Short story
October 25, 2017
சிறுகதை
SHARE

ஒரு பெண் பொது இடத்தில் தன்னை திட்டி விட்டாள் என்பதற்காக ஒரு ஆண் அவளை தண்டிக்கும் பொருட்டு அவளை கற்பழிக்கிறான் என்றால் அதை அவன் அவளை கொல்லுதலினும் பெரிய தண்டனையாய் கருதி இருக்க வேண்டும்.
மேலும் ஒரு பெண் தன்னை திட்டியதற்காக பழி வாங்க ஆயிரம் வழிகள் உண்டு. இதே ஒரு ஆண் அவனை திட்டி இருந்தால் என்ன நடந்திருக்கும். அதே இடத்தில் திட்டியவனை அடித்திருப்பான். ஆனால் பெண் என்றதும் ஏன்
இப்படி? இங்கு அந்தவொரு ஆண் மீது மட்டும் பிழை இல்லை. ஆழ்ந்து யோசிக்க வேண்டி இருக்கிறது. இந்த சமூகமே பெரும் பிழையை சுமந்து கொண்டிருக்கிறது. அவனுடைய வன்மத்தை அந்த அளவு தூண்டி விட்டது எது? சுற்றி
இருப்பவர்களின் ஏளனப்பார்வை. இங்கு எதுவும் தன்னை சார்ந்தோ தனக்காகவோ நடப்பதில்லை. நடந்ததுமில்லை. மாபெரும் குற்றங்களின் மூல காரணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்ற எண்ணம் தான்.
நான் சொன்னது போல் திட்டியது ஒரு ஆண் என்றால் அவன் வன்மம் இந்த அளவு வளர்ந்திருக்குமா? என்றால் இல்லை. ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் நிகழும் அனைத்தையும் கேவலமானதாய் சித்தரித்து
வைத்திருக்கிறது இந்த சமுதாயம். ஆமாம் அவனை அவள் திட்டியவுடன் "போயும் போயும் ஒரு பொட்டச்சி உன்ன திட்டிட்டாளே டா" இந்த மாதிரியான வசனம் தான் அவன் காதில் விழுந்திருக்கும். ஏன் பெண்
என்றால் அத்தனை இளக்காரமா? பெண் திட்டக் கூடாதா? நம் சமுதாயம் எப்போதும் பெண் மீதொரு பார்வையும் ஆண் மீதொரு பார்வையும் பெண்ணுக்கொரு நியாய தர்மங்களையும் ஆணுக்கொரு நியாய தர்கங்களையும் வகுத்து
வைத்திருக்கிறது. இந்த பெண்ணை எப்போதும் சராசரியாகவே பார்ப்பதில்லை. சிலர் பரிதாபத்திற்கும் தன் பாதுகாப்பிற்கு உட்பட்டு இருக்க வேண்டியவளாகவும் மற்ற சிலர் தான் பழிவாங்குதலுக்கு உரியவளாகவும் தான்
பார்க்கிறார்கள். நீங்க நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. கதையில் வரும் கதாநாயகன் யாரோடாவது வம்பிழுத்திருப்பான்(நியாயமாகவும் இருக்கலாம்) அதற்கு அவன் உடன் பிறந்தவள் அல்லது
கதாநாயகியை கடத்தி போய் விடுவான் வில்லன்.
இப்போது விளங்கி இருக்கும் பெண்கள் மீது இந்த சமூகம் எத்தகைய எண்ணத்தை விதைத்து வருகிறது என்று..? இதற்கான தீர்வை நான் ஒருவனாக சொல்லி விட முடியாது. சொல்லவும் கூடாது. ஆக நீங்கள் சொல்லுங்கள் இதற்கான
தீர்வு என்ன?
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...