Back

Short story

December 1, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

பொறியியல் ஆராய்ச்சி. பகுதி 1
An engineering research. Part 1.
குறிப்பு:#பதிவு_நீண்டது.
பொறியாளன்(பொறியாளினி)
இந்த வட்டத்துக்குள்ள தான் நானும் வரேன்.

அதனால தான் இத எழுதறேன்.

இதுல படிச்சிட்டு இருக்கறவங்க.
படிச்சு முடிச்சிட்டவங்க னு
ரெண்டு இனம் இருக்கு.

இரண்டாவது ல அதான் படிச்சு முடிச்சிட்டவங்க ல்ல
வேலை இருக்கறவங்க
வேலை இல்லாதவங்க னு இன்னும் இரண்டு இனம் இருக்கு.

சரி நாம முதல்ல இருந்து ஆரம்பிப்போம்.

1)படிச்சிட்டு இருக்கவங்க.

என்ஜினீயரிங் படிச்சா வேலை இல்ல வேலை கிட்டைக்காது னு நெறய வதந்திகள் இருக்கு.
அப்படி இருக்கும் போது ஏன் இத படிக்கனும்?
கேட்டா அப்பன் ஆத்தா கட்டாயத்துல சேர்ந்தேன் னு என்ன மாதிரி நெறய பேர் காது ல பூ சுத்துவாங்க என்ன மாதிரி இங்க வந்து இப்படி கதையும் விடுவாங்க.
நம்ம ஆளுக படிக்கும் போதே எல்லாத்தையும் தெளிவா...பிசகு இல்லாம experimental ஆ செஞ்சு பாத்து கத்துகிடுறாங்க. என்னென்ன னு கேட்காதீங்க.(அது பெரிய list)
காலேஜ் ஆரம்பிக்கும் போது பால் வாடி புள்ள மாதிரி போறது கூட முடிச்சு வரும் போது(நான் இன்னும் பால் வாடி புள்ள யா தான் இருக்கேன்) அந்நியன் படத்துல வர ரெமோ(பொண்ணா இருந்தா படையப்பா படத்துல வர
நீலாம்பரி) மாதிரி தலை முடிய சிலுப்பிகினு வாய்ல ஒரு துண்டு சிகரெட் எப்போவும் காதுல ஒன்ன(பசங்க head phone, பொண்ணுங்க நெறய மாடல் எது எதெதோ) மாட்டிகிட்டு KTM அல்லது pulser(இதர வகைகளும் உண்டு)
வண்டிய ஓட்டி கிட்டு வருவாங்க.
வண்டி விட்டு இறங்கினா இடுப்புல இருக்கறது... இருக்க வேண்டிய இடத்துக்கும் அர அடி கீழ இருக்கும்.
(பொண்ணுங்க leggings னு ஒன்ன போட்டு கிட்டு மேல top இருக்கும் ஆனா அது கூட வாங்கின shawls (எங்க போகும் னு எனக்கு தெரியல) இருக்காது.
(ஆனா இது ல என்னைய மாதிரி ஒன்னும் தெரியாத விதி விலக்கு லாம் இருக்கு).

இதுலாம் பொறியாளன் அல்லது பொறியாளினி களை அடையாளம் காண உதவும்.

இதெல்லாம் அவங்க தனிப்பட்ட விசயம். அவுங்க சுதந்திரம். நமக்கு எதுக்கு.

நம்ம விசயத்துக்கு வருவோம்.
காலேஜ் ல எவனு(ளு)ம் படிக்றதில்ல ன்றத விட யாரும் காலேஜ் க்கு உருப்படியா போறதில்ல போனாலும் க்ளாஸ் அ கவனிக்றதில்ல. அப்பறம் எப்படி.? அவன் என்ஜினியர் ஆவான்(ள்) ? என்ஜினியர் ஆகாம எப்படி வேலை
கிடைக்கும். கைல certificate இருக்கவன்(ள்) லாம் என்ஜினியர் ஆகிட முடியுமா?
இப்போ எல்லாரும் எதையும் பயன்பாடு (application oriented) சார்ந்து படிக்றதில்ல.வெறும் mark க்காக தான் படிக்றாங்க . Mark க்காக படிக்காம அப்பறம் எதுக்காக படிக்கனும் னு கேட்கிறீங்களா?
ஒரு சின்ன கேள்வி.
செக்ஸோட தேவை என்ன? வெறும் சந்தோசத்துக்கு மட்டுமா... இல்லை சந்ததிகள உருக்கனும் அதுக்கு தான் செக்ஸ்.
அது மாதிரி சும்மா படிச்சேன் வாந்தி எடுத்தேன் னு இருக்க கூடாது. நீ படிச்சத வச்சு என்ன பண்ண? என்ன பண்ணுவ?
இதுக்கு பதில் இருக்கு னா உனக்கு எங்கயும் வேலை உண்டு.
கல்வி என்பது மக்களோட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒன்று.
இதை நினைவுல வச்சு படிக்றவன்(ள்) எல்லாம் நிச்சயம் என்ஜினியர். நிச்சயம் வேலையும் உண்டு. ❤️

இரண்டாம் வகைய இன்னொரு பதிவுல பாக்கலாம்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...