Short story
July 9, 2019
சிறுகதை
SHARE

செவிடன் காதிலூதும் சங்கை போல அன்பின் கீர்த்தனைகளை பாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். நான் கேட்டும் கேளாதபடி உணர்ந்தும் உணராதபடி ஒட்டியும் ஒட்டாதபடி பேசிக் கொண்டும் பழகிக் கொண்டுமிருக்கிறேன்.
ஏனெனில் நம்மீதான அன்பை உணர்தலில் தொடங்குகிறது பிரிய பிரச்சினைகள். ஒருவரின் தீவிரமான நேசத்தை உணர்ந்தறிகிற தருணமே நம் சுதந்திரத்தில் பாதி இழக்கிறோம்.
அன்பு இருள் போன்றது. எப்படி இருள் எவ்வண்ணம் கொண்ட பொருளையும் கருப்பாய், தன் நிறத்திற்கு மாற்றி விடுகிறதோ அப்படி தான் அன்பும். நம்மை அதன் எதிர்பார்ப்புக்கேற்றபடி மாற்றும். ஆமாம், தீவிரமான
பரிசுத்த அன்பு எதையும் சாதிக்க வல்லது. இன்னும் தெளியச் சொன்னால் இருளில் பத்தடுக்கு மாடியும் பனை ஓலை குடி சையும் ஒன்று . மண்ணும் மதிப்பு மிக்க பொன்னும் ஒன்று. அன்பிலும் இப்படியே. தூய அன்பிற்கு
எல்லாம் அழகு. அன்பிற்கு உயர்ந்தது தாழ்ந்தது தெரியாது. அன்பிற்கு கருப்பு சிகப்பு தெரியாது. அன்பு அழகானது. அதே சமயம் முட்டாள் தனமானதும் கூட. அன்பு செய்யப்படுவதில் எவ்வளவு ஆனந்தமிருக்கிறதோ
சுகமிருக்கிறதோ அதே அளவிலான வலி இருக்கிறது. வதை இருக்கிறது. சுமை இருக்கிறது. ஒருவரின் அன்பை ஏற்று நடப்பது என்பது நம் சுயத்தை நாமே கொன்று போடுவதற்கு சமம். எனவே தான் நான் என் மீதான யாரின்
அன்பையும் உணர்வதில்லை. உணர்ந்தாலும் கொண்டாடிக் களிப்பதில்லை. ஏற்று நடப்பது மில்லை. ஏனெனில், எனக்கு என் சுயம் முக்கியம்.
பி. கு : நிபந்தனையற்ற, எதிர்பார்பற்ற, உறவு மற்றும் உரிமை கொண்டாடுகிற, தன்னுடைமை ஆக்குகிற எண்ணமற்ற பிரியம் செய்யத் தெரிந்திருந்தால் பழகுங்கள். இல்லையேல் தாராளமாய் விலகுங்கள்.
❤️அன்பே சிவம். அதுவே எமன்❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...