Back

Short story

August 26, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

கடிதம் - 01 சகி, நீ நலம் எனத் தெரியும். நானும் அவ்வண்ணம் நலமே. உனக்கும் எனக்குமான சந்திப்பு எனக்கு பிடித்த புத்தகங்களுக்கு இடையில் நிகழ்ந்தது எத்தனை மகிழ்வானது
தெரியுமா. லட்சத் புத்தங்களுக்கு மத்தியில் நமது முதல் அறிமுகம் நடந்ததால் தானோ என்னவோ நாம் அன்பை தாண்டி அறிவார்ந்த விசயங்களைப் பற்றியே அதிகம் பேசுகிறோம் போல. மற்றும்
முன், பின் சந்தித்திராத என் தோள் மீது கைபோட்டு அழைத்து வந்த உன் தோழமைக்கு என் வியப்பில் ஆழ்த்தியது. மேலும், ஒவ்வொரு சந்திப்புக்கும் குறைந்தப்பட்சம் ஒரு புத்தகம்
தருவதாகச் சொல் காதலிக்கலாம் என்கிற என் எதிர்பார்ப்பை, நீ நமது முதல் அறிமுகச் சந்திப்பிலேயே ஒன்றுக்கு மூன்று புத்தகங்கள் தந்து நிறைவேற்றி விட்டாய். ஐ லவ் யூ சகி. சகி,
கொஞ்ச நாளைக்குள் நிறையவே பேசி விட்டோம். ஏற்கனவே சொன்னது தான், நிறை குடத்தில் துளையிட்டது போல என்னை பற்றி மொத்த கதையையும் கொட்டி விட்டேன் உன்னிடத்தில். சகி.. லவ் யூ.
நான் சரியென நினைத்திருந்த விசயங்களை நீ வேறு கோணத்தில் அணுகி என்னை இன்னும் வலுவாக்கி கொண்டிருக்கிறாய். என்னை மேலும் புதியதாக்குகிறாய். என்னை மேலும் மேலும் புடம் போட்டு
கொண்டிக்கிறாய் நீ. இப்போதெல்லாம் எனக்கு, ஒரு நாளின் பெரும்பாலான பொழுதுகள் நமது உரையாடலில் தான் கழிகிறது. உனக்கு எப்படி? இன்னும் சகி, நீ என்னையும் என் எழுத்தையும்
அதிகமாகவே வாசித்து தெரிந்து கொண்டு விட்டாய். மற்றும், இருவரிடையேயுமே போதுமான அளவு வெளிப்படைத் தன்மையும் இருக்கிறது. அன்பும் கூட.மட்டுமின்றி, என் மனம் எப்போதுமே காதல்
வயப்பட்ட தயாராகவே இருக்கும். இதில் நீ என்னை விடவும், வயதிலும் சரி சிந்தனையிலும் சரி மூத்தவளாகவே இருக்கிறாய். சகி சொல், காதலிப்போமா? அடுத்த சந்திப்பு நடக்குமா? அப்போது
புத்தகத்தோடு வருவாயா? நீ கேட்டாயல்லவா, "சகி, இவ்வளவு நேரம் வாசித்து உலர்ந்த உன் உதட்டுக்கும், இடை இடையே வாங்கிய பெரு மூச்சில் விம்மியடங்கிய உன் மார்புக்கும், என்
எழுத்து முத்தங்கள். சீக்கிரம் பதில் எழுது. முடியுமானால் ஒரு கவிதையும்" இது எல்லோருக்கும் பொருந்தும் தானே என்று.? இப்போதும், உனக்கு இது பொருத்தும். லவ் யூ. இன்னும்,
என்னிடம் கடிதம் கேட்க வைத்த உன் மனதுக்கும், என் எழுத்தை பார்த்து, வாசித்து, ரசிக்கிற அந்த கண்களுக்கும் உதட்டுக்கும் நெஞ்சுக்கும் எண்ணிலடங்காத முத்தங்கள். சீக்கிரம்
பதில் எழுதுவாய் என்ற எதிர்பார்ப்பு கலந்த ஆவலுடனும் காதலுடனும் பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...