Back

Philosophy

February 8, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

👉சுயத்தை தாண்டி
பொதுவாய் சிந்தித்து
பொழுதுகளை தவற விட்டேன் .

👉கல்வியின் நோக்கம்
கற்றலும் கற்பித்தலுமே என்று
காசை தவற விட்டேன்.

👉உறவுகள்
உயர்வுக்கு தடையென்று
சொந்தங்களை தவற விட்டேன்.

👉தனிமைசுகமென்று
நிழலையும் தவற விட்டேன்.

👉அழும் கண்கள்
சுத்தப்படுமென்று
சிரிப்பை தவற விட்டேன்.

👉மௌனம் நல்ல பதிலென்று
மொழியை தவற விட்டேன்.

👉எழுத்து வலியதென்று
பேச்சை தவற விட்டேன்.

👉காமம் இன்றேல்
உலகமில்லை என்று
காதல் தவற விட்டேன்.

👉ராத்திரி மிகவும்
ரம்மியமென்று
உறக்கம் தவற விட்டேன்.

👉நினைவுகள் சுகமென்று
மறதியை தவற விட்டேன்.

👉இறப்பு இயல்பென்று
இரக்கம் தவற விட்டேன்.

👉குற்றங்கள் குறைக்க வேண்டி
கருணை தவற விட்டேன்.

👉பெற்றதை பேணுவது கடமை என்று
பெற்றோர் தவற விட்டேன்.

👉நடப்பது நடந்தே தீருமென்று
முயற்சி தவற விட்டேன்.

👉இதுவும் கடக்குமென்று
எதையும் கொண்டாட தவற விட்டேன்.

👉எழுதி விட்டால் சுமை குறையுமென்று
அழாமல் புலம்பி விட்டேன்.

👉கவிதை நீரால்
கண்ணீரில் நனைந்த
என் கன்னத்தை அலம்பி விட்டேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...