Short story
July 16, 2018
சிறுகதை
SHARE

அன்பே அன்பின் அத்தனையும் நீயே. ❣️ ❣️ ❣️ யுவன். இசையமைப்பளார்களின் பெயரறிந்தும் அவர்களின் இசை நுணுக்கம் அறிந்தும் பாட்டு கேட்க ஆரம்பித்தது என் கல்லூரி முதலாம்
ஆண்டிலிருந்து தான். என் சின்ன வயசில் இன்னின்ன பாடலுக்கு இன்னின்னவர்கள் தான் இசையமைத்துள்ளார்கள் என்று தெரியமாலே சில பாடல்களை நான் கொண்டாடி குதுகலித்திருக்கிறேன். அப்படி
கொண்டாடப் பட்டு பாட்டுக்கு சொந்தக் காரர்களில் முதலாவதாக இளையராஜாவும், அடுத்து யுவனும், ரஹ்மானும் அதிக இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள். ❣️ கனவே கலைகிறதே ❣️ கண் பேசும்
வார்த்தைகள் ❣️ ஜனவரி மாதம் பூ பனி விழும் நேரம் ❣️ கனா கானும் காலங்கள் ❣️ செய் எதாவது செய் ❣️ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை ❣️ தீ பிடிக்க தீ பிடிக்க முத்தம் கொடு
டா ❣️ ஜல்சா பண்ணுங்க டா ❣️ புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும் ❣️ சக்க போடு போட்டாலே சவுக்கு கண்ணாலே ❣️ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் ❣️ சொல்லாமல்
தொட்டுச் செல்லும் தென்றல் ❣️ வத்தி குச்சு பத்திகாது டா யாரும் வந்த உரசுற வரையில ❣️ அன்புள்ள சந்தியா ❣️ நான் வெட்டப் போற ஆடு ❣️ மேற்கே மேற்கே பார்த்தேனே ❣️ காதல் வந்தும்
சொல்லாமல் ❣️ ஆடாதா ஆட்டம் எல்மாம என் அன்பே என் அன்பே ❣️ முன் பனியா முதல் மழையா ❣️ வெண் மேகம் பெண்ணாக உருவானதோ ❣️ ஊரோரம் புளிய மரம் இப்படியாக என் கொண்டாட்டத்தில் யுவனின்
பட்டியல் நீளும். அண்மையில் அவர் தந்த தரமணி, பலூன், இப்போது பேரன்பு இது மட்டுமில்லாமல் நா. முத்துகுமாருடனான கூட்டனியமைத்த பாடல்கள் எல்லாமும் இதயப் பரப்பில் ஒரு
சிலுசிலுப்பை தரும். ❤️காதல் கொண்டேன் ❤️புது பேட்டை ❤️பருத்தி வீரன் ❤️அவன் இவன் ❤️7G ரெயின்போ காலணி இதில் எல்லாம் யுவனின் இசையின் பிரமாதமாதத்தை சொல்ல சொற்களை புதிதாக
உண்டு பண்ண வேண்டும். அதுவும் புதுப்பேட்டை மற்றும் பருத்தி வீரன் படத்தின் பின்னணி இசை எல்லாம் அசத்தல்.யுவனின் இசைக்கு மட்டுமல்ல குரலுக்கும் ஒரு காந்தாரத் தன்மை
இருக்கிறது. உதாரணமாக ❣️ சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ❣️ உனக்காகத் தானே இந்த உயிருள்ளது ❣️ யாரோடு யாரோ ❣️ போகாதே போகாதே ❣️ யாரோ உச்சிக் கிளை மேலே ❣️ தெய்வம்
வாழ்வது எங்கே ❣️ இன்னும் நிறைய உண்டு. யுவனின் இசையில் எப்போதும் ஒரு துள்ளல் இருக்கும். இதயத்தை ஊடுருவும் தன்னை இருக்கும். உச்ச சோகத்திலும், உச்ச சந்தோசத்திலும்
ஆழ்த்துகிற சக்தி யுவனின் இசைக்கு உண்டு. தெரியாத அன்றிருந்து தெரிந்து கொண்ட இன்றுவரை என்றும் யுவனின் ரசிகனாய். அவன் இசை ஆஸ்காருக்கும் அப்பாற்பட்டது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...