Short story
July 15, 2019
சிறுகதை
SHARE

#சுஜதாஆஆஆஆஆஆஆ! அண்மையில சுஜாதா வின் என் இனிய இயந்திரா மீண்டும் ஜீனோ விபரீதக் கோட்பாடு கரையெல்லாம் செண்கப்பூ ஆயிரத்தில் இருவர் நிர்வாணமாக நகரம் ஆகிய புத்தகங்களை
படித்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தேர்ந்தவை. #என்_இனிய_இயந்திரா #மீண்டும்_ஜீனோ என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய இரு நாவல்களும் முழுக்க முழுக்க
அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவை. அதில் சிபி, நிலா, மனோ, ரவி, ரவியின் ரோபோட் நாயான ஜீனோ, டாக்டர் ரா, அவருடைய உதவி ஆகியோர் முக்கிய பாத்திரங்கள். மேலும் ஜீவா என்பது
பாத்திரமல்லாத பாத்திரம். இது ஒரு ஹாலோகிராம் பிம்பம். இந்த கதை 2020 ல் நடக்கிற படியாக எழுதி இருப்பார். இந்த கதை நிகழும் காலக் கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் எண்களின்
அடிப்படையில் குறிப்படப் படுகிறான். அந்த எண்ணின் கீழான data க்கள் அழிந்து விட்டால் அவன் இறந்து விட்டதாக அர்த்தம். அதாவது இப்போது ஆதார் எண்ணை போல். உண்மையிலே சுஜாதா ஒரு
அறிவியல் தீர்க்கதரிசி. எப்படி நடக்கப் போகிற ஒரு விசயத்தை முன் கூட்டியே எழுத முடியும்? ஆச்சரியம் தான். // // இன்னும் சில ஆண்டுகள் உலகம் எண்களால் மட்டுமே இயங்கப் போகிறது.
ஆமாம், தற்போது பணம் என்பதே வாங்கி கணக்கில் இருக்கிற digit ஆகி விட்டது. அதாவது digital money. இது மட்டும் இல்லாமல் பள்ளி கல்லூரிகளில், எங்கேனும் q ல் நிற்கிற போது,
மேலும் நாம் ஒரு இந்திய பிரஞை என்பதும் கூட எண்ணால் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நினைத்து பாருங்கள் நம் வாழ்க்கையில் பெரும்பாலான செய்களில் எண்கள் தான் மிக முக்கியமான
இடத்தை பிடிக்கின்றன. Roll no, phone no, door no, Register no, account no, adhar no... Etc. இதிலிருந்து பின்னாளில் எண்கள் மட்டுமே ஒரு மனிதனின் அடையாளம் ஆகப் போகிறது
என்பது தெளிவாகிறது. // // கதையிலிருந்து... "என் கணவர் வீட்டில் இல்லை ." - நிலா. “பயப்படாதீர்கள். கற்பழிக்க மாட்டேன்." ரவி. “உங்களைப் பார்த்தாலும்
கற்பழிப்பவர் போல இல்லை.” // // மேலும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நூல்களை வாசிக்கிற போது எந்திரன் படம் இந்த கதைகளின்
தாக்கத்தில் அல்லது இதிருந்து உருவாக்கப்பட் படம் போலத் தோன்றுகிறது // // #விபரீதக்_கோட்பாடு இது முழுக்க முழுக்க ஆன்மிகம் மற்றும் ஆன்மிக மூட நம்பிக்கை சார்ந்த கதை. கணேஷ்
வசந்த் வருகின்றார்கள். ஒரு கொலை நடக்கிறது. அதற்கான காரணம் என்ன? எப்படி நடந்தது? என்பதனடிப்படையில் கதை நகர்கிறது. இதிலும் சில உண்மைகளை உடைத்திருப்பார். என்ன தான்
அறிவியல் வளர்ந்து விண் முட்டி நின்றாலும், மனிதரிடத்தில் ஆன்மீகம், சோசியம் , உயிர் பலியிடல் போலான மூட நம்பிக்கைகள் வேர் களைய முடியாதவை என்பதை சொல்லி இருப்பார். // //
#கரையெல்லாம்_செண்பகப்பூ இது ஒரு கிராமத்தில் நடக்கிற கதை. இடையிடையே நிறைய நாட்டுப்புற பாடல்கள் வந்து வாசிப்பிற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தி உற்சாகம் தருகின்றன. // //
கதையிலிருந்து கல்யாணராமன் அவளிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டான். வெட்கப்பட்டான். சொல்லப்போனால் ஒரு பெண் அவன் மேல் அவ்வாறு பட்ட முதல் தடவை அது. “இனிமே இந்த மாதிரி
விளையாடாதீங்க. அப்புறம் நிஜமாவே ஏதாவது ஆபத்துன்னா வரமாட்டேன்." "டேக் இட் ஈஸி யா! என்று மறுபடி சிரித்தாள், "கல்யாண ராமன்! நீங்க என்னை ஏமாத்திட்டீங்க?
