Back

Short story

April 30, 2020

சிறுகதை

SHARE

சிறுகதை

என்னால் எதாவது முடியும் சாதிப்பாய் என்றெல்லாம் சொல்லி கொண்டு ஊக்குவிக்கிறேன் என்று வராதீர்கள். எனக்கு தெரியும், நான் ஒன்றுக்கும் உதவாத காகிதமாய் இருப்பது. வாய்க்கால் நீர் ஒழுங்காய் போகக்கூட
" உதவாக் கரை" நான். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்க வில்லை. சொல்லுகிற படி ஒன்றையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு ஒரு மாதமாய்
படிக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.( இடையில் வேறு புத்தகங்கள் சிலது படித்தேன். ஆனாலும் அதை முடிக்க வேண்டாமா? ) இனியும் அப்படித் தான் போகும் போலத் தெரிகிறது. இதற்கும், "இனியாவது
திருந்தலாமே என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள்." இப்போதைய விரக்திக்கு செத்து விட்டால் தேவலாம் என்பது போலொரு எண்ணம். சொல்ல முடியாது. இதை எழுதி முடித்தக் கையோடு வீட்டினுள் சுற்றிக்
கொண்டிருக்கும் ஃபேனில் தொங்கினாலும் தொங்கி விடுவேன். இந்த ஊரடங்கோடு என் உயிரும் அடங்கி விடட்டுமே.?
எழுதி முடிக்கும் போது என்ன மனநிலையில் இருப்பேன் என்று தெரியவில்லை. மனிதன் மனம் தான் நொடிக்கு ஆயிரம் முறை மாறுமே. எதற்கும், அப்படி சாவதாய் இருந்தால் சாவதற்கு முன் கொஞ்சம் பேசி விட்டு சாகிறேனே?

மேலே, எழுதினதில் ஊரடங்கு உயிரடங்கு நல்லாருக்கு ல்ல. ஆனால் நான் அதை நல்லா இருக்கிறது என்பதற்காக சொல்ல வரவில்லை . இந்த கொரோனாவின் ஊரடங்கு காலத்திலும் பொருட்களுக்கு விலையேற்றி விற்பது ( எங்க ஊர்
ல ரெண்டு ரூவா டீத்தூளு நாளு ரூவா. காசு வெறி பிடிச்ச காஞ்சப் புண்ட மவனுக. - தப்பா எடுத்துக்க வேணாம் அது ஊர் வழக்கு. தப்பா எடுத்து கிட்டா லும் ஒரு மயிரும் இல்ல எடுத்துகோ ங்க. ) சாதி சண்டை
போடுவது, நோய்மையைச் சொல்லி தீண்டாமையை பின்பற்றுவது என்று மனிதாபிமானம் இல்லாத வக்கிரத் தனமான செயல்களில் ஈடுபடும் இவர்களை எல்லாம் என்ன செய்வது.? நான் தூக்கில் தொங்கப் போவதைப் போல அவர்களை
தூக்கில் தொங்கப் போடுங்கள். செத்து தொலையட்டும்.
ஐயோ, சாகப் போகிற சமயத்திலாவது கொஞ்சம் நல்ல விசயங்களைப் பற்றி பேசுவோமே. நல்ல விசயம் என்றால்? மனதுக்கு நெருக்கமாகி விடுகிற விசயங்கள் எல்லாமே நல்ல விசயம் தானே? அப்படி என்றால் எனக்கு கவிதை,
புத்தகம், பெண். உங்களுக்கு?
எனக்கு இப்போது, நான் இருக்கிற இந்த சூழலே ஒரு கவிதைப் போலத் தான் இருக்கிறது.
வானில் பிறை நிலா. என்னைச் சுற்றி அரையிருள். மெல்லியக் காற்று. வீட்டில் களி மீன் குழம்பு. அம்மா எப்போதும் தட்டில் ரெண்டு மீன். அரையுருண்டை களியைப் போட்டு வைத்து விடுவாள். இதைப் பற்றி அண்மையில்
ஏதோ கவிதை கூட எழுதினேன். ஆனால் அந்த கவிதைய எழுதிய தினத்தன்று வீட்டில் கருவாட்டு குழம்பு. ம்ம்ம்....

இன்று அம்மா
களி கிண்டி
கருவாட்டுக் குழம்பு வைத்திருந்தாள்.

ரெண்டு முறை
என் கையை கிழித்த
விளிம்பொடிந்த
அதே ஈயத் தட்டில்
நிறை சாறோடு
அரையுருண்டை களியும்
ரெண்டு முழு மீனின்
கருவாட்டுத் துண்டையும்
போட்டு வந்து வைத்தாள்.

தட்டில்
நீரிருந்து
மீன் இருந்து
மீனின் நீச்சல் மட்டும்
இல்லாமல் போயிருந்தது கண்டு
எனக்கு
தின்ன வாய் இருந்தும்
தின்னும் ஆசை இருந்தும்
வயிற்றில் பசி மட்டும் இல்லாமல் போயிருந்தது.

