Back

Philosophy

July 12, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

#ஃபர்ஸ்ட்_லவ் ❣️❣️❣️
கடந்த வியாழக்கிழமை தஞ்சாவூர் மார்க்கமாய் போவதற்காக திட்டமிட்டிருந்தேன். சிங்காநல்லூரில் தான் தஞ்சைக்கு பஸ் இருக்கும் என்பதால் சிங்காநல்லூர் பஸ் ஏறினேன். அவ்வளவாக நெரிசல் இல்லை. பஸ் முழுதையும்
ராஜா ஆக்கிரமித்திருந்தார்.
"இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில் இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்த்தில்... மெல்லிய நூலிடை வாடியாதே
மன்மத காவியம் ஓடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே"
என ராஜ கானம் இசைந்து கொண்டிருந்தது. உட்கார இடமின்றி நின்று கொண்டிருந்தேன்.பேருந்தின் ஓட்டத்திற்கு நின்று கொண்டிருப்பது அசௌகரியமாத் தான் இருந்தது."கொஞ்சம் ஓரமா நில்லு தம்பி" என ஒரு
காக்கி உருவம் என்னை இடித்து கொண்டே கடந்து பேருந்தின் முன்பக்கம் சென்று "சட்டுனு ஏறுமா" என யாரையோ அவரபடுத்தி விட்டு "உப்பூ" என வீசிலை உச்ச ஸ்தாயி இல் ஊதியது. கொஞ்சமேனும்
இசையனுபவம் இருக்கலாம். லொள்ளென்கிற நாய் சத்தம் போல காது வலிக்க ஒலித்தடங்கியது அந்த சத்தம். ஒரு குட்டி பாப்பாவும், அவள் அம்மாவும் என் அருகில் புதிதாய் முளைத்திருந்தார்கள். அந்த குழந்தை அம்மா
வின் கையிலிருந்ந key pad மொபைலை அடம்பிடித்து வாங்கி யாருக்கோ போன் செய்தது. குழந்தை தனத்தின் அழகிருக்கே... ப்பாஆஆ. "அப்பா ஏதாவது வேலை யா இருப்பாங்க.. முடிச்சிட்டு கூப்டு வாங்க" என்று
சொன்னதற்கு "அப்பா பேசனும் ச்சாக்லேட்டு வாங்கியாற சொல்லுனும்" என குழைய குழைய வாய் கூட்டி உதட்டை சுருக்கி ஒரு போல் கோணி அவ்வளவு அழகா பேசியபடியே போனில் ஏதோ நம்பரை டயல்
செய்தது."டிக்கெட் டிக்கெட்" என்று வந்த காக்கி யிடம் அந்த அம்மாள் மூன்று "சாய் சாந்தி"என்று டிக்கெட் எடுத்த பின் தான் நான் அவளை பார்தேன். அந்த அம்மாளின் மூத்த மகளாக இருக்க
வேண்டும். அழுந்த வாரி பின்னிலிட்ட கூந்தல்.குறைவான புறப்பரப்பு கொண்ட சுருக்கம் இல்லாத நேர்த்தியான நெற்றி.அவளின் நிறத்திலேயே இருந்ததால் சற்று கூர்ந்து கவனித்தால் சந்தனம் வைத்திருக்கிறாள் என்பது
தெரியக்கூடும்.கருப்பு மையில் வரைந்த வளை கோடென புருவங்கள்.பகல் வான் கொண்ட அமாவாசை நிலவென கண்கள். பூனை மயிர் அரும்பிய கவிழ்த்தி வைத்த தேங்காய் தொட்டி போன்ற - மிருதுவான கன்னங்கள். பனித்துளிகளென
வேர்வை படர்ந்த மூக்கு.அதிகமாய் மஞ்சள் வாசமறியாத உடல் என்பதை சொல்கிற மூக்கின் கீழ் முளைத்த மென் மீசை.சதை கதுப்புகள் சுமந்த - குலை யீனிய வாழையின் அடிப்பகுதி போன்று சற்று கனமான கழுத்து. இறுக்கத்
தளர்வுகள் இல்லாத கச்சிதமான செந்நிற பூ போட்ட மஞ்சள் சுடிதார்.வான் முட்டி நிற்கிற மலைகள் என ஆடை முட்டி நிற்கிற பருத்த இரு முலைகள். இந்த குளிர் பொழுதிலும் அவளின் அக்குளும் பின் முதுகும்
வேர்த்திருந்தது. அதன் ஈரப்பரவல்கள் உள்ளாடையின் இருப்பையும் சில வளைவுகளின் தடங்களையும் புறங்காட்டி கொண்டிருந்தது.மார் மூடி இருந்த சாலின் இரு முனைகளை சேர்த்து பின்புறம் முடிச்சிட்டு
இருந்தாள்.நாலெட்டுடைய முன்னிரண்டை ஐந்தால் பெருக்கியதை போன்ற பின்னழகு. "உள்ள தான் போங்களேன் மா" என்று காக்கி உருவம் கத்தி தள்ளியது. முடி முகத்தில் படுகிற அளவு நெருங்கி வந்து
நின்றிருந்தாள் அவள்.இப்போது காக்கி கடவுளாக தெரிந்தது. மெல்ல சுய நினைப்பு தட்டியது.உடனே அவளை மறந்து

"அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா"

என்றிசைந்து கொண்டிருந்த ராஜ சோகத்தில் லயித்து விட்டேன்.மூக்கில் ஏதோவொரு கமழ்மண நெடியேறி மனதை விழிப்புற செய்தது. வெள்ளை நிறத்தில் பேர் தெரியாத பூவினை வைத்திருந்தாள். அதன் பெயராய்கிற பொருட்டு
கொஞ்சம் பார் திறனையும் நுகர் திறனையும் நுண்மமாக்கினேன்.மணந்தது பூ வல்ல.எந்ந ஊரில் பிளாஸ்டிக் பூ மணந்திருக்கிறது.? ஏதோ பெர்பீயூம் என்பதை மட்டும் யூகிக்க முடிந்தது. இந்த வாசனை இதற்கு முன்னே
எனக்கு பரிட்சயபட்டிருக்கிறது. தீவிரமாய் யோசித்தில் அந்த தேவ மாதை கண்ட போதையிருந்து விடுபட்டு "ஃபர்ஸ்ட் லவ்" என்று மூளை சொல்லி மீண்டுமவளை ஆராய இறங்கி விட்டது மூளை.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...