Back
Short story
January 8, 2018
சிறுகதை
SHARE

ஆண்:சந்தன பூவுனை
தழுவிடவோ
சிந்திடும் தேனென
பருகிடவோ
செந்தமிழ் கவியென
படித்திடவோ
சிந்தித்து சிந்திலே
வடித்திடவோ.
வந்துனை காற்றென
வருடிடவோ
எந்துணை நீயென
எழுதிடவோ
கந்தனை போலுனை
தொழுதிடவோ?
உன் கால் பட்ட
மண்ணை திருடிடவோ?
பெண்:
அந்திக்கு மஞ்சள்
அரைக்குறியே
சிந்தைக்கு சாராயம்
தெளிக்குறியே
சந்தன சிறைக்கு
அழைக்குறியே
கன்னி விரதத்தை
ஏனோ களைக்குறியே?
ஆண் :
சிறையல்ல வானம் தான்
வா கிளியே
சிறகின்றி திரிவோம்
வான்வெளியே.
பெண் :
உனை அணைத்திட
வருதொரு பூம்பனியே
இனி நீ தானெனக்கு
புதுத்துணியே.
❣️💕
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...