சிரிப்பாய் இருக்கிறது இல்லையா? சாவதாய் சொல்லி விட்டு சாப்பாட்டைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறான் பயித்தியக்காரன் என்று? சரி சமைத்ததைப் பற்றி வேண்டாம். சமைந்ததை பற்றி பேசலாம். புரியலையா? அதான்
பெண்ணைப் பற்றி தான் சொல்கிறேன். பெண்களை ஏன் எனக்கு இவ்வளவு பிடித்தது? அவர்கள் மிருதுவாக, பொறுமையோடு இருப்பதாலா? தெரியலையே? But, they are so beautiful. Cute. குழந்தைமையோடு அணுகிற போது எல்லா
பெண்ணும் தாய் தான் இல்லையா? ஆமாம். கள்ளங் கபடம் இல்லாமல் சுத்த அன்புக்கான ஏக்கத்தோடு அணுகி பாருங்கள் எல்லா பெண்ணிடத்தும் தாய்மை உண்டு.( நான் உணர்ந்து இருக்கிறேன்) தாய்மை என்பதே ஒரு
அழகுணர்ச்சி. ஆனால் இந்த பெண்களிடத்து அதையும் கடந்த அழகியல் எல்லாம் இருக்கிறது. அவள்களின் உடலமைவே ஒரு கவிதை மை தான். காலங் காலமாய் எழுதித் தீராத கவிதைகள் அவள்கள். பெண்ணை பிடிக்காதவர்கள் யாரும்
இருக்க முடியாது இந்த உலகில்.
தின்மையும் மென்மையும் குழைய குழைய செய்யப்பட்டவள்கள். புராணக் கதைகள் சொல்கிறதைப் போல இந்த உலகை படைத்ததது கடவுள் என்கிற வஸ்துவாக இருந்தால், எதற்காக கும்பிட வேண்டுமோ இல்லையோ பெண்ணை படைத்த ஒரே ஒரு
காரணத்திற்காக அந்த வஸ்துவை விழுந்து விழுந்து கும்பிடலாம்.இப்போது கூட ஏற்கனவே எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

மார்வுறத் தழுவி என்னை
மடியினில் கிடத்தி எந்தன்
சோர்வினை நீக்கி நீயும்
சொர்க்கம் சேர்த்தாய்! அந்த
கார்முகில் போலக் கண்ணே
குளிர்கை தொட்டுக் குளிர்ந்தாய் !
தேர்வரும் அழகில் எந்தன்
தேவதை நடந்து வந்தாய்!

தாயென உன்னை சொல்லல்
தகுமோ? அன்பே வாரா
நோயது வந்து பாயில்
நலிந்து நான்வீழ்ந் தாலும்
சேயென நினைத்து நல்ல
சாறு கலந்து சோறூட்டி
வாயி னித்தாய்! என்ன
வரமடி எனக்குநீ வாய்த்தது.

இன்னும்நான் என்ன சொல்ல
உன்னிள முலையுங் குத்தாமல்
பொன்னார முங்குத் தாமல்
பூவென மெல்லத் தழுவி
உன்னெட்டுச் சாணுடலில் சாராயம்
உண்ண வேண்டும் வாடி!
நன்னூலடி நீயெனக்கு! பெண்ணே
நாணம் விட்டு நெருங்கு!

கட்டிலில் கிடத்தி உன்னில்
கான மெட்டி சைப்பேன்
பொட்டென நீயிரு! உன்னில்
போதை தருமிடம் தேடி
தொட்டு தடவி என்பல்
படாமல் கடிப்பேன்! அந்த
சுட்டெரிக்கும் சூரியன் வருமுன்
சுகக்கதை எழுதி முடிப்பேன்.!

மீ்ண்டும் ராத்திரி வரும்வரை
மீனாய் துடிப்பேன்! என்னாண்மைத்
தூண்டும் உன்னழகை வண்ணத்
தூரிகை துணையுடன் வடிப்பேன்!
வேண்டாம் பகலென கடவுளை
வேண்டித் துதிப்பேன்! வேண்டும்
வேண்டும் என்றே உன்னை
வண்டாய் மாறித் துளைப்பேன்!

இதை விட இன்னும் கொஞ்சமாய் இடை தெரிய, புடவையை தளைய தளைய ஏசலும் கோசலுமாய் கட்டிக் கொண்டு வந்து நிற்பாள்களே ஐயோ அது கொள்ளை அழகு. இப்போது அப்படி ஒரு பெண் வந்து நின்றால் எனக்கு சாகிற ஆசையே போய்
விடும். புத்தகத்தை போல புரட்டி புரட்டி படித்துக் கொண்டிருப்பேன். போதும் இதுக்கு மேலே போனாலும் சரி கீழே போனாலும் சரி அது ஆபாசமாகி விடும்.
சாகிறேன் என்று சொல்லி விட்டு இப்படி உங்களோடு சல்லாபம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். ஆமாம் உங்களுக்கு யாருக்கேனும் தெரியுமா காரணமே இல்லாத மனோ விரக்திக்கு மருந்து? மனமுறிவுக்கு அன்பே மருந்தென்று
சொல்லியது நான் தான். ஆனால் அன்பே மனதை முறிக்கும் போது எனக்கு சாவு தான் சரியான மருந்தாக தோன்றுகிறது. இத்தனை நாளும் தற்கொலைக்குப் பின் வருகிற புரளிக்கு பயந்தே சாகாமல் இருந்தேன். ஆனால் செத்த
பின்னே யார் என்ன பேசினால் என்ன? அந்த பேச்சுக்கள் என்னை பாதிக்க போகிறதா என்ன? இல்லையே? இதுவரை வாழ்ந்து ஒன்றும் கிழிக்க வில்லை. இனி வாழ்ந்தும் ஒன்றும் கிழிக்க வில்லை. செத்தாலும் ஒன்றும்
கிழிக்கப் போவதில்லை. இருந்தாலும் எதற்கு பூமிக்கு பாரமாய், உயிர்க் காற்றை விரயம் பண்ணிக் கொண்டு வாழனும். செத்து அழியலாம். நாக்கு தொங்க தூக்கில் தொங்கலாம். ஐயோ... எதற்கு இந்த லாம் லாம். செத்து
அழியறேன். நாக்கு தொங்க தூக்கில் தொங்குறேன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...