Philosophy
June 11, 2018
தத்துவம்
SHARE

நேத்து என்னை பார்க்க வந்த பால்ய கால நண்பன்
ஏதோ ஒரு சோகத்தை கொண்டாடுதலின் பொருட்டு தாடியும் பரட்டை தலையுமாய் திரிந்து கொண்டிருந்த என்னை "ஆளப் பாரு பறப்பையனாட்டம்... எந்ந குடியானவனாச்சும் இப்படி இருப்பனா டா." என திட்டி
"முதல் ல போய் தாடி,முடி ய எல்லாம் வழிச்சிட்டு குடியானவனாட்டம் இரு டா.. இப்படியே எங்கயாச்சும் போனீனா பறப்பையன் னு வூட்ல வுட மாட்டாங்க " னு அறிவுரை மழை பொழிஞ்சிட்டு போனான்.
எத்தனை கீழ் தரமான எண்ணம். இந்த சமூதாயத்தின் போக்கை என்னவென்று சொல்வது. பார்வைக்கு ஒவ்வாத அல்லது அசிங்கமான தோற்றம் கொண்டவன் எல்லாம் கீழ் சாதியா.. அல்லது கீழ் சாதி என்று சொல்கிறார்களே அவர்கள்
எல்லாம் என்னை போல ஒவ்வாத தோற்றம் உடையவர்களா?
"படிச்ச நீயே சாதி சாதி னு சுத்துறியே" னு அவனிடம் கேட்டிருக்கலாம்... ஒரு வேளை அப்படி நான் கேட்டிருந்தால்...
"படிச்ச நீயே சாதி சாதி னு சுத்துறியே"
"படிச்சா அம்மா அப்பா இல்ல னு ஆகிருமா"
"அப்போ சாதி தான் உன் அம்மா அப்பா ன்றியா"
"இல்ல அடையாளம் ங்கறேன்"
"சாதி உனக்கு சோறுபோடுமா"
"போட்டான போடலனா சாதி தான்டா முக்கியம்"
"டேய்... பறையன் வன்னியன் சக்களியன் னு சொல்றா எல்லாருமே நெல்லஞ் சோத்த தின்னு பீய்ய தான் டா பேளுறான்...உன்ன மாதிரியே அவனும் தண்ணிய குடிச்சு மூத்தரமாத் தான் போறான்.. நீ போடுற மாதிரி பேண்ட் அ
காலுக்கும் சட்டைய மேலுக்கும் தான் போடுறான்.. இதுல எங்கடா உன் சாதிக்கான அடையாளம் இருக்கு... "
" டேய் கூறு கெட்டு போய் பேசாத.. நம்ம பொறப்பு வேற அவங்க பொறப்பு வேற "
" நம்ம னு என்னையும் சேர்க்காத அதான் நான் பறையன் ஆகிட்டேனே.. அப்ப எவனும் அப்பன் அம்மாளுக்கு பொறக்கலயா... அக்னி சட்டில பொறந்தானுகளாம் ... உங்க அப்பன் நெருப்ப கூட வுட்டு வைக்கலயா... போடா
டேய் முட்டாப்பூத் தனமா அக்னி சட்டில இருந்து பொறந்தேன்.. பிரம்ம தலை ல இருந்து பொறந்தேன்.. சொல்லி பொறப்ப கேவலப்படுத்திகிட்டு திரியாதிங்க.. எல்லாரும் காலிடுக்கில இருந்து கழிவா வந்தவனுங்க தான்..
"
இதற்கு மேல் அவன் மூடி கொண்டு போயிருக்க கூடும். அல்லது பேசி சமாளிக்க தெரியாமல் என்னை அடிக்க வந்திருக்க கூடும்.
சாதி என்பது தோற்ற அடிப்படையில் உண்டானதல்ல தொழிலை அடிப்படையாகக் கொண்டதென்ற புரிதல் இல்லாதவரை சாதி ஒழியாது.
அதாவது அவரவர் தொழிலே அவரவர் சாதி.
நிற்க.
சின்ன வயதில் இருந்து
"சாதிகள் இல்லையடி பாப்பா"
"தீண்டாமை பெருங்குற்றம்"
"பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் "
என அவன் படித்தது எல்லாம் என்ன ஆச்சு? ஏன் படித்தான்?
இதெல்லாம் படித்தும் அவன் சாதிய பாகுபாடுகளை விடாமல் இறுக பற்றிக் கொண்டிருக்க காரணம் என்ன?
கல்வி. பகுத்தறிவை வளர்க்காத கல்வி முறை தான் இதன் மூல காரணம்.
மேற் சொன்ன மேற்கோள்கள் எல்லாம் வெறும் பாடம் என்ற அளவிலேயே அவனுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது.
ஏட்டுக் கல்வி எதற்கும் உதவாது என்ற புரிதல் வேண்டும். இங்கு இப்படி பேசுகிறவன் பள்ளி கல்லூரியில் தன் சாதிப் பெயரை சொல்லிக் கொண்டு ஒரு கூட்டத்தை கூட்டி கொண்டு திரிந்திருப்பான். அல்லது பிறரை
மட்டம் தட்டிக் கொண்டு திரிந்திருப்பான். அப்போதிருந்தே அந்த வரிகளின் அர்த்ததை புரிய வைக்க முயன்றிருக்க வேண்டும்.சக மாணவர்களோடு ஒரு நட்பு பாராட்டுதலையேனும் அவனுக்கு சொல்லி கொடுத்திருக்க
வேண்டும்.
இந்த சாதிய பிரச்சினைக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்தில் நடக்கிற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு பகுத்தறிவோடான கல்வி முறையில் தான் இருக்கிறது.நல்ல கல்வியே நல்ல சமூதாயத்திற்கான முதலீடு.
நன்றி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...