Short story
August 17, 2017
சிறுகதை
SHARE

பீய், மூத்திரம், வாந்தி, சாக்கடை இந்த வார்த்தைகளை உங்களால் முகத்தை சுழிக்காமல் வாசிக்க முடியாது. இந்த சொற்களையே உங்களால் வாசிக்க முடியாத போது.... அதை (மறுபடியும் உங்களை
முகம் சுழிக்க வைக்க விருப்பமில்லை. அதை என்று எதை குறிப்பிடுகிறேன் என புரிந்து கொள்ளுங்கள்) சுத்தம் செய்கிறவர்களின் நிலைமை என்னவென்று நினைத்துப் பாருங்கள். இங்கு
உங்களுடைய பரிதாபத்தை எதிர்பார்க்க வில்லை. அவர்களுக்கு அவசியம் அதுவல்ல. பொது இடங்களில் இது போன்ற அசிங்கங்களை செய்கிற உங்களை விட அவர்கள் மட்டமானவர்கள் இல்லை. ஆனால்
அவர்களை நீங்கள் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைக்கிறீர்கள். ச்சீ. கேவலமாக இல்லை உங்களுக்கு. அசிங்கத்தை செய்த நீங்கள் கேவலமானவர்களா இல்லை அதை சுத்தம் செய்யும் அவர்கள்
கேவலமானவர்களா.? ஆனால் நீங்கள் அசிங்கமாக நினைக்கும் முன்னமே முகம் சுழித்தீர்களே அதைத் தான் சொல்கிறேன் அதை அள்ளி சுத்தம் செய்ய எத்தனை பெரிய மனது வேண்டும் யோசியுங்கள்.
அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆனால் அவர்களை நீங்கள் மனிதராகக் கூட மதிப்பதில்லை. மேலும் இந்த தொழில் செய்தவர்களின் எத்தனை குடும்பங்கள் இப்போது அனாதையாக இருக்கின்றன
தெரியுமா? அழுகைத் தான் வருகிறது. எத்தனை இழப்புகள். எத்தனை இறப்புகள். மனிதன் என்று திருந்தப் போகிறான். யோசித்தால் எல்லோர் மீதும் கோவம் வருகிறது. காந்தியாம் காந்தி.
சுதந்திர தியாகியாம் தியாகி. அவன் என்ன சொன்னான் இந்திந்த தொழிலை இன்னின்னவன் தான் செய்யனுமாம். அப்போ ஆள்கிறவன் ஆண்டு கொண்டே இருக்கனும் பேள்கிறவன் பேண்டு கொண்டே இருக்கனும்
அள்ளுறவன் அள்ளி கொண்டே இருக்கனும் விஷவாயு தாக்கியும் பாதாள சாக்கடை யில் மூழ்கியும் அதன் விளைவாக வருகிற நோயால் பாதிக்கப்பட்டு சாகிறவன் செத்து கொண்டே இருக்கனும். என்ன
நியாயம் இது. கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு ரெண்டு ரூபாய் காசு கீழே கிடந்தால் எடுக்க குனிகிற நாம் என்றாவது குப்பையை எடுக்க குனிந்திருக்கிறோமா.? ஏன் குனிவதில்லை குப்பை
எடுத்தால் மதிப்பு போய் விடும் மரியாதை போய் விடும். சிரிப்பு கலந்த அழுகைதான் வருகிறது எனக்கு. ஆனால் நான் அழுதால் தான் நிறைய பேசுவேன் நிறைய எழுதுவேன். கொஞ்சம் பொறுமையாக
இல்லை பொறுமை இருந்தால் மட்டும் வாசியுங்கள். குப்பையை எடுக்க கூச்சப் படுகிற நாம் ஏன் குப்பையை போடும் போது கூச்சப்படுவதில்லை. தயவு செய்து திருந்துங்கள். பொதுவெளியில்
நீங்கள் குனிந்து எடுக்க அசிங்கமென நினைக்கும் எதையும் எறியவோ போடவோ செய்யாதீர்கள். குப்பைத் தொட்டி, பொதுக் கழிவறை இவற்றை எல்லாம் சுத்தமாக வைத்திருங்கள்.உங்கள் தகப்பனோ
தாயோ இது போன்ற (அசிங்கத்தை சுத்தம் செய்யும்) பணியில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.? அவர்கள் எல்லோரும் நம் தாய், நம் தந்தை, நம் சகோதர சகோதரிகள் என்று நினைத்து
பாருங்கள். நீங்கள் அந்த வேலையை செய்து விட்டு வந்து உங்கள் கணவனோ மனைவியோ உங்களை நிராகரித்தால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். ஆசையோடு வந்து தழுவும் குழந்தைகளை அந்த
அசிங்கங்களை சுத்தம் செய்த கைகளால் எப்படி அணைப்பீர்கள்? எப்படி அந்த கைகளால் உண்பீர்கள் என நினைத்து பாருங்கள். அவர்கள் கையுறை இட்டுக் கொண்டும் நாசிக்கு துணி கட்டிக்
கொண்டும் தானே சுத்தம் செய்கிறார்கள் பிறகென்ன என்று கேட்காதீர்கள். அப்படி கேட்பீர்களானால் பதிலுக்கு உங்களை நானொரு கேள்வி கேட்பேன்.. உங்கள் வீட்டு கழிவறை யை என்றேனும்
சுத்தம் செய்திருக்கிறீர்களா? ஒரு நாள் கையுறை இட்டுக் கொண்டும் முகமூடி அணிந்து கொண்டும் உங்கள் வீட்டுக் கழிவறையையும் கழிவறை கழிவுகளுக்காக கட்டப்பட்ட (drainage)
தொட்டியையும் சுத்தப்படுத்தி விட்டு வந்து அந்த கேள்வியை கேளுங்கள். சுத்தமாக இருக்கிற உங்கள் வீட்டுக் கழிவறையையே உங்களால் சுத்தம் செய்ய முடியாத போது, அசிங்கங்கள் நிரம்பி
வழிகிற பொதுக் கழிவறைகளை சுத்தம் செய்கிற அவர்களின் நிலைமை என்ன? இந்திய அரசாங்கம் ஒரு கேவலமான மட்டமான அரசாங்கம். மனிதர்களை கொண்டு மலம் அள்ளும் அதன் செயல்களை என்ன சொல்வது?
உலகிலேயே அணுக் கழிவுகளை விட மனிதக் கழிவு ஆபத்தானது.அந்த ஆபத்தானதை சுத்தம் செய்யும் போது இறக்கும் மனித உயிர்களின் மதிப்பு பத்து லட்சம். போதுமா? இறந்தால் இவ்வளவு நிவாரணம்
தருகிற அரசாங்கம் அந்த இறப்புகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த மானங்கெட்ட அரசாங்கம் திருந்துகிறதோ இல்லையோ... நீங்களேனும் திருந்துங்கள். ஏனென்றால்
பாதிக்கப்படுவது நம்மில் ஒருவர். அதுவும் நம்மால் தான். இதற்கு பிறகேனும் யோசித்து திருந்துங்கள். (எழுதிய பிறகு பதிவிடலாமா வேண்டாமா என யோசித்த பதிவு இருந்தாலும் பதிவிட்டு
விட்டேன். மன்னிக்கவும். வார்த்தைகளை கொஞ்சம் வரம்பின்றி உபயோகித்து விட்டேன்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...