Back

Article

April 29, 2021

உரையாடல் வழி உயிரடைதல்

SHARE

உரையாடல் வழி உயிரடைதல்

இதுவரை நான் அதிகம் உரையாடியது அவளோடு தான். எங்கெங்கோ தொடங்குகிற பேச்சு தானாக காமத்தில் வந்து முடியும். ஆனால், என்னிடமோ அவளிடமோ எந்த வித முன் திட்டமிடலும் இருந்ததே
இல்லை.

ஆரம்பத்தில் பொதுவாக எதை பற்றியாவது உரையாடிக் கொண்டோ அல்லது வாதிட்டுக் கொண்டோ தான் இருப்போம். ஆனால் எங்களை அறியாமலே பேச்சு முற்றி வளர்ந்து காதல் தாண்டி காமத்தின் வாசலில் நிறக்கும் போது தான் நானும் அவளும் நிதானப்படுவோம்.

இருந்தும், அந்தக் காமம் ஒரு கவிதை போல வார்த்தைகளின் அடுக்களில் அரங்கேறும். சொற்களின் மெத்தையில் காமம் அரங்கேறி முடிந்த பின்னான காலைப் பொழுதில் "நான் ரொம்ப தப்பா பேசறேன். இனி அப்படிலாம் நாம பேசிக்க கூடாது என்று சொல்லு வாள். நானும் சரி என்று ஒப்புக்கொள்வேன்.

ஆனால் மறுநாளும் எங்கோ தொடங்கிய பேச்சு தானாக கூடலை முயங்கி நிற்கும். இது எல்லா உரையாடலிலும் எங்களுக்குள் வாடிக்கையாகவே இருக்கும். ஆனால் எல்லா உரையாடலுக்கு பின்னும் தன்னை குறைபட்டுக் கொண்டு "இனி அப்படி பேசக் கூடாது என்பாள்.

சகி, காதல் நம்மை வழி நடத்தி கொண்டு போயி அது தன் கூடடைகிறது. அது தான் காமம். நானோ நீயோ திட்டமிட்டு அதை நடத்தவும், நிறுத்தவும் முடியாது. மழை வந்து மண்ணடைவதை தடுத்தவர் யார்? இன்னும் சகி, உன்னோடு வார்த்தைகளால் அரங்கேறும் காமம் எத்தனை கலை நேர்த்தியோடு இருக்கும் தெரியுமா? ஆமாம் உனக்கு நினைவிருக்கிறதா?

"அவசரப்படுதலற்று ஆற அமர அரங்கேறும் காமம் அத்தனை கவித்துவமானது." - (07/06/2018)என்று நானெழுதிய வரிகள். இது நம் உரையாடலின் நினைவாக எழுதியது தான் சகி.

நமக்குள் அவசரப்படுதலே இருக்காது. நத்தையின் நகர்தலைப் போல மெல்ல அது தன்னிடஷ்டபடி நம்மிள் இருந்து நம்மிடையே வெளிப்பட்டு நிற்கும்.

சகி ஒரு பழைய கவிதை இப்போது சொல்ல வேண்டுமெனத் தோன்றுகிறது. விரல் மீட்ட - இதழ் மீட்ட நாதம் பெருகுகிறது. உறை களைந்த வீணை க்கு நாதம் உடையாவது போல் உனக்கு நாணம் உடையாகிறது. உன் வீணைத் தொடை மீட்டி தொடை இடை மீட்டி நாதம் ததும்ப மீதம் மீட்டி நானும் நீயும் ஓய்ந்த பின் அதே இறுதி அதிர்வோடு அருகே அருகே கிடக்கின்றன நம் உடல்கள். நம்மிலிருந்து மௌனமாய் எழும்பி அறை முழுதும் விரவுகிறது காதல் இசை. ஆமாம் சகி, காமம் முடிந்த பின்னும் காதல் நமக்குள் இசையாய் மௌனமாய் எப்போதும் எஞ்சி நிற்கத்தான் செய்கிறது.

அது தான் நம்மை அடுத்த உரையாடலில் கைப்பிடித்து வழி நடத்தி போகிறது. ❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...