Philosophy
June 7, 2018
தத்துவம்
SHARE

பேருந்தின் அருகருகேயான இருக்கையில் அவளும் நானும். சன்னோலரம் அவள். அவளருகில் நான்.அவள் திரும்பினால் மூச்சு காற்று என் முகத்தில் படும்.நல்ல மழை பொழுது.மிதமனா காற்று.
சன்னல் கம்பியின் மீதமர்ந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருந்த மழைத் திவலைகளுக்காக வருந்திக் கொண்டிருந்தாள். அவளின் தலைக்கு மேலிருந்த புறம் கரம் சிரம் நீட்டாதீர் என்ற
அறிவிப்பை பாராமல் ஜன்னலுக்கு வெளியில் கை நீட்டி உள்ளங்கையில் சேகரித்த நீரை என் முகத்தில் தெளித்து சிரித்தாள். அவ்வப்போது அதை பார் இதை பார் என்று என்னை தொட்டு தொட்டு
உடலில் உஷ்ணம் பரப்பிக் கொண்டிருந்தால். சன்னல் தாண்டி வருகிற மழைத்துளிகளில் ஒன்றிரண்டு அவள் முகத்தில் பட்டு கழுத்து தாண்டி உள்ளாடை தாண்டி ஊர்ந்து கொண்டிருந்தன. அதன்
பயணத்தடங்கள் ஈரக்கோடாய் தெரிந்தது. ரொம்ப குதுகலமாய் இருந்தாள். ஒரு கோயில் கலசத்தின் மீதமர்ந்து கொஞ்சிக்கொண்டிருந்த புறாக்களை பார்க்க சொன்னாள், கூட்டமாய் கூடு திரும்பிக்
கொண்டிருந்த வெண் நாரைகளை பார்க்க சொன்னாள், அந்த toll gate ல் நின்ற போது புத்தகம் விற்க பேருந்தில் ஏறிய சிறுமியை பார்க்க சொன்னாள்.. . நான் எதையும் கவனிக்காமல் முகம்
சோம்பி அமர்ந்திருந்தேன். உடனே குனிந்து பேக்கில் இருந்த ஹெட்செட்டை எடுத்தல். அந்த இடைவெளியில் என் கண்கள் எல்லை மீறியை அவளறியாள். என் போனில் சொருகி.. My play list ல்
இருந்த romantic பாடலொன்றை play செய்து ஹெட் செட்டின் ஒரு speaker ஐ என் காதிலும் மற்றொன்றை அவள் காதிலும் வைத்தாள்.அப்போதும் நான் சோம்பியே இருந்தேன். "என்னடா ஆச்சு
உனக்கு ஏன் இப்படி gem மாதிரி இருக்க " என்று சிடுசிடுத்தாள். "widow வ close பண்ணு இல்லாட்டி எனக்கு window seat அ விடு " "எதுக்கு சாத்தனும் சாத்தினா
வேர்க்கும் டா.. " "சரி... இந்த பக்கம் வா.." ஏன் என்ன ஆச்சு.. நீயா தான என்ன window seat ல உட்கார சொன்ன " " ஆமா " "இப்போ என்ன ஆச்சு?
வாந்தி வருதா" "இல்ல கோவம்" "எதுக்கு.. யாரு மேல.. என் மேலயா... நான் என்ன பண்ணேன்.. " " உன் மேல இல்ல... " " அப்பறம் " "
அத விடு.... எனக்கு ஜன்னல் சீட் வேணும்... அவ்வளவுதான் " " முடியாது... யார் மேல கோவம் னு சொல்லு.. எதுக்கு... ஜன்னல் சீட் கேட்கற னு சொல்லு... ? "
"காத்து.. மேல " " காத்து மேலயா" இந்த காத்து பாரு நான் பார்க்க வேண்டிய தீண்ட வேண்டிய.. தின்ன வேண்டிய இடத்துல எல்லாம் உலாவித் திரியுது.. அது மட்டும்
கைல கிடைச்சது னா அவ்வளவு தான்" அவள் முகம் எங்கிலும் நாணம் பாய் விரித்து கொண்டது.எதுவும் பேசாமல் எழுத்து இருக்கையை விட்டு கொடுத்தாள். நாங்கள் இடத்தை பறிமாறிக் கொண்ட
இடைவெளியில் ஹெட்செட் கீழே விழுந்து விட்டது. எடுக்க ஒரே நேர்த்தில் இருவரும் குனிந்ததில் தலை முட்டிக் கொண்டோம்.நான் எடுக்கட்டும் என்று அவளும் அவள் எடுக்கட்டும் என்று
நானும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து விட்டோம். "சரி நீ யே எடு." நான் எடுக்க குனிந்தாள். "நல்லா இருக்கு" நான். அவசர அவசரமாக கழுத்தடியில் வலது கையை வைத்து
கொண்டு இடது கையில் ஹெட்செட்டோடு நிமிர்ந்தாள். கொஞ்சம் நாணம் கலந்த கோவத்தோடு . "என்ன நல்லா இருக்கு..?" என்றாள் "என்னவா.. ட்ரஸ் தான்"
"நெசமா.." "நெசமா தான்... உன் மாம்பழ நெறத்துக்கு இந்த கருப்பு தான்.. அழகா இருக்கும்.. அழகாவும் இருக்கு" "கருப்பா....". "கருப்பு
தான..சரியா கவனிக்ககலயோ..எங்க மறுபடியும் ஒரு தடவ.... பா..க்..... ன்" " டேய்.. உன்ன" "ம்ம்ம்ம்ம்மம்ம்ம்ம்ம" அவ்வளவு தான். இரவாகி போனது
மட்டுமல்லாமல் பேருந்தில் விளக்கணைப்பட்டிருந்ததால்....புறத்தையும் அகத்தையும் இருள் கவ்வி கொண்டது. ❣️❣️❣️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...