Short story
September 24, 2018
சிறுகதை
SHARE

என்னை தவிர எல்லோரும் இயங்கி கொண்டிருக்கிறார்கள். எதையேனும் அடையும் பொருட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். உழைக்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இறந்த தன்மையோடு இருக்கிறேன்.? எதன் மீதும்
பற்றற்று? . சகலத்தின் மீதும் சலிப்போடும் வெறுப்போடும். முக்கியமாக மனிதர்கள் மீது. அதிலும் குறிப்பாக உறவுகளின் மீது. யாரையும் பிடிக்க வில்லை. என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.நான் ஒழுக்கங்
கெட்டவனாய் இருக்கிறேன். என் குறைகள் எனக்கு அப்பட்டமாக புலனாகின்றன. என் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சாந்தியடைவதே இல்லை.எதிலும் நிலை கொள்வதில்லை. ஒரு தெருநாயைப் போல அதன் இஷ்டத்திற்கு
அலைகிறது. எப்போதேனும் யாரேனும் எலும்புத் துண்டென அன்பை காட்டினால் அவர்களிடத்தில் வாலாட்டுகிறது. எச்சிலொழுக நாக்கை தொங்க விட்டுக் கொண்டு நிற்கிற நாயை போல மீண்டும் மீண்டும் அந்த அன்புக்கு
ஏங்குகிறது. நிறைய நிறைய வேண்டும் என்கிறது. அதற்காக பொய் சொல்லவும், ஏமாற்றவும் கூட அஞ்சவதில்லை. அன்பே அதன் ஆத்ம தேவையாகவும், அதனை ஆசுவாசப்படுத்துகிற சக்தியாகவும் இருக்கிறது. அதனை அடைகிற
பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய் என்கிறது. செயலிலிறங்குகிறது. சுயக்கட்டுப்பாடற்ற என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாயிருக்கிறது.
தன்னை பற்றி தனக்கு தெரிந்திருந்தும், தன்னொத்த பிற மனிதனிடத்தில் மனிதன் எதனடிப்படையில் நம்பிக்கை வைத்து அன்பு செலுத்துகிறானோ. என் அயோக்கியத் தனம் எனக்கு தெரியும். என்னை நம்புகிறவர்களின்
அயோக்கியத் தனமும் தெரியும். ஆனால் என்னை நான் நொந்து கொள்கிற அளவு யாரையும் நொந்து கொள்வதில்லை. என்னை வருத்திக் கொள்கிற அளவு யாரையும் நான் வருந்துவதில்லை. ஏனென்றால் என்னை பொறுத்தவரையில் நானல்லாத
எல்லோரும் நல்லவர்கள். யோக்கியர்கள்.
இருந்தாலும் மனிதர்களை பரிபூரணமாக வெறுக்கிறேன்.என்னை நம்புகிறவர்களை, என்னை நெருங்கிறவர்களை, என் மீது அன்பு காட்ட முற்படுகிறவர்களை அடியோடு வெறுக்கிறேன். ஏனென்றால் இவர்களால் மட்டும் தான் என்னை
எளிதில் காயபடுத்த முடியும். முடிகிறது. இவர்களுக்கு தான் என் பல-பலஹீனங்களை நன்கு தெரியும். தெரியப்படுத்துகிறேன். ஆகவே மேற் சொன்ன பட்டியலில் வருகிற எல்லோரையும், சுருங்கச் சொன்னால் மனித குலத்தையே
வெறுக்கிறேன். தனிமையை மட்டுமே எப்போதும் நேசிக்கிறேன். எல்லோரிடமும் யாசிக்கிறேன்.
#ஒரு_பைத்தியக்காரனின்_டைரிக்_குறிப்புகள்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...