Back

Philosophy

October 13, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

"❣️அழகான பெண் கண்டால் அவளுக்கொரு கவி செய்வேன்.. பழகிய பின் நானும் பால் அன்பு தான் பெய்வேன். ❣️புகழாரம் சூட்டி தினம் புதிது புதிதாய் பாடிடுவேன்.. முகம்மலரும்
வேளையிலே முரண் கொண்டு ஊடிடுவேன். ❣️கலையான மேனியழகை கவிதையிலே சொல்லிடுவேன்.. வளைகரம் வாழையென வார்த்தையிலே வில்லிடுவேன். ❣️பிழை யேதும் கண்டால் பாட்டெழுதும் பாட்டன் நான்
இலை மறைகாயென இல்லாமல் கடுஞ் சொல்லால் கிள்ளிடுவேன். ❣️கண்ணழகு காதழகு கழுத்தோர கனியழகு முன்னழகு பின்னழகு முறையாக எழுதிடுவேன். ❣️பெண்ணவளை போற்றி போதமையை கொண்டாடி கண்ணோடு
கையொற்றி கடவுளென தொழுதிடுவேன். ❣️கவலை ஏதும் வந்துவிட்டால் பால் பேதம் பார்க்காமல் அவளை கட்டிப் பிடித்து அழுதிடுவேன்! கண்களை கசக்கிடுவேன்! ❣️பெண்களே இப்படித் தானென பேச
மாட்டேன்! ஏசமாட்டேன்! பண்கலந்து பாட்டெழுதி காதல் மடல் வீசமாட்டேன்! ❣️பண்போடு நடந்திடுவேன்! பண்பாடும் கடைபிடிப்பேன்! என்போடு தசையுடைய உடலை அன்போடு கரம் பிடிப்பேன்.!
❣️சூழ்நிலை தவறியுடல் சூடேறி பால் பண்பு கிளர்ந்து விட்டால் பார்க்க மாட்டேன்! பேச மாட்டேன்! அவள் பக்கத்திலே போக மாட்டேன்.! ❣️பெண்மோகப் பித்தனென் பேச்சை கேட்க வேண்டாம்
அன்போடு இரைஞ்சுகின்றேன் அகன்று நின்று விடு! ❣️கண்மூடித் தனமாக இந்த கவிஞனை நம்பாதே பண்பாடு கெடுக்க வந்த படுபாவி எனச் சொல்லி ❣️கண்போகும் கால்போகும் போக்கிலே நடந்திடுவேன்!
மண் சேரும் நாள்மட்டும் - அவளை மறக்காமல் நினைத்திடுவேன். " ❣️இப்படி இனிக்க இனிக்க பாட்டெழுதி இதயத்தை உருக்கிடுவேன் செப்படி வித்தை செய்வேன்! செல்வ மகளிர்! என்னை
நம்பாதீர்! ❣️எழுதுங் கலை எனக்கு பழுதின்றி வருகிறது! அதனாலே எழுதுகிறேன்! என்னில் அன்பென்று ஒன்றும் இல்லை.! ❣️ஓடுங்கள்! ஒழியுங்கள்! மறைவிடம் தேடுங்கள்! ஒரு காமுகன் இவனென
காண்பவரிடம் கூறுங்கள்! ❣️ அவ்வளவுதான்! இவ்வளவு தான்! நானென்பது இப்படித் தான்! எவ்வளவு தான் சொன்னாலும் அது செவிடன் காதிலூதும் சங்கு தான்! ❣️தமிழோடு வளர்ந்த எனக்கு
தனிமையும் புத்தகமும் உமிழ்நீரோடு ஊறி வரும் கவிதையுமே போதும்! ❣️துணை யாரும் வேண்டாம்! துயர்படவும் வேண்டாம்! மனையாளும் வேண்டாம்! மகவுகளும் வேண்டாம்! ❣️ பெண்டாட்டி
சுகமெல்லாம் புத்தகத்திற்கு ஈடில்லை! பேசாமல் போய் விடுங்கள் நான் புத்தகத்தை கூடுகின்றேன்! அதில் என்னை புதைக்க இடம் தேடுகின்றேன்.. -
@[100010507024645:2048:Ajithkumar Ajithkumar R]

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...