Back

Philosophy

May 3, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

தோழமைகள் யாவர்க்கும் என் அன்புநிறைந்த வணக்கம்.கீழ் வரும் பகுதி என் புத்தகத்தின் விமர்சனம். என்னை மகிழ்வித்த இதை உங்களோடு பகிர்வதில் இன்னும் மகிழ்கிறேன். நன்றி.
அன்புடையவளுக்கும் அன்புக்குரியவளுக்கும் ........................................................ (நூல் விமர்சனம்) ஆசிரியர்: அஜித்குமார் (பொறியியல் முதலாம் ஆண்டு) கவிதை
எழுதுபவனின் நாடி பிடித்து பார்த்தால் அவனுக்குள்ளே காதல் இருப்பதை கண்டு பிடித்து விடலாம். தப்பு செய்த குழந்தை அம்மாவை பார்த்தவுடன் பொய் சொல்வதை போலவே காதலிப்பவனிடம்
கவிதை வந்து விடுகிறது. அவனுடைய வார்த்தகளில் காதலின் ஆழம் தென்படும். கணித ஆசிரியர் தமிழ் விரும்பியாக இருப்பதும், அறிவியல் ஆசிரியர் தமிழின் மீது பற்றாக இருப்பதும், வங்கி
மேலாளர் தமிழ் இலக்கியத்தை நேசிப்பதும், மருத்துவர்கள் தங்கள் துறைக்கு தமிழ் இலக்கியத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வதும் வேறு மொழிகளுக்கு கிடைக்குமா? அந்த உயர்ந்த இடத்தில்
வாழ்வது தான் தமிழ். இந்த நூலை எழுதியவன் பொறியியல் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் ஆவான். "கருவிலே திரு உடையவன்" என்று சொல்வார்களே அதை போலவே இந்த கவிஞனும்.
ஞானசம்பந்தர் 3 வயதிலே கவிதை பாடினார். குமரகுருபரர் 5 வயதிலே தமிழைக் கற்றுக் கொண்டார்.இந்த வரிசையில் இந்த பொறியாளனுக்கும் ஒரு வரலாறு காத்திருக்கிறது. தமிழ் இந்த
கவிஞனுக்கும் அருள் பாலித்து இருக்கிறாள். இந்த மாதிரி தமிழ் ஆர்வமுள்ளவர்கள் வாழ்கிறவரை எப்படி தமிழ் இனி மெல்ல சாகும்? தமிழ்ப் பேராசிரியர்கள் போலவே இந்த தம்பி மரபு கவிதை
எழுதுகிறான். " முடங்கி கிடந்தால் நீ அற்பனடா சிதைந்த கல்லே சிற்பமடா" சிதைந்து போய் மக்கி போனவர்களை உரமாக்கி விளைய செய்யும் வரி தம்பினுடைய இதய கருப்பையில்
பிறந்திருக்கிறது. கரியமில வாயு பேசுவதை போல எழுதி இருக்கும் கவிதையில் "May.கத்தை கருக்கலைக்க போகிறேன். மரத்தை அறுக்கும் மனிதனின் உயிரை உரிப்பேன்" என்று சொல்லும்
போது இந்த பூமியின் மீது எனக்கு பயம் ஏற்பட்டது. இதை வாசிக்கும் வாசனுக்கு பூமியின் மீது அக்கறை ஏற்பட செய்கிறார் கவிஞர். பாலியல் பலத்காரத்தை பற்றி சொல்லும் போது உனக்கு சதை
தானே வேண்டும் சுடுகாடு போது மணக்கும் மாலையோடு பிணம் கிடைக்கும் என்று கோவப்பட்டு சொல்கிறார். ஒரு எழுத்தாளனின் எதிர்ப்பார்ப்பு இந்த சமுதாயத்தில் ஏதாவது ஒரு சின்ன
மாற்றத்தை ஏற்படத்த வேண்டும் என்பதாகவே இருக்கும். சாணை பிடித்த அரிவாள் வார்த்தைகளால் மாற்றத்தை நான் கொண்டு வர வேண்டும் என்று இந்நூல் ஆசிரியன் ஆசைப்படுகிறான். அரசியல்,
காதல், தமிழ் பற்று, சமுதாய பிரதிபலிப்பு, நட்பு என்று கவிஞன் பல்வேறு இடங்களை தொடுகிறான். நாட்டுப்புற சாயிலிலும் கவிதை எழுதும் திறன் இந்த கவிஞனிடத்திலே இருப்பதால் கூடிய
விரைவில் சினிமாவில் பாட்டும் எழுதுவார். சினிமாக்கார்ர்கள் தைரியமாக வாய்ப்பு கொடுக்கலாம். முக நூலில் எழுதி வருகிறார்.தமிழ் ஆசி அவருக்கு நிறையவே உண்டு. வெளியீடு: விஜயா
பதிப்பகம் பக்கம்: 112 விலை: 80 நூல் தேவைக்கு: ajith24ram@gmail.com போன்: +91 99 44 154823

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...