Philosophy
December 29, 2017
தத்துவம்
SHARE

ஐ லவ் யூ சொல்வது அவ்வளவு பெரிய தவறு "இல்லை" என்று ஒரு பெண் நிருபித்து போயிருக்கிறாள்.
அன்புக்குரிய யாரிடத்தும் ஐ லவ் யூ சொல்லாம் என்ற புரிதலையும் உண்டாக்கி போயிருக்கிறாள்.
அவளாய் வந்தாள் "ஹாய்" சொன்னாள் நானும் பதிலுக்கு "வணக்கம்" சொன்னேன். என் கவிதைகளை சற்று மெனக்கெட்டு மெச்சினாள். கொஞ்சம் புல்லரித்து விட்டது.
சிறிது நேர சம்பாஷனைக்கு பிறகு ஐ லவ் யூ சொல்லி ஜீவனை சிலிர்க்க வைத்து விட்டாள்.
என்ன சொல்வது என தெரியமால் சற்று அமைதியாய் இருந்தேன். அவளே "என்ன reply யே காணோம்" என்று துண்டான சம்பாசனையை தூண்டி விட்டாள்.
எனக்கு காதலிக்க ஆசையில்லை என்றேன்.
உடனே ஆறேழு குறுஞ்செய்திகளை தட்டி விட்டு டபக் என block செய்து விட்டாள்.
அவள் அவசர அவசரமாக அனுப்பிய அந்த கடைசி ஆறேழு குறுஞ்செய்திக்காகத் தான் இந்த பதிவு.
அவள் என் கவிதை மீதுள்ள பிரியத்தினாலும் எழுத்தின் மீதுள்ள பிரியத்தினாலும் ஒரு நட்பு முறையில் அன்பு ததும்ப ஐ லவ் யூ சொன்னாளாம்.
அவள் என்னை block செய்த பிறகு அதனை பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி எழுந்து எழுதும் பதிவு.
ஐ லவ் யூ என்பது கெட்ட வார்த்தையோ கேட்க கூடாத வார்த்தையோ அல்லது சொல்லக் கூடாத வார்த்தையோ அல்ல.
இடம் பொருள் ஏவல் என்று தமிழில் உண்டு. இடத்தை பொறுத்து இதன் அர்த்தம் மாறும்.
ஐ லவ் யூ சொல்கிறவர்கள் எல்லாம் காதலியாகவோ காதலனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. Love என்பதன் அர்த்தம் நேயம் அல்லது அன்பு என்பதே ஆகும்.
ஆக ஐ லவ் யூ என்பதை அன்புக்குரிய யாரிடத்தும் சொல்லலாம்.
So
"#ஐ_லவ்_யூ."
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...