பேருந்தில் பயணப்பட்டு கொண்டிருக்கிறேன். அவளும். ஒரே இருக்கை. பக்கம் பக்கமாய். தொடையுரசும் நெருக்கம். ஒரு மின்விசிறியை போல அவள் கரு விழி என்னை பார்ப்பதும் ஜன்னல் வழியாக
வெளியே பார்ப்பதுமாக சுழன்று கொண்டே இருந்தது. நெற்றி நடு மத்தியில் மச்சத்தை போல கரு நிற ஸ்டிக்கர் பொட்டு. ஜன்னல் ஓரம் என்பதால், சாரல் மழை அவள் முகத்தில் படிந்து அவளை பனியில் நனைந்த பூவென செய்து
கொண்டிருந்தது. முடி கலைந்து காற்றில் அசைந்தது. ஒரு சொற், பொருள் தெளிவில்லாத கவிதையை போல. அவள் கருவிழியில் இரவின் ஏகாந்தம் மினுக்கி கொண்டிருந்தது. காற்றின் மழை ஈரம் அவள் உதட்டில் படிந்து என்னை
வா வென்றது. ஜன்னல் வழியாக உள் நுழையும் வாகன மஞ்சளொளிகள் அவள் முகத்தின் ஒரு பாதியில் பட்டு அவளை பிறை நிலவாய் சிருஷ்டித்தன. காலத்தை நிறுத்தி வைத்து அவளை என் காலா காலத்திற்கும் அப்படியே பார்த்து
கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. என் உதடுகள் என்னையறியாமல் ஏதோ உளறிக் கொண்டிருந்தன. "நீ.. நீயே என் ஜென்ம பலன். உன்னை சேர்வதே என் ஜென்ம லட்சியம். என்னை திரும்பி பார். நான் சொல்வதை
கேள்.......". ஒரு மந்திரம் போல தினமும் இதை அவள் காதருகில் ஓதிக் கொண்டே இருக்கிறேன். அவளுக்கு கேட்டதா, கேட்குதா இல்லையா? தெரியவில்லை. கடவுள் சந்நிதியில் தன் கஷ்டம் சொல்லி புலம்பும் பக்தன்
போல அவளை பார்க்க நேர்கிற போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
ப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போது அன்றோரு நாள் தாடி அடர்ந்த என் கன்னத்தில் அழுந்த முத்தி விட்டாள். எனக்கு மூச்சே நின்று விட்டது.
முத்தி விட்டு என் உதட்டின் கற்பு உன்னிடத்தில் பறியோய் விட்டதே, என்னை திருமணம் செய்து கொள்ளென அழுகிறாள. உன் கவிதையின் ஆதாரப் பொருள் நானாக மட்டும் இருக்க வேண்டுமென்கிறாள்.
"இது என்ன என்னை கூட்டிலடைக்கும் முயற்சியா" என்று மந்திரமோதிக் கொண்டிருந்த உதடுகள், மயக்கத்திலிருந்து விடுபட்டதை போல அவளைக் கேள்வி கேட்டன.
"நீ.. நீயே என் ஜென்ம பலன். உன்னை சேர்வதே என் ஜென்ம லட்சியம். என்னை திரும்பி பார். நான் சொல்வதை கேள். என் பார்வையிலிருந்து அகலாதே. உன்னை தொழுது கொண்டே இருக்கிறேன். சாவு வந்தால்
இறக்கிறேன்." என்று நான் சொன்னதை சொல்லி ஒரு பெருமூச்சு விட்டாள். அவள் தனமிரண்டும் புடைத்தெழுந்தடங்கியது. எனக்குள் சின்ன சலனம். அவள் என் பதில் வர சின்னதாய் ஒரு செருமல் செய்தாள்.
"நீ என் மனக் கோவில் தெய்வம். காமம், காதல் போன்ற மனித உணர்ச்சிகளற்று உன்னை ஊழி நெடுங்காலம் வரை பூஜிக்க வேண்டும். நீயற்று போனாலும் நின்னை வணங்கி தொழுது கொண்டே இருக்க வேண்டும். கல்யணாம்
பண்ணிக் கொள் வதில் எனக்கு இஷ்டமில்லை. அதை பண்ணிக் கொண்டால் நீ நீயாகவும், நான் நானாகவும் இருக்க முடியாது. போ. நீ நீயாய் இரு.நான்... "
சொல்லி முடிப்பதற்குள் உதட்டோடு உதடு பொருத்தி முத்தி விட்டாள். முத்தினவள் நிற்கவில்லை. முத்து முத்தாய் கண்ணில் நீரொழுக திரும்பி எனக்கு எதிர் திசையில் வேகமாய் போகிறாள். நான் அப்படியே உறைந்து
நிற்கிறேன். என் தெய்வம் கண்ணில் தேய்ந்து புள்ளி ஆக ஆக , உள்ளத்தில் வளர்ந்து வளர்ந்து பேருவெய்திக் கொண்டிருக்கிறது.

அவன் :-

அவன் யாரென்று தெரியவில்லை. எனக்கு மிக நெருக்கமான தோற்றத்தில் இருக்கிறான். கண், காது, மூக்கு, வாய், உதடு, நிறம், உயரம் எல்லாம் என்னை போலவே. ஆனால் பேச்சு, நடத்தை, செய்கை மட்டும் எனக்கு எதிராக.
முற்றிலும் முரணாக இருக்கிறது. பிறந்ததிலிருந்தே மழித்திராத தாடி. கத்தரிக்கோல் படாத தலை மயிர். என்னை போன்ற ஆனால் கோரமான முகம். நான் இதுவரை கண்டிராத சாத்தனை போன்ற தோற்றம். ஆனால் செயல்கள் எல்லாம்
கடவுளை ஒத்திருந்தன. தினமும் நான் தூங்கி கொண்டிருக்கும் போதும், எதாவதொரு அழகான பெண்ணை பார்க்க நேர்கிற போதும், நான் ஆனந்த மயக்கத்தில் இருக்கிற போதும், அழுது கொண்டிருக்கிற, பிச்சை கேட்பவர்களை
இல்லையென்று சொல்லி கடந்து வரும் போதும் வருவான். பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல அவன் உதடுகள் ஓயவே ஓயாது. எல்லாம் மாயை என்பான். என் கடந்த கால குற்றங்களை எல்லாம் கத்தி கத்தி சொல்வான். இது
வரையில் நான் புத்தகத்தில் படித்த, காது பட கேட்ட எல்லா போதனைளையும் ஓதுவான். எரிச்சலாக இருக்கும். ஓங்கி அறையலாம் போல தோன்றும்.
"யார் நீ"
"யாரா இருந்தால் என்ன? நீ ஏன் அவளை பார்கிறாய்? பார்க்காதே. பார்த்தாலும் பேசாத.தொடராத.எல்லாம் மாயை டா. மாயை." இது எவளையேனும் ரசித்து கொண்டிருக்கும் போது.
"ஏன் இப்படி தூங்குற. எழு. இந்த இரவை பார். இந்த அமைதியின் பொருளுணர். செத்த பிறகு ஊழிப் பொழுதாய் உறங்கத் தானே போகிறாய். போதும் எழு. எழுடா சுடுகாட்டு சோம்பேறி. " இது உறங்கும் போது.

" அடேய் கோழையா நீ? ஏன் அழுகிறாய். நீ செத்த பிறகு உனக்கும் சேர்த்து இந்த ஊரே அழும். நீயும் எதற்கு அழுகிறாய். அழாதே. எனக்கு சிரிப்பாயிருக்கிறது. மூடா. உள்ளாடை களைந்த உறக்கம் போல வாழ்தல்
சுகமனாது. அழாமல் வாழு. " இது அழும் போது.
"தனக்கு பிஞ்சியதே தானமும் தர்மமும் என்பது பொய். அது எவனோ ஒரு முட்டாள் சொன்னது. உறுப்பு தானம், இரத்த தானமெல்லாம் செய்கிறார்களே அவர்களுக்கெல்லாம் மூன்று கண், மூன்று கிட்னி இரண்டு இதயம்,
நிறைய இரத்தம் இப்படியா இருக்கிறது? இல்லையே. தனக்கு மிஞ்சினது waste. அல்லது extra. அத தரது எப்படி தர்மம் ஆகும். தனக்கு அவசியமான, வேண்டப்படுற ஒன்ன தரனும். அதுக்கு பேரு தான் தர்மம். குடுத்துரு.
பஸ் க்கு காசு இல்ல னா என்ன நடந்து போ. நடக்க நடக்க தான் டா ஆயுள் கூடும். நடக்கின்ற தூரம் எவ்வளவோ அதுவே ஆயுளின் நீளம். குடு. நட. " இது யாரேனும் பிச்சை கேட்டு வரும் போது.
இப்படி ஒவ்வொரு முறையிம் அந்த சாத்தான் உருவான தெய்வம் வந்து எனக்கு ஞானம் சொல்லும். ஆனால் மனித புத்தி யும் வாழ்க்கையும் தான் மட்டத்திலும் மட்டமானதாயிற்றே. யார் சொல்லி திருந்தக் கூடும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...