Back

Philosophy

July 24, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

இது சிறிது நெடும் பதிவு. நேரம் ஒத்துழைத்தால் முழுதும் வாசிக்க முடியுமானால் வாசியுங்கள்.

இன்று நான் நிறைய உணர்ச்சி பொங்கிய நிலையில் உள்ளேன்.உலகத்தை வியக்கிறேன். உங்களை வியக்கிறேன். இயற்கையை வியக்கிறேன். என்னையும் வியக்கிறேன். இது என் மனம் திறந்த பதிவு என்பதால் முழுவதையும்
எழுதப்போகிறேன். இதை வாசிக்கும் நீங்கள் என்னை எந்த பார்வையில் பார்த்தாலும் எனக்கு அதை பற்றிய கவலையில்லை.
இதை எழுதி விட்டு நான் பதிவிடாமல் பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம் ஆனால் ஏன் பதிவிடுகிறேன். தெரியவில்லை. விளம்பரத்திற்காவா இல்லை வேறு எதற்காகவா என்று. ஆனால் இது என்னை எனக்கு புரிய வைக்கும்
முயற்சியாக நினைக்கிறேன். எதாவது எதையாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். தீயதை தட்டி கேட்க நினைக்கிறேன். படித்து விட்டு வேலைக்கு போகாமால் போதகனாய்
போய்விட நினைக்கிறேன். ஒரு மனிதன் வாழ அத்தியாவசியானது மூன்று உணவு, நீர், காற்று. இவற்றை இயற்கையே உண்டாக்கி வைத்திருக்கிறதே. அப்பறம் பணம் எதற்கு? சிறு வயதில் இருந்து நிறைய நீதி போதனைகளையும் சமூக
அக்கறையை வளர்க்கும் நூல்களையும் பாடங்களையும் படித்திருக்கிறேன். அவற்றை எதற்காக படித்தேன்? ஏன் படித்தேன்? மதிப்பெண் வாங்கவா? அவை போதித்தது அதுவல்ல. அவை போதிப்பது வேறு. ஆனால் இந்த சமுதாயம்
போதிப்பது வேறு. எதை நான் ஏற்க? தலை சுற்றுகிறது. எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ போகிறது. நாடோடியாய் வாழலாமா என்று தோன்றுகிறது. இதை குழம்பிய மனதோடு தான் எழுதுகிறேன். (தெளிவு வேண்டி) சமூக அவலங்களை
கண்டுங்காணாமல் வாழ்ந்து என்ன பயன்? இந்த உயிர் வாழ்வதின் நோக்கமென்ன? நல்ல வேலையில் அமர்ந்து படித்த பெண்ணை திருமணம் செய்து அவளோடு கூடி மகிழ்ந்து குழந்தை பெற்று அதை வளர்த்து ஆளாக்கி பின் மடிந்து
போவாதா.? இதுவா? ச்சீ? இதற்கு எதற்கு திருக்குறள் படித்தேன்? இதற்கு எதற்கு நீதிக்கதைகள் படித்தேன்? இதற்கு எதற்கு ஊருக்கு நல்லது சொல்வேன் என்று பாரதியை படித்தேன்? இதற்கு எதற்கு அநியாயம்
பொறுக்காதே என்ற அறிவுரைகள் படித்தேன்? அத்தனையும் கேவலம் நான் வாங்குகிற பட்டத்திற்காகவா? அதனால் வரப்போகிற பணத்திற்ககாவா? அதனால் வரப்போகிற என் சந்ததிகளின் சந்தோசத்திற்ககாவா? நான் படித்ததில் எந்த
வரியும் எந்த கருத்தும் இப்படி வாழச் சொல்லி இல்லையே? பிறகு ஏன் இந்த சமுதாயம் ஏன் இந்த உறவுகள் என்னை அந்த வாழ்க்கை க்குள் தள்ளுகின்றன? எல்லோரும் அப்படித்தானே இருக்கிறோம் பிறகெதற்கு இந்த பாடங்கள்
இந்த படிப்பு? எல்லாவற்றையும் எரித்து விடலாமே.வாழ பணம் தான் அவசியமானால் அதற்கு எதற்கு இத்தனையும் படிக்க வேண்டும்? வழிப்பறி செய்து வாழலாமே... எதற்கும் பணம் ஒன்றே அவசியமானது ஏன் இயற்கை உபாதைகள்
போக்கவும் பணம் வேண்டும் இரைப்பை உபாதைகள் நீங்கவும் பணம் வேண்டும்....?ஏன் எல்லாம் பண மயம்? கொஞ்சம் தெளிவு கொடுங்கள். பணம் தான் வாழ்க்கையா? பணத்தில் தான் வாழ்க்கையா?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...