Short story
March 25, 2020
சிறுகதை
SHARE

நாடகம் :- சிறப்பு. கண்ணில் நீர் துளிக்க செய்து விட்டது. ஆரம்பத்தில் சின்ன சின்ன சொதப்பலோடும் பதட்டோடும் நகர்ந்த நாடகம் பாதி கட்டத்திற்கு மேல் பார்வையாளர்களைப் பரவச
நிலைக்கு கொண்டு போய் விட்டது. அந்த "தம்பிரான்" தம்பி அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து விட்டார். அவருக்கு ஆயிரம் லவ் யூக்கள். மேலும் அந்தக் கோமாளி பாத்திர
வடிவமைப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். கோமாளிக்கு அதிக கோமாளித் தனம் தரப்படவில்லை. ஆனால் அந்த கோமாளி பாத்திரத்தை ஏற்று நடித்த தம்பி நன்றாகவே
நடித்திருந்தார்.மேலும், அந்த நாலுப் பெண் பிள்ளைகள் மற்றும் புரளி பேசிய ரெண்டு பிள்ளைகள் என அனைவரும் தன் பாத்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்து விட்டார்கள். அதிலும்
துடைப்பத்தை கையில் வைத்துக் புரளி பேசிய பெண்ணின் உடல் மொழி மிக மிக அருமை. அவளுக்கு பிரியங்கள். இன்னும், நாம் நடந்து முடிந்த கடந்த கால விசயங்களையே எடுத்து கூத்தாகவும்
நாடகமாகவும் செய்து கொண்டிருக்கிறோம். இதைச் சொல்ல கலை தேவை இல்லை. அதற்குத் தான் வரலாற்று ஆசிரியர்கள் இருக்கிறார்களே?. கலை மக்களை, மக்கள் சிந்தனையை முன்னோக்கி
வருங்காலத்தை நோக்கி, எதிர்காலத்தை எதிர்கொள்கிற பக்குவத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும். பாரதியை முக்காலம் உணர்ந்த கவிஞன் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் அவன் இந்திய
சுந்திரம் அடையும் முன்பே "ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோ மென்று " சுதந்திர உணர்ச்சியை ஊட்டியவன். கலை என்பது இப்படியான நோக்கத்தோடு
உணர்ச்சி கலந்து நகர வேண்டும் என்பது என் ஆசை. வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...