Back

Short story

February 13, 2021

சிறுகதை

SHARE

சிறுகதை

இப்போதைய தோனுதல்கள் :-

♥️ வெளியில் வெயில்,
மஞ்சள் தேய்த்து குளத்தவள்
உடலில் இருந்து வழியும் நீராய்
ஓடிக் கொண்டிருக்கிறது.

♥️ முதன் முதலாய் நடக்கத் தொடங்கிய குழந்தைப் போல,
ரசித்து ரசித்து சொல்லுதிர்க்கும் கவிஞன் போல,
பொறுத்து பொறுத்து அடி வைத்து
போய் கொண்டிருக்கிறாள் அந்தப் பாட்டி.

♥️ ஆர அமர, பொறுத்து அவசரமில்லாமல் நிகழத் தொடங்கும் காமத்தை விட பேரழகான கலை வேறில்லை என்றே கருதுகிறேன்.

♥️பெரும்பாலும், பெண் தன்னுடலை ஒரு கலைக் கூடமாக முன் வைக்கிறாள்கள். ஆனால் நாம் தான் அதை காமத்தின் தூண்டு கோலாகவே பார்த்துப் பழகி விட்டோம்.

♥️அவளைத் துகிலுரித்தான் அவன். அவள், அவனிடமிருந்து விடு பட்டு போய் தன் முழங்கால்களை மடித்து மார் மறைத்து அமர்ந்து கொண்டாள். அவன் அவளை ஓவியம் வரையத் தொடங்கினான்.

♥️ வண்ணத்துப் பூச்சியின்
இதயம் என்பது
அதன் சிறகு தானோ என்னவோ?
இத்தனை வேகமாய் துடிக்கிறது.

♥️இலைகள் கூட
காய்ந்து உரிந்து கொண்டிருக்கும்
இந்தக் கோடை வெம்மையில்
எந்தப் பூவில்
தேன் தேடி திரிகிறது
அந்தப் பட்டாம் மூச்சி?

♥️ எதிர் எதிரே
இரு ஆடி பொறுத்தப்பபட்ட
அறைக்குள் நிற்பவனின்
பிம்பங்கள் போலவே
அவரவரில்
ஆயிரம் பேர்.

  • பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...