Short story
May 14, 2017
சிறுகதை
SHARE

நான் படித்த இல்லை கேட்ட கதையின் கரு கொண்டு எழுதப்படும் கவிதை. என் முன்னழகும் பின்னழகுமாய் வயசும் அழகும் எதிரெதிரே ஓடின. வயசு கூட கூட அழகு குறைந்தோடியது. வரன் தேடி
வருவோரெல்லாம் வாய் நிறைய குறைகளை சுமந்து வந்தனர். சிரிப்பு அழகென்றவன் சிறிய மூக்கென்றான் கரு உதடு ரசித்தவன் கண்ணில் உயிரில் லை என்றான். கன்னக்குழியில் விழுந்தவன் கர
கரப்பான குரலென்றான். சங்கு கழுத்து பிடித்ததென்றவன் சற்று பெருத்த உடம்பென்றான். காலுக்கு கீழாடும் கூந்தல் கட்டி இழுத்ததென்றவன் காதோரம் சிறு நரை என்றான். முழுதும்
பிடித்து போனவன் இவ்வளவு அழகிருந்தும் இன்னும் உன் கல்யாணம் இழுபறியாய் இருப்பதேன்? பெண் மையில் ஊனமோ என உயிர் சுட்டான். பத்து பவுன் நகைக்கு பல்லை இழித்து கொண்டு பேசாமல்
சம்மதித்தவன் பெண்ணுக்கு செவ்வாதோஷம் என பெருஓட்டம் எடுத்து விட்டான். இப்படி வருவோர் போவோர்க்கெல்லாம் காட்சி பொருள் போல கால நதிக்கரையில் கண்ணாளன் வருவானென கன்னி
நான்-இல்லை முதிர்ந்த கன்னி நான் முந்தானை ஏந்தி நின்றேன். கண்ணாளன் வரும் வழியும் தெரியவில்லை. நான் கன்னி கழிய ஒரு வழியும் தெரியவில்லை. கட்டாயமாக எவனேனும் கற்பழிக்க
முயன்றால் சம்பிரத்தாயத்துக்கு சற்று முரண்டு பிடித்தாலும் நிச்சயம் சம்மதித்து விடுவேன். