Philosophy
December 1, 2017
தத்துவம்
SHARE

பொறியியல் ஆராய்ச்சி. பகுதி 2
An engineering research. Part 2
படிச்சு முடிச்சிட்டவங்க.
இத ஒரு (உண்மை) சம்பவத்த வச்சு விளக்கறேன்.
அது ஒரு சின்ன குடும்பம். அம்மா அப்பா. ரெண்டு பசங்க. அவ்வளவுதான்.
பசங்க ரெண்டு பேரும் என்ஜினியர்s.
சின்னவன் மெக்கானிக்கல் என்ஜினியரிங். (MECH)
பெரியவன் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் (EEE)
காலேஜ் ல என்னமோ MECH தான் கெத்து.
ஆனா இந்த கதை ல மெக்கானிக்கல் ரொம்ப அடி வாங்கும்.
சரி நாம கதைக்கு வருவோம்.
ரெண்டு பேரும் படிச்சு முடிச்சிட்டானுங்க.
பெரியவன் முடிச்சிட்டு ஒரு வருசமா வீட்ல வெட்டியா என்ன பண்றது னு தெரியமா (என்னைய மாதிரி) பேஸ்புக் ல கடைல ய போட்டுட்டு பொழுது ஓட்ட... இந்த இடைவெளி ல தம்பி காரன் படிச்சு முடிச்சு PLACE ஆகிட்டான்.
வீட்ல அண்ணங்காரனுக்கு ஒரே திட்டு. தம்பிக்கு அண்ணன் திட்டு வாங்க றது ல பேருவகை.
துக்கத்தை மறைச்சுகினு அண்ணன் தம்பிக்கு வாழ்த்து சொல்றான்.
" என்ன COMPANY டா"
"TCS"
"எவ்வளவு salary"
"thirty thousand" (தெனாவட்டு)
"enjoy டா... மாசம் மாசம் எனக்கு மட்டும் ஒரு ஆயிரம் ஒதுக்கிடு டா"
"for what"
"mobile க்கு recharge பண்ண அப்பறம் வண்டிக்கு petrol போட"
"பாக்கலாம் பாக்கலாம்"
\\ //
ஏச்சும் பேச்சும் வாங்கிட்டு போடுறத தின்னுகினு இன்னும் ஒரு ஆறு மாசம் ஓட்டுறான் அண்ணன்.
தம்பி கிட்ட இருந்த வர ஆயிரம் ஐநூறு ஆ குறஞ்சது. ஆனா அந்த ஐநூறு க்கு ஆயிரம் திட்டு.
திட்டு பொறுக்க முடியாம
EEE மூளை தீவிரமா யோசிச்சது.
இருக்றத வச்சும் தான் படிச்சத வச்சும் ஒரு வேளைய அவனுக்கே அவனே உருவாக்கி கிட்டான்.(ஏன்னா அவன் வச்ச ARREAR அ பாத்தா யாரும் வேல தர மாட்டாங்க).
என்ன வேல னா
ஒவ்வொரு வீடாக போய் பழுதான மின் மற்றும் மின்னனு சாதனங்களை சரிபார்த்தல்.
வேல என்னமோ நாய் பொழப்பு தான் (ஆரம்பத்துல).போக போக ராஜ வாழ்க்கை வாய்ச்சது. நல்ல சம்பளமும் கூட. கதை விடுறேன் னு தான நெனைக்றீங்க.
நல்லா தெளிவா கேளுங்க
இப்போ உங்க வீட்ல fan repair னு வைங்களேன். என்ன fault னு தெரியுமா? தெரியாது.
இப்போ அவனுக்கு phone பண்ணி இப்படி fan repair னு சொல்றிங்க. அவனுக்கும் fan ல என்ன fault னு தெரியாது. அவன் fan ல என்னென்ன item லாம் இருக்குதோ அத எல்லாம் வாங்கி பைல போட்டுகினு சொன்ன நேரத்த விட
ஒரு அர மணி நேரம் முன்னாடியே வந்திடுவான்.
ஏன் நேரத்த சொல்றேன் னு யோசிக்காதிங்க.
நீங்க இன்னைக்கு அவன வர சொல்லிட்டு வேலைக்கு leave போட்டுட்டு அவன் வருவான் னு காத்துகிட்டு இருப்பிங்க. அவன் வரல னா உங்களோட ஒரு நாள் வேலை வீணா போச்சு... வேலை ன்றத விட உங்க ஒரு நாள் சம்பளம்
கோவிந்தா.
மறுநாள் நீங்க வேலைக்கு போனப்றம் அவன் வந்துட்டு உங்களுக்கு Call பண்ணுவான்... இப்போ அவன் ஒரு நாள் சம்பளம் கோவிந்தா.
ஆனா இந்த மாதிரி சிக்கல் லாம் நம்ம EEE காரன் கிட்ட இல்ல. நான் முன்ன சொன்ன மாதிரி சொன்ன நாள் ல சொன்ன நேரத்துக்கு அர மணி நேரம் முன்னாடியே வந்திடுவான். (punctuality)
ஆனா அவன் சொல்றது தான் சம்பளம்.
அடுத்து உங்க fan ல coil ஓ
Regulator ஓ தான் போயிருக்கும். ஆனா அவன் எல்லாமே வாங்கிட்டு வந்திருக்கான். (அவன் காசுல இல்ல இதுக்கு எல்லாம் உங்க கிட்ட தான் bill வாங்குவான்)
உங்க fan ல போயிருந்த coil லயோ அல்லது regulator றயோ மாத்திட்டு மத்த part அ எல்லாம் வித்துடுவான். (business mind)
இதுலயும் அவனுக்கு கொஞ்சம் லாபம் இருக்கு.
இப்படி நம்ம ஆளு பொழப்பு ஒரு ஆறு மாசமா பொழப்ப ஓட்டுறான். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு வேலை தான். அதாவது ஒரு வீடு தான் பார்ப்பான்.
இப்போ MECHANICAL அ பார்ப்போம்.
அவனுக்கு OFFICE ல ஒரே TENSION. ஏன்னா அவன் படிச்சது க்கும் அவன் பாக்ற வேலைக்கும் சமந்தமே இல்லையே.
அண்ணன் காரன் கிட்ட வந்து அடிக்கடி பொலம்புவான். அண்ணா நானும் உன்ன மாதிரி எதாவது வேல பண்ணிருக்லாம் டா னு.
இத போய் வீட்ல அம்மா கிட்ட போய் சொன்னா பயங்கர திட்டு. ஏன்டா அவன் தான் படிச்சிட்டு நாய் மாதிரி ரோடு ரோடா வீடு வீடா சுத்திகிட்டு இருக்கான் நீ என்ன பண்ண போற? நோகாம A/C ரூம் ல உட்கார்ந்து ட்டு ராஜா
மாதிரி வேல.... ஒழுங்கா இருக்ற வேலய பாரு போ...."MECHANICAL "ராஜா மாதிரியா... போ ம்மா அவனுக்கு என்ன வேணும் ன்ற அவன் இஷ்டத்துக்கு LEAVE எடுத்துகலாம். யார் கிட்டயும் ஏச்சும் பேச்சும்
வாங்க தேவையில்ல... ஆனா நான் வீட்ல எதாவது னா கூட LEAVE போட HR அ பாக்கனும் MD அ பாக்கனும்... ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா எவன் எவனுக்கோ பதில் சொல்லனும்" னு உள்ளுக்குள்ள பொலம்பிகிட்டே பேசாம
போகுது.
#முற்றும்.
நீதி :
1)யாருக்கும் வேலை இல்லாம இல்ல.
2)கிடைச்ச வேலை ய செய்றத விட புடிச்ச வேலைய செய்.
3)வேற ஒருத்தன் வேல கொடுப்பான் னு காத்து கிட்டு இருக்காத.
4)உன் திறமை உன் படிப்ப ஆராய்ஞ்சு அதுக்கு தகுந்த வேலைய செய்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...