பிரயோசனம் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கிட்டு சடாலை னு அப்படியே என்னை பிடிச்சு ஒரு கட்டாக்கட்டி உதட்டில் ஒரு... // // #ஆயிரத்தில்_இருவர் க்ரைம். கணேஷ் வசந்த்
வரும் குறு நாவல். கதையிலிருந்து கணேஷ் டெலிபோனை சுழற்ற, வசந்த் அங்கிருந்து "இப்ப எதுக்கு மகேந்திரனுக்கு போன்?” என்றான். ''சில நேரத்தில் என்னை கூட
ஆச்சரியத்தில் ஆழ்த்தறடா நீ. எப்படித் தெரியும் உனக்கு நான் மகேந்திரனுக்கு தான் போன் பண்றேன் னு?'' "அவர் போன் நம்பர் இரண்டில் ஆரம்பிக்கிறது. உங்க முதல்
கிர்ரக் ரெண்டும் சுருக்கமாக இருந்தது.” // // சுஜாதா எனும் ஆளுமையின் ஆகச் சிறந்த பாத்திர படைப்பு என்றால் அது வசந்த் தான். சுறு சுறுப்பான சுட்டித் தனமான அதே சமயம்
புத்திசாலித்தனமான பாத்திரமும் கூட. இந்த பாத்திரம் கணேசை மட்டும் அல்ல நம்மை கூட வியப்பில் ஆழ்த்தும். சுஜாதா வின் வாசகிகளில் சில பெண்கள் வசந்த் காதலிக்க கூட செய்கிறார்கள்
என்பது நம்ப முடியாத உண்மை. அது போலனா ஆணை தேடிக் கொண்டுமிருக்கிறார்கள். // // #நிர்வாண_நகரம் உளவியல் தொடர்புடைய கதை. அதே சமயம் க்ரைம். சிவராஜ் எனும் பாத்திர சித்திரிப்பு
தேர்ந்தது செயல். சிவராஜ் - படித்தவன் - படிப்புக்கேற்ற வேலையற்றவன் - தனக்குண்டான அங்கீகரிக்காரத்தை அல்லது தன்னை பிரபலப் படுத்திக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். கதையோட்டம்
மிக அற்புதமானது. // // கதையிலிருந்து ரூமுக்கு திரும்பியபோது பாலு ஒரு பெரிய நனைந்த போட்டோவை உலர வைத்து கொண்டிருந்தான். தலையைச் சாய்த்து பார்த்தேன். அந்தப் பெண் இடது கையை
கவிழ்ந்த 'எல் போல வளைத்துக் கொண்டு அதனுள் தலையை திருப்பிக் கொண்டிருக்க மார்ச் சுற்றியிருந்த புடவைக்கு அதிக வேலையில்லாமல் வேண்டுமென்றே விலக்கப்பட்டிருந்தது.
"எப்படி போஸ்?" என்றான் பாலு. "இந்தப் பாதி பாதிக்கு பேசாம அவுத்து காட்டிடலாம்." "அதிலே சாரம் இல்லே ." "இது எதுக்கு?" "ஒரு
டூத் பேஸ்ட் விளம்பரத்துக்கு பிளாக் எடுக்க அனுப்பனும். உலரமாட்டேங்கறது சனி." "சிரிக்க கூட இல்லியே. டூத்பேஸ்ட் டை மார்லயா தேச்சுக்கப்போறா?” "என் கணவர்...
டூத் பேஸ்ட் உபயோகிக்கிறார் என்று கீழே காப்டன் கொடுக்க போறோம்." "சமூகக் கறையாண்டா நீங்கள்லாம்." // // சுஜாதா எனும் ஆளுமை இலக்கியத்தில் தொடாத இடமில்லை. என்
மற்றும் பல வாசகர்களின் வியப்புக்குரிய எழுத்தாளர். தான் கற்றுக் கொண்ட மொத்த அறிவையும் எழுத்துக் கென்றே செலவிட்டிருக்கிறார். எழுதுதலையே தன் ஆத்ம பணியாக கொண்டு இயங்கி
இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இவரை வாசிக்க சலிப்பை விட வியப்பு தான் அதிகமாகிறது. சுஜாதா என்பது யாரும் தொட்டு விட முடியாத சிகரம். வாசித்து பாருங்கள்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...