Short story
August 9, 2020
சிறுகதை
SHARE

கலப்பு மணங்கள் சாதிய கட்டமைப்பில் ஒரு குறைந்த பட்ச மாறுதலையாவது கொடுக்கும்.
இதையே அண்ணல் பெரியார் என்று எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். அதையே நானும் சொல்கிறேன்.
கலப்பு திருமணங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் சாதியின் ஆதிக்கம் நிச்சயம் குறையும்.
எனக்கு தெரிந்த அண்ணா ஒருவர் தனதல்லாத வேறு சாதி பெண்ணை காதலித்து பல போராட்டங்களுக்குப் பிறகு கல்யாணம் செய்துக் கொண்டார். ஆரம்பத்தில் எதிர்ப்பு இருக்கத் தான் செய்தது. அந்த அண்ணாவின் மனைவியோடு
அவரின் அம்மா அப்பா என யாரும் பேசாமல் ஏதோ ஒரு விலங்கைப் போலத் தான் நடத்தினார்கள். மட்டுமன்றி, அந்த அண்ணாவை தவிர இந்த வீட்டில் இருந்து அந்த வீட்டிற்கு யாரும் எதற்கும் செல்லாமல் தான்
இருந்தார்கள். ஆனால், நாளாக நாளாக எல்லோரும் மாறி இருக்கிறார்கள். முதலில் கொஞ்சம் தங்கி தயங்கி போய் வந்து கொண்டிருந்தார்கள். இதனிடையில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. மகப்பேறு காலத்தில் அந்த
அண்ணி அவர்களின் அம்மா வீட்டில் இருந்ததால் பேரனைப் பார்க்க போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார்கள். போக வர சம்மந்திகளுக்கு இடையில் உள்ள அந்த சாதிய தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் அறுபட ஆரம்பித்து
விட்டது. இப்போது எல்லோரும் ஒன்னும் மண்ணுமாகத் தான் இருக்கிறார்கள்.
அன்பு வந்து விட்ட பின்பு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.
💙
மேலும், இதுபோலான கலப்பு மணங்களை ஊக்குவிக்க வேண்டும். கலப்பு மணங்களின் மூலம் சாதிய பேதமற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை ஐயமற நம்புகிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...