Back

Short story

July 5, 2017

சிறுகதை

SHARE

சிறுகதை

நெடு நீளக் கனவின் முற்றுப்புள்ளி தான் இந்த கவிதையின் முதல் வரி..... கடைசி வரி வாசிக்கும் போது சுவாசிப்பதை நிறுத்த வேண்டிய நிர்பந்தம் வரும்.... பருந்துக்கு
விருந்தாகப்போகிற அவன் விரல்களின் பிடியிலிருந்து விழவே இல்லை அந்த பேனா....... இறந்து விழும் நானாய் இருந்து அவனானவனை வெளியிலிருந்து வேடிக்கை பார்த்தபடி எழுதுகிறேன்.....
சூரியக்குழம்பென சுடுகிற மணல் கொண்ட திசை தொலைத்த அந்த காட்டில் தாகம் தணித்துக் கொள்ள தண்ணீர் தேடும் பறவையென எதையோ தேடித் திரிகிறேன் நான்...... தேடல் எதுவென தெரியா என்
தேடலின் தேடல் என்னவென்பதே இந்த தேடல்... காரணம் இன்றி கண்கள் சிந்தும் துளிகளுக்கு என்ன காரணம் சொல்லி தேற்றுவதென்றே தெரியவில்லை.... அழுதபடியே அலைந்து திரிகிறேன்
அடிவானிழந்த வனாந்தரத்தில்... அறுந்தெறியப்பட்ட கொடியாய் மடிந்து விழுகின்றன கால்கள்..... மண்டியில் தவழ்கிறேன் முட்டியில் உண்டாகும் வலி முள்ளாய் தைக்கிறது கண்களை.......
மெல்ல மெல்ல நத்தை போல நகர்கிறேன்.... இருட்டுக்குள் வெளிச்சம் சுமந்து வரும் மின்மினியாய் இதயத்தில் ஏதோ ஒளிபிறக்கிறது... தேடல் என்னவென்று தெளிந்தேன் தெரிந்தேன்.....
இப்போது... உள்ளத்தோடும் உதட்டோடும் சேர்ந்து கண்ணீரில் சிரிக்கிறது கண்கள்.... பால் மணமறியாத பிள்ளை பசியாற முட்டி முட்டி முலைப்பால் குடித்ததைப் போல் தலையை சிலுப்பி
கொண்டெழுந்து ஓடுகிற வேகத்தில் நடக்கிறேன்....... நெருங்கிவிட்டேன்.... அதோ என் தேடல்.............. உரு கொண்ட அன்பு அவள்..... அவள் தான் அவளே தான்.... மரணம் மீஞ்சிய வலி
தந்து பிறந்தாலும் வயிறு வளர்ந்த பிள்ளையை வாங்கி வலிக்காமல் நெஞ்சு தழுவும் தாயன்ன நெருங்குகிறேன் அவளை..... எனக்காகவே என்னையே எதிர்பார்த்து காத்திருந்தவள் போல் எதையோ
கையில் ஏந்தியபடி ஏக்கம் தழும்ப பார்க்கிறாள் என்னை.... மின் அஞ்சல் கொஞ்சல் கடந்து எதெதிலோ கொஞ்சிக் குழவுவார் வாழ் பின் நவினத்துவமான காலத்தில் என் கையில் திணிக்கிறாள் ஏதோ
ஒரு கடிதத்தை...... பிரிய ஆவலோடு பிரிக்கிறேன்..... காதல் மொழிகள் நூறு கவிதைகளாய் பொழிந்திருந்தாள்...... ஆனந்த களிப்பில் அத்தனையும் மறந்தேன்..... ஆகாயம் மீது சிறகின்றி
பறந்தேன்..... அவள் சொல்ல முடியாத ஆசையொன்றை எழுதி காட்ட வேண்டும் என்றாள்.... கடிதத்தில் எழுத இடமிருந்தும் அவள் வைத்து எழுத இடமில்லை... அதை வைத்து எழுத அவளை வைத்த இடம்
தந்தேன்... அடிகோடிட்டு அவள் எதையோ எழுதிய அவள் மெல்ல மெல்ல உள்ளிறக்குகிறாள் பேனாவின் முனை....... வலிக்கிறது............. அவளெழுதிய வார்த்தைகளின் குத்தல்...... சட்டென
அவள் கைகளை தட்டிவிட்டு அடிநெஞ்சுவரை இறங்கி விட்ட அந்த பேனாவை வெடுக்கென்றுருவி நெஞ்சிருந்திறங்கும் அந்த காகிதத்தை நெஞ்சோடு அழுத்தியபடி இரத்தில் நனையாத இடம் தேடி
"என்னை கொன்ற பாவம்..... உனக்கெதற்கெ"ன எழுதியவன் பேனாவை அழுத்துகிறான் நெஞ்சின் அடி ஆழம் வரை...... அவனெழுதிய எழுத்துகள் இரத்த வாடை அடிப்பதால் நான் நாசியை
மூடுகிறேன்...... நீங்கள்???

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...