Short story
September 17, 2021
சிறுகதை
SHARE

சுதந்திர இந்தியாவின் கொடியை அவமதிக்காதீர்கள். அவமதித்தால் சும்மா விடேன்' என்று கூக்குரலிடுகிறாயே! உனக்குத்தான் பதவி கிடைத்தது; பணம் கிடைக்கிறது; கொள்ளையடிக்க வசதியும் கிடைக்கிறது.
கூப்பிட்ட நேரத்திற்குக் குரல் கொடுக்க டவாலி பியூன் உனக்குக் கிடைக்கிறான். அதனால் இந்தக் கொடிக்குத் தலை வணங்குகிறாய்; அதற்கு அர்த்தமும் இருக்கிறது. அந்த வசதிகள் எனக்குத் தேவையில்லை;
தேவையிருந்தாலும் அக்கொடிக்கு வணக்கம் செலுத்தாமலே என்னால் அவற்றை அடைய முடிகிறது. அப்படியிருக்க, நான் ஏன் 'ஹிந்துஸ்தான்' கொடியை வணங்க வேண்டும்? என்னுடைய சூத்திரப் பட்டத்தைப் போக்குமா
அந்தக் கொடி? என்னை ஒரு மார்வாரி சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுமா அந்தக் கொடி? எங்களுக்கு உங்கள் 'ஹிந்துஸ்தானில்' இருக்கப் பிரியமில்லை. உங்கள் ஆட்சியில் எங்கள் மக்கள் பாதுகாக்கப்பட
மாட்டார்கள். ஆகவே, எங்களைப் பிரித்துவிட்டு விடுங்கள் என்று கூறுகிறோம். எங்களுடைய பாதுகாப்பைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? பேசாமல் பிரித்து விட்டுவிடுங்கள்.
எங்களை ஆள எங்கள் நாட்டில் அறிவாளிகள் உண்டு. எங்கள் நாட்டில் எங்களைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த போர்வீரர்கள் உண்டு. நாங்கள் ஆண்ட இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால், எங்களுக்குத் தனித்திருக்கச் சகல
வசதிகளும் உண்டு.
ஆகவே,'ஆடு நனைகிறதே என்று ஓநாய் கூப்பாடு போடுகிறதாம்' என்பதுபோல, நீங்கள் எங்களுக்காகப் பரிதாபப்படாமல் பிரித்துக் கொடுத்துப் பாருங்கள்!
- பெரியார், ஆழியூரில் 10.1.1948ல் சொற்பொழிவு
Copied form - Arun Pandiyan
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...