Letter
February 9, 2019
தத்துவம்
SHARE

பிரிய உறவுகளுக்கு பிரிவின் வணக்கம், இது என் கடைசி எழுதுதல்.இன்றோடு வாழ்தலை முடித்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். இருப்பிலும் இறப்பிலும் ஏன் நினைவிலும் கூட பாரமாய்
இருந்து விடக் கூடாதென தான், என் பிறந்த நாளன்றே செத்து விடுவதென்று இருந்தேன். ஆனால் ஏதோ ஒன்று என்னை இத்தனை நாள் வாழச் செய்திருக்கிறது. நல்லது தான். ஏன் நான் சாகிறேன்.?
தெரியவில்லை.! இன்னதென்று என்னால் அடையாளம் கண்டு சொல்ல முடியவில்லை. வெறுமை. அழுதல் சிரித்தல் அற்ற வெறுமை. ஏன் இப்படி எல்லாம் என்று காரணத்தைத் தேடித் தேடி பார்க்கிறேன்
ஒன்றும் பிடிபடவில்லை. "செத்து போ!செத்து போ!" என்று மட்டும் ஏதோ ஒரு குரல் ஓயாமல் அசரீரியாக உள் மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறது. எழுதுவதற்கு கூட எதும் தோன்ற
வில்லை என்றால் பாருங்களேன். ஐய்யய்யோ தலையை எங்கேனும் மோதிக் கொள்ளலாம் போல் இருக்கிறது. வலிக்குமே. பொறுங்கள்.ம்ம் வந்து விட்டேன். என்னவோ தோன்றுகிறது. மூன்றாண்டு கால
காதல். எனக்காக அழுத முதல் மூனாவது மனுசி அவள். அம்மாவுக்கும் அக்கா வுக்கும் அடுத்து என்னை தங்கம் சொல்லி செல்லம் கொஞ்சியவள். என் ஸ்ரீ. எனக்கான ஸ்ரீ. 2016 ல் இதே மாதத்தில்
தான் பேசிக் கொண்டோம். காதலைச் சொல்லிக் கொண்டோம். அந்தத் தேதியும் அவள் பேரும் தான் என் பெரும்பாலானவைகளின் கடவுச் சொல். எனக்காக அவள் அழும் போது என்ன சொல்லி அழுதாள்
தெரியுமா "எனக்கு ஏதாவது னா கூட தாங்கிக்க முடியும் டா. உனக்கு எதுனா அத ஏத்துக்கற தாங்கிக்ற பக்குவமோ வலிவோ எனக்கு இல்ல. செத்துடுவேன் டா னு சொல்லி தேம்பி தேம்பி அழறா.
முதல் முதலா இதயப் பூர்வமா அன்பின் ருசியை அப்போது தான் அறிந்தேன். அவள் சொன்னது, சரி தான். நமக்கு எதாவதுனா தாங்கிக் கொள்ள முடியும். முடியாட்டியும் அது உடல் சார்ந்த
வேதனையா வலியா மட்டும் தான் இருக்கும். மன்னிக்கனும் ஒரு முறையான முறை ல எழுத முடியல எழுத்து மொழி, பேச்சு மொழி ரெண்டும் மாறி மாறி வருது. வார்த்தைகளும் சரியா பிடிபடல.
வாசிக்க சிரமமா இருந்தா வாசிக்க வேணாம். விட்ருங்க. ஆமா, அது உடல் சார்ந்த வலியா ரணமா மட்டும் தான் இருக்கும். ஆனா, நமக்கு பிடிச்சவங்களுக்கு ஏதாவது னா. அவ்வளவு தான். அது மன
ரணம். வேதனை. உடல் நோவுக்கு மருந்து இருக்கு. ஆனா மன நோவுக்கு? இல்ல. வலிய ஆத்தவும் தேத்தவும் முடியாத கொடுமை. அதுக்கு என்ன போல செத்துடலாம்.ஆமா, இத நீங்க வாசிச்சிட்டு
இருக்க இந்த நேரம் நான் உயிர விட்டிருப்பேன். தூக்குல தொங்கியோ, விசம் குடிச்சோ, மாடியில இருந்து குதிச்சோ செத்து போயிருப்பேன். சாவுறது ல கூட பாருங்களேன் எப்படி குழம்பி
கெடக்கேன் னு. கண்ணுக்குள்ள நீர் தேங்கி நிக்குது. அழ மாட்டேன். அழறதும் என்னைய போல தற்கொல பண்ணிக்றதும் முட்டாள் தனம். கோழையின் செயல். உடனே என்னைய கோழை னு கிண்டல்
பண்ணாதிங்க. மனசு செத்துபோச்சு. இதுக்கு மேல நான் எப்படி வாழ முடியும். என் உலகம் உயிர் என் சகலமுமா நினைச்ச, இருந்த அவ விட்டு போனதுக்கப்பறமும் இத்தனை நாள்
வாழ்ந்திருக்கேன்றதே என்னோட பெரிய சாதனை தான். இப்போ நான் சாகறது அவளோட இல்லாமைக்காக இல்ல. சத்யமா இல்ல. அவ மேல பழி யாரும் போட வேணாம். எனக்கு வாழப் பிடிக்கல அவ்வளவு தான்.
எப்படி உங்களுக்கு மனசு சரியில்லனா சாப்டமா இருப்பிங்களோ அப்படித் தான். வாழ்க்கை சரி இல்ல. என் புறமும் அகமும் சரியில்ல அவ்வளவு தான். ம்ம் இன்னும் எதுனா எழுதனும் போல
இருக்கே. என்ன எழுத. என் கவிதைகள புரட்டி பாருங்க. பெரும்பாலான கவிதைகள்ல அவ இருப்பா. முடிஞ்சா அடையாளம் கண்டுபிச்சு அவ கிட்ட என் சாவ தெரிவிச்சிடுங்க. இல்ல வேணாம். அழுவா.
