Back

Philosophy

September 27, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

#கலைந்த_கேசம்

சீயக்காய் போட்டு தேய்த்து குளித்து கொண்டையிட்டு
இரண்டு மூன்று முழம் மல்லிகை சூடிய கூந்தல்
இரண்டு கைக்களுக்கும் முறையே ஒரு டசன் கண்ணாடி வளையல்
நெத்தி மத்தியில் கட்டை விரல் நுனியளவு குங்குமம்
பின்பக்க நாடா வைத்து
ஜரிகை அலங்காரம் செய்த ஜாக்கெட்
நீல நிற உள் பாவாடை
இஸ்திரி செய்து மடிப்பு கலையாமல் கட்டபட்ட
மட மடக்கும் காட்டன் புடவை
முத்துகள் சத்தமிடும் வெள்ளிக் கொலுசு
இப்படி ஒரு ராஜ அலங்காரத்தோடு
தாழிடாமல் சாத்தி இருந்த அறையை திறந்து
பன வெல்லமிட்டு சுண்டக் காய்ச்சிய
நாட்டு மாட்டு பால் நிறைந்த செம்போடு
உள் நுழைகிறேன் நான்.
இது தினசரி வாடிக்கை தானெனினும்
முதல் பார்த்த அதே ஆச்சர்யத்தோடு ஏற இறங்க பார்க்கிறாய் என்னை.
பூ வை எல்லாம் உதிரியாக்கி
புடவை கசக்கி
பொட்டை அழித்து
வளையலை எல்லாம் உடைத்து நுணுக்கி
எப்படியும் விடிவதற்குள்
என்னை விதவை கோலம் செய்ய போகிறாய்.
இதற்கெதற்கிந்த யௌன அலங்காரமெல்லாம் என்று கேட்கிறேன்.
சாகத்தானே போகிறோம் என்று யாரும்
தின்னாமலும் வாழாமலும் இருப்பதில்லையே என்று தத்துவம் பேசி
கட்டிலிருந்து எழுந்து வந்து
பால் செம்பை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு
படுக்கச் சொல்கிறாய்.
நானும் அப்படியே செய்கிறேன்.
அணிந்து வந்த எல்லாவற்றையும் அவிழ்த்து விட்டு
இரவெல்லாம் வேர்க்க விறுவிறுக்க சாம வேதம் ஒதுகிறாய் என்னில்.
காலையில் என்னை சார்ந்த எல்லாமும்
கலைந்தும் களைத்தும் கிடக்கிறது. களைப்படைந்த என்னையும் கலைந்து கிடந்த என் கேசத்தையும் தவிர
ஒவ்வொன்றாய் முத்தமிட்ட படியே சரி செய்கிறாய்.
எல்லாமும் முடிந்த பின்
முடியை மட்டும் முடிந்து விடாமல்
முன்பக்கம் பாதி பின்பக்கம் பாதி என
கலைந்த நிலையிலே விட்டு விட்டாய்.
ஏனென்ற கேள்வியோடு பார்க்குமென்க்கு
முதுகிலும் முன் மார்பிலும் உள்ள
பல் தடங்களையும் நகக் கீறல்களையும்
உதட்டால் சுட்டி காட்டி சிரிக்கிறாய்.
அவ்வளவு தான்.. நான்
சப்தமேதுமின்றி நாணச் சிவப்போடு
கலைந்த கேசத்தை கை தொடாமல் குளியலறையை நோக்கி நடக்கிறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...