Short story
April 18, 2019
சிறுகதை
SHARE

நினைவின் புரட்டல்கள்.
நீயற்ற பொழுதுகளில்
வாழ்தல் சாபமாகிறது.
உதடல்லாத மற்ற (புற)இடங்களில்
கொடுக்கப் படுகிற
முத்தங்கள்
பேரன்பின் குறியீடுகள்.
பதின்ம வயது மங்கையை போல
குண்டுங் குழியுமாய் இருந்த சாலையில்
ஏறி இறங்கி குலுங்கி நகர்கிறது அந்த சிற்றுந்து.
பூ மீது பனித்தூவலை போல
அவள் முகத்தில்
பருக்கள்.
காற்றிலே அலை அலையாய் எழும்பிக் கலையும் உன் கூந்தல்
என்னை விழுங்க விரியும் கருங்கடலடி..
எல்லா இழப்புகளையும்
மயிரே போச்சென்ற
மனநிலையோடு
கடக்க பழகிவிட்டால்
வாழ்தல் எளிதாகி விடும்.
பிரிதலின் நிமித்தமாக கொடுக்கப் படுகிற
முத்தத்தின்
ஈரம்
முற்றிய பிரியத்தின்
முதல் ஸ்பரிசம்.
உன் குறைகளை நானும்
என் குறைகளை
நீயும்
அனுசரித்து போவதே
காதலாகிறது.
தேவை வருகிற பொழுதில்
தேடப்படுவோம்.
மற்ற நேரத்தில்
மயிரளவு கூட மதிக்கப் பட மாட்டோம்.
அவ்வளவு தான் அன்பென்பது.
திருத்தாத புருவம் கண்ணை உறுத்தாத உடை
இடது பக்க மூக்கிலிருக்கிற கல் வைத்த மூக்குத்தி
காது மடல் உரசுகிற கூந்தலை ஒதுக்கும் போது சப்தமிடுகிற நான்கு கண்ணாடி வளைவி
மார் விட்டும் இடை விட்டும் நழுவுகிற சேலை முந்தானையை சரி செய்வதற்காக அடிக்கடி கைகட்டி நிற்கிற இயல்பான கள்ளத்தனம்
இதனை விட வேறென்ன கூறுகள் வேண்டி இருக்கிறது
உன்னை அழகி என்று சொல்வதற்கு.
மீட்டெடுத்து
பத்திரப் படுத்துவதற்குள்
மீண்டும்
தொலைந்து போகிறாய்.
பின் தொடர்தல்
நின்று விட்டால்
பிரியங்கள் குறைந்து விட்டதாக
அர்த்தமில்லை.
காலப் போக்கில்
எல்லாம் மாறி போகும்
என்பதெல்லாம் பொய்.
காலம் மயிரை நிறம் மாற்றும்
உடலில் சுருக்கம் உண்டு பண்ணும்.
அவ்வளவு தான்
மற்றபடி மனதளவில்
நீங்களாக தான் மாற வேண்டும்.
மாறி விடுங்கள்.
உண்பன நாழியாம்
உடுப்பவை இரண்டாம் - பின்பு
என்புடல் வளர்க்க எதற்குத்தான் பணமோ?
யானறியேன்.
காடு வாழ் விலங்குகென
கோடுகளன்றி
வாழ்ந்திட துணிந்தேன்.
பாடு மனமே பணம் இன்றி வாழ்தல்
எளிதென்று.
முத்தம் வைக்கும்
உதடுகளை விட
முடி கோதும்
உள்ளங்கையும்
விரல்களும்
பாசம் அதிகமுள்ளவை.
எங்கேயோ இருந்தபடி
என்னை இயக்கும்
உன்னை
கடவுள் என்பேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...