Back

Short story

June 17, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

நேசித்து அழுததை விட நான் வாசித்து அழுதது அதிகம்.. நான் வாசிக்கும் கதைகளிலும் கவிதைகளிலும் வரும் ஒவ்வொரு பாத்திரமும், அதன் வலிகளும் உணர்ச்சிகளும், இறப்பும் என்னை மிகவும்
பாதித்து விடுகின்றன. நான் அதிகபட்ச அன்பை உணர்வதெல்லாம் வாசிப்பின் வழியாக மட்டுமே. எப்படியான சமூகத்தில் எப்படியான மனிதர்களோடு நான் வாழ வேண்டும் என்று எண்ணுகிறேனோ
அப்படியான மனிதர்களோடெல்லாம், என்னால் வாசிப்பின் வழியாக பரஸ்பரம் பண்ணிக் கொள்கிறேன். வாசிக்க வாசிக்க அவர்களின் துக்கங்கள் என்னுடையதாக ஆகி விடுகிறது. அவர்களை நான்
நிஜத்தில் தேடுகிறேன். அவர்களோடு குறைந்த பட்சம் ஒரு கை குலுக்கலையாவது செய்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இது நிஜத்தில் முடிவதில்லை. அதனாலே என்னவோ அவர்களோடு
உரையாட வாய்ப்புத் தருகிற புத்தகங்களின் மீது எனக்கு அலாதி பிரியம். வாங்கி வைத்திருப்பதில் இன்னும் கால் வாசி புத்தகங்கள் வாசிக்கப்படாமல் இருக்கின்ற போதிலும் புத்தகம்
வாங்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் தீரவில்லை. எவ்வளவு புத்தகங்கள் சேகரித்து வைத்தாலும் அவை, அரிசி பருப்பை போலவோ உணவு பொருட்கள் போலவோ ஒரு நாளும் கெட்டுப் போய்விடுவதில்லை.
மாறாக அவை மனத்தூய்மை தருகின்றன. மனதை செம்மையுறச் செய்கின்றன. அவை வாழ்வின் ஏற்ற இறங்களை போதிக்கின்றன. என்னை அன்புள்ளவனாய் ஆக்குகின்றன. புரட்சிக்கான மற்றும்
மாற்றத்திற்கான விதையை மனத்துள் தூவுகின்றன. நான் வாசிக்கும் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பாத்திரமும் நான் வாசிக்க வாசிக்க என் கண் முன்னே அப்படியே உயிர் கொண்டு எழுகின்றனர்.
அவர்களே என்னை ஆசுவாசப்படுத்து கின்றனர். அவர்களே எனக்கு துணையாக இருக்கின்றனர். அவர்களே எனக்கு வாழ்தலை பற்றியும் வாழ்க்கையை பற்றியும் அனுபவங்களை சொல்லித் தருகின்றனர்.
அவர்களை நான் காதலிக்கிறேன். அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தும் புத்தகங்களை அவர்களை விடவும் காதலிக்கிறேன். வாசிப்பை நேசிப்போம். பட உபயம் :- __freezing_seconds__ (
@instagram) 💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...