Short story
January 1, 2018
சிறுகதை
SHARE

💛💜💙
❣️என் விந்தில்
வந்துதியா
என்னினும் இளையாள்(மூத்தவளாய் இருந்தாலும்) உன்னை
என் மூத்த மகளென
பிரியமொழுக நேசிப்பேன்.
❣️உனக்கு பிடித்ததையும்
உன் பிடிவாதத்தையும்
எனக்கு பிடித்ததாக்கி கொள்வேன்.
❣️குளித்து வரும் உன்
ஈரக் கூந்தல் உலர்த்துவேன்🙎.
❣️வலிக்காமல்
வகிடெடுத்து தலை வாருவேன்👧.
❣️சாதி மல்லி🌼 வாங்கி வந்து
சரம் தொடுத்து
உன் கருங்கூந்தலில்
காதல் மணக்க சூடுவேன்.
❣️புருவ மத்தியில்
மையிடுவேன்.
❣️உன் அழகை
கண்ணொற்றி கை நெட்டி முறித்து
நடு நெற்றியில் முத்தம் வைப்பேன்.
❣️சிறு பிள்ளையென
உன் கட்டளைகளுக்கு அடி பணிவேன்🙈🙉🙊.
❣️உனக்கு பிரியமானதை வாங்கி தந்து
உனதந்த குறுநகையை ரசிப்பேன்💟.
❣️உன்னை என் உயிரென ரட்சிப்பேன்.
❣️அந்த ஐந்து நாட்களில்
இரத்தகறை படிந்த
உன் ஆடைகளை
துவைப்பேன்...
உன் பெண்மையின் கஷ்டங்களுணர்ந்து
உனக்கு ஓய்வு தந்து நான் சமைப்பேன்
மற்ற நாட்களில்
உன்னோடு ஒத்துழைப்பேன்👨❤️💋👨.
❣️அடிக்கடி செல்ல சண்டைக்கழைப்பேன்😝.
❣️அதி காலை பனியில்
உன் விரல் கோர்த்து நடப்பேன்.
❣️உன் கால் கொலுசோசையில் லயித்து
கண் மூடி கிடப்பேன்🙈.
❣️உன்னை அடம்பிடிக்கும் போது
கெஞ்சி கொஞ்சுவேன்.
❣️என் கையால் சோறூட்ட
உன் கைகளுக்கு
மாதமொரு முறை
மருதாணி பூசுவேன்.💅
❣️உன்னை
உறங்க வைத்து
கால் விரல்
கை விரல்
சொடுக்கெடுப்பேன்.
❣️உன்னை தாயாக்கி பார்க்கும் முன்
என் தாயாக பார்ப்பேன்💑.
❣️எங்கு போனாலும்
உன் முந்தானை பின் தொடர்வேன்👣.
❣️உறங்கும் போது
வியர்வை வாடை யடிக்கும்
உன் சேலையை
போர்த்தி கொள்வேன்.
❣️ஆ காட்டி சோறூட்ட சொல்லி
அடம் பிடிப்பேன்.
❣️ஊட்டி விடும்
உன் பிஞ்சு விரல்களை
கொஞ்சம் வலிக்கும் படி கடிப்பேன்☺️.
❣️நீ திட்டி வலிக்காது போனாலும்
அழுவதை போல் நடிப்பேன்😝.
❣️அழாதடா தங்கம் என
அன்பு ததும்ப கெஞ்சும் உனை
காமம் ஏதுமற்று
கட்டி பிடிப்பேன்.
❣️மின்சாரமில்லா இரவுகளில்
வியர்க்கும் உனக்கு
சாமரம் வீசுவேன்💙.
❣️உறக்கம் வராத போது
உன்னை மடியில் கிடத்தி
தலை கோதி
தாலாட்டுவேன் .
❣️காய்ச்சல் வந்தால்
கம்பளி போர்த்துவேன்
❣️உறக்கத்தில்
விலகி கிடக்கும்
உன் ஆடைகளை நேர்த்தி செய்வேன்.
❣️தூங்கியெழுந்து
கண் திறந்தும்
திறவாமால்
என் நெற்றியில்
உன் உஷ்ண முத்தம் கேட்பேன்.
❣️காலையில் உனக்கு முன்னெழுந்து
உன் முகம் கழுவி துடைத்து
இளம் பதமாய்
குடிக்க தேநீர் தருவேன்.
❣️குளிக்க வெந்நீர் வைக்க மறவேன்.
❣️இன்னும் நூறு ஜென்மங்களெடுத்தாலும்
இப்படியே உன்
அன்பான
அடிமையாய்
உன்னுடன் வருவேன்.
❣️உனக்கு தேவையெனில்
என்னுயிரையும் தருவேன்💜💛.
❣️என்னை நீ பிரிந்தாலோ
வெறுத்தாலோ
அப்போதே இறப்பேன்.
❣️மரிக்கும் முன்
என் மரிக் கொழுந்துன் முகத்தை
மகிழ்வு ததும்ப பார்ப்பேன்👀.
❣️உனை வளைத்திழுத்து
வாயருகே கொண்டு வந்து
தாயானவளுனை
முத்தம் மிட்ட படி
என் மூச்சு தீர்ப்பேன்💏.
❣️என் பிரிவை நினைத்தழுதால்
மறுகணமே உன் மகனாக பிறப்பேன்👩👩👧.
❣️அட்சய பத்திரமென
உனக்கென எப்போதும்
அன்பு சுரப்பேன்.
எப்போதும் உன் அருகில் இருப்பேன்.
💞💞💞
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...