Short story
February 20, 2019
சிறுகதை
SHARE

பட்டச் சாராயம் குடிச்சிருக்கிங்களா? இல்ல பார்த்திருக்கிங்களா? அந்த நெடியவாச்சும் நுகர்ந்திருக்கிங்களா? நாட்டு சக்கரை போட்டு சுண்ட சுண்ட காய்ச்சின சாராயம் அப்படி
மணக்கும்.... அது எவ்வளவு காட்டா இருக்கு னு தெரிஞ்சிக்க ஒரு துண்டு கட்டைய சாராயத்துல நனைச்சு பத்த வச்சா கிடு கிடு னு எரியும்.. எனக்கு அத பாத்தாலே ஜிவ் னு இருக்கும்..
அதோட வாசம் தான்.. அந்த நெடி மூக்குல ஏறும் போதும் ப்பாஆஆஆ... // \\ அடுத்து வேர்வை வாசம்.. பிடிச்சவங்க போட்டிருந்த உடுப்புல அடிக்கிற வேர்வை வாசம் இருக்கு அது நுகர்றதும்
தனி போதை, பொதுவா இந்த பொண்ணுங்க வேர்வை க்கு தனி நெடி உண்டு...ஒரு நாள் இப்போ மாதிரி தான் போன நோண்டி கிட்டு படுத்திருந்தேன், அன்னைக்கு என் முறை பொண்ணு வீட்டுக்கு
வந்திருந்தா. என் தலை மாட்டில உட்கார்ந்து பேச்சு குடுத்துட்டு இருந்தா.நான் பாட்டுக்கு போன நோண்டிட்டு இருந்தேன் ஆனா மனசு அவ மேலயே போய் மொச்சது. ஏன்னு பார்த்தா அவ மேல
அடிச்ச வாசம். அதுல அப்படியொரு நெடி. நானும் எவ்வளவு முயற்சி பண்ணியும் மனசு சாந்தி படல. அவள போய் தூங்க சொல்லிட்டு நான் தலையணைய கட்டி பிடிச்சு படுத்திட்டேன். ஒவ்வொருத்தரோட
வேர்வைக்கும் ஒவ்வொரு உணர்ச்சி கடத்துற சக்தி உண்டு. அம்மா பொடவை ல அடிக்கற வேர்வை வாடை அழ வச்சிடும். அழுதிருக்கேன். // \\ மண்ணெண்ணெய், பெட்ரோல், சாயம். இதோட எண்ணெய் கலந்த
வாசம் குடிக்க தூண்டும். பெட்ரோல் வாசனைய உணரும் போதெல்லாம் நிறைய தடவ குடிக்கனும் னு நெனைச்சிருக்கேன். அப்படியே ஒரு மாதிரி மனச கெறங்க வைக்கும். அது பெட்ரோல் ன்ற நெனப்ப
மறக்கடிச்சு குடிக்க தூண்டுற அளவு அந்த வாசனை ஒரு ஈர்ப்பு இருக்கும். // \\ கஞ்சா. இதுனா வரைக்கும் நான் குடிச்சதில்ல. ஆனா அந்த நெடிய நுகர்ந்திருகக்கேன். புத்திய
மழுங்கடிச்சிடும். மூக்குல ஏறுன போதும் இன்னும் இன்னும் வேணும் னு தோனும். அந்த அளவு கிறங்க வைக்கும். வேற எதுமே வேணாம், இது ஒன்னே போதும் னு தோன வச்சிடும். பொண்டாட்டி சுகம்
என்ன புள்ள குட்டி சுகம் என்ன? கடைசி கஞ்சா போதும்ன்ற நெனைப்பு வந்துடும். // \\ புது புத்தக வாசனை. நான் அடிமையாகி கிடக்குற விசயம். ராஜா பாட்டுக்கு அப்பறம் நான் ரொம்ப
கிறங்கி கிறுக்காகி போற விசயம். புது புத்தகத்தோட அந்த சாய வாசனைய நுகர்றதுக்காகவே நான் புது புத்தகம் வாங்கி தான் படிப்பேன். ஒவ்வொரு பக்கம் வாசிக்கும் போது மூக்கோட
சேர்த்திருக்கி அந்த வாசனைய நுகர்வேன். அது என்னமோ பண்ணும். (சில புத்தக வாசனைகள் ஒத்து வராது. எனக்கு மட்டி பேப்பர். அதுல ரொம்ப சாணி வாடை அடிக்கும்.)#கிறுக்கேத்தும்.
இதுக்கொசரமே வாரம் ஒரு புத்தகம் வாங்கிடுவேன். இப்போ தான் ரெண்டு மாசமா புத்தகம் வாங்க கூடாது கட்டுப்பாடு. என் சிநேகிதி திட்டிட்ட. கடைசிய வாங்கினது மௌனி புத்தகம். வேலைக்கு
போனப்றம் என் காசுல வாங்கிக்க சொல்லிட்டா. ஒரு முறை நகுலனோன படைப்புகள முழுசா வாங்கிடனும் னு கோவை விஜயா போயிருந்தோம். அப்போ தான் செம வாழ்த்து. எதையும் வாங்க விடல. கெஞ்சி
கூத்தாடி நகுலனோட கவிதை தொகுப்பு மட்டும் வாங்கி தந்தா. அதுவும் இனி அவ அனுமதி இல்லாம புத்தகமே வாங்க கூடாது சத்யம் வாங்கினப்றம் தான். 😔😔😔😔 என் மேல் அன்பும் பரிவும்
பாசமும் உள்ள யாரேனும் இந்த முக நூலில் இருந்தால் என் இலக்கிய ஆசைக்கு பரிசாக/கொடையாக புத்தகங்களை வாங்கி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...