Back

Short story

February 7, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

#மூத்திர_எழுத்துக்கள்.

அவனது சில்லறை தனங்களுள்
இதுவும் ஒன்று.

எப்போது மூத்திரம் பெய்யப் போனாலும்
இப்படி அப்படி ஆட்டி
எதையாவது எழுதுவான்.

அ னா ஆ வன்னா.
ஹார்டின்.
லிங்கம்.
இப்படி எதாவது.

இன்னும் சில சமயம்
அவன் பெயர்.

பாதி பரவளையமாய் தொடங்கும்
சீறுநீர் பாய்ச்சல்
இனிஷியலையும் முதல் எழுத்தையும்
எழுதுவதற்குள்ளாகவே
நேர் கோடாகி
ஒரு சொட்டாகி
இறுதியாக தீர்ந்தே போய்விடும்.
இதில் எங்கு பெயரை எழுதுவது.

எவ்வளவு நிதானமாக ஆட்டினாலும்
கோணால் மாணலாக
கோழி கிறுக்கியதை போலத் தான்
எழுத்துகள் விழும்.

சிரிப்பாகவும் அவருப்பாகவும் தான் இருக்கும்.
அவன் செய்கைகள் எல்லாம்.

அடக்குதலுக்கு பின்னான விடுதலை
உச்சபட்ச ஆனந்தம்.
பரம சுகம்.
இந்த உண்மையை உணர்ந்தவன் அவன்.

ஆனந்த நிலையை
மற்றொரு முறை அனுபவிக்கிற மற்றும்
பெயரை முழுதாய் எழுதுகிற முனைப்பில்
மதியம் வந்ததை
மாலை வரை நிறுத்தி வைத்தான்.

இந்த முறையும்
முழுதாய் எழுத முடியவில்லை.
கடைசி எழுத்து எழுதுவதற்குள்
காலியாகி போனதன்றி
கடுப்பின் அவசரத் திரும்புதலில்
கால் சராய் ஈரமானதே மிச்சம்.

சிறுநீர் கழித்து சிறு ஆட்டு ஆட்டாவிட்டால்
பெருநீர் வந்து பேன்டை நனைக்கும் என்று
எப்போதோ
யாரோ
விளையாட்டாய் சொன்னதை
அப்போது நினைத்து சிரித்து கொண்டான்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...