Back

Philosophy

January 4, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

💞ரீங்காரிக்கும் கொசுவொப்ப குசு குசு மொழியில் ஓயாமல் காதோரம் ரகசியம் பேசிகிறாய். 💞தெருமுனையிலிருந்து கேட்கும் நாயின் ஊளைச்சத்தமாய் அருவருப்பை உண்டாக்கும் பொருட்டு
அடிக்கடி கத்துகிறாய். 💞பழுப்பேறிய இலையை உதிர்க்கும் மரம் போல மீ்ண்டும் சேர முடியாதென்று தோன்றும் அளவிலான வெறுப்போடு தூக்கி எறிகிறாய். 💞பகலை ஊடறுத்து உள் நுழைந்து
கொண்டிருக்கும் இரவென என்னுள் நீ ஏகமாய் விரவித் திரிகிறாய். 💞வேலியை பற்றி வளைத்து பின்னி பிணைந்தோடும் அவரைக் கொடியாய் கோபத்தில் இருக்குமென்னை உன்னில் இருந்து பிரித்து
கொள்ள முடியாதபடி காலோடு கால் பின்னி கட்டித் தழுவுகிறாய். 💞அடங்கா பசியோடு தடங்கால் தெரியாமலோடிய கொழுத்த மானை வேட்டையாடி கிழித்து தின்னும் ஒரு சிங்கத்தின் ஆர்வத்தோடு
அங்கமெங்கிலும் முத்தமிட்டு கட்டிலதிரப் புணர்கிறாய். 💞அந்த எறிதலுக்கும் இந்த எடுத்தலுக்குமான இடைவெளியில் உடைக்கும் வெளியே காமமற்று நீ செய்த காரியங்கள் தான் இன்னும்
உன்னோடிருத்தலை நீட்டித்துக் கொண்டிருக்கிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...