பாவம். எனக்கு காதலிக்க கத்து தந்த காதல் தேவதை அவ. பிரிஞ்சு போனதுக்கப்பறமும் தனிமை, அன்பு அது இது னு இப்போ எழுதிட்டு இருக்கேனே இந்தச் சகலத்துக்குமான விரக்திய, ஞானத்த
தந்த போதி மரம் அவ. அடையாளம் கண்டுபிடிச்சிட்டிங்கனா love you Lott சொன்னேன் னு மட்டும் சொல்லிடுங்க. இன்னும் இன்னும் எழுதனும் போல இருக்கே. வாசிக்க சிரமம் இல்லனா வாசிங்க.
இந்தக் கடிதம் தான் என் ஆத்மாவோட கடைசி ஆசை. அதான் பொறுமையா எழுதிட்டு இல்ல எழுதல டைப் பண்ணிட்டு இருக்கேன். வாழ்க்கை உண்மையிலயே வரம். வாழ்தலும் தான். வாழுங்க. சந்தோசமா.
அன்போட வாழுங்க. அன்பானத தக்க வச்சிக்க கத்துகோங்க. இல்லாட்டி அதோட இல்லாமைய ஏத்துக்ற பக்குவத்த வளர்த்துகோங்க. தக்க வைக்றேன் ன்ற பேர்ல அதை சிறை பண்ணிட கூடாது. அதுக்கு பேரு
அன்பு இல்ல. ஒரு கிளிய கூண்டில அடைச்சு தன்னோட வச்சுக்றதுக்கும், எந்த ஒரு இதும் இல்லாம போகச் சொன்னாலும் அது போகமா உங்களைய வட்ட மிட்டு உங்க தோள் மேல அமர்றதுக்கும்
வித்தியாசம் இருக்கு. ஆமா நீங்க அன்பு செய்றவங்களுக்கு சகல சுதந்திரத்தையும் கொடுங்க. எதையும் எதிர்பார்க்காம, ஏன் அன்பையும் எதிர்பார்க்காம அன்பு செய்ங்க. உங்க அன்பு
பேரன்பா கிடைக்கும். அன்பே நித்யம். போதுமா. இல்லையே. எதோ மிஞ்சி இருக்கு. ம்ம்.. இவ்வளவு எழுதினவன் என்னைய பத்தி எதும் சொல்லயே.. என்ன சொல்றது.. என் வாழ்க்கை ரொம்ப
இலக்கியத்துவமானது. என் வாழ்க்கை பத்தி தெரிஞ்சிக்க னும் னா சிலப்பதிகாரம், மோகமுள், விஜயா மகா தேவி, சித்திரப் பாவை, வேங்கையின் மைந்தன் ஆகிய புத்தகங்களையும் ஒரு துளிக்
கடல் னு ஒரு குறும்படத்தையும்... ஐய்யய்யோ மறுபடியும் அந்த குரல் கேட்குது சாவு சாவு னு.. திட்டுது கடைசி ஆசை கடைசி ஆசை னு வாழ்தல நீட்டிக்க பாக்றியா னு கேள்வி கேட்குது.
போறேன். தயவு செய்து யாரும் அழுது தொலைத்து விடாதீர்கள். இருந்த போதும் பாரமா இருந்து இறந்த போதும் கூட பாரமாகிட்டேன் னு என் உசுரு அழும். அழாதீங்க ப்ளீஸ். அப்பறம் இந்த மாலை
மாரியாதை எதும் வேணாம். வீண் செலவு. முடிஞ்சா தப்பு கொட்டுங்க. அதான் பறை. ஏன்னா இசை புடிக்கும். அப்படியே நாதஸ்வரமும். ராஜா பாட்டு எதுனா இல்ல இல்ல மனிதன் நினைப்பதுண்டு
வாழ்க்கை நிலைக்குமென்று ன்ற பாட்ட வாசிக்க சொல்லுங்க. நான் அப்டி தான் நெனைச்சேன். ஆனா நிலைக்கலயே. அசரீரி இப்போ கோரமா கேட்குது... வா வா னு. போய்டு வரேன்...இல்ல இல்ல
போறேன்.. போறேன் னு சொன்னா அவளுக்குப் பிடிக்காது போய்டு வரேன் னு சொல்லி பழகு னு திட்டுவா... என்ன பண்ண இப்போ போய்ட்டா வர மாட்டேனே.. போறேன்..தற்கொலை ல தப்பி உயிர் பிழைச்சு
வந்தா இன்னும் எழுதறேன்...இல்ல இல்ல வர மாட்டேன் வந்தா இந்தப் பிரியமானவங்களலாம் ஏன் இப்படி பண்ண அது இது னு பாசத்த காட்டறேன் ன்ற பேரு ல மனச முழுசா கொன்னு.... மறுபடியும்
ஒரு முறை தற்கொலைக்கு தூண்டி விட்ருவாங்க.. இதுவே முதலும் கடைசியுமா இருக்கனும் னும் ஆத்மா சாந்தி அடையனும் வேண்டிகோங்க... போய்ட்டு வரேன்.. போய்ட்டேன். (பின் குறிப்பு :
தற்கொலை செய்கிற அளவு தைரியம் இல்லை. ஏன் அதில் பாதி கூட இல்லை. அதனால் சாக மாட்ட டேன் உயிரோடு தான் இருப்பேன். இது ஒரு கடித முயற்சி. அவ்வளவே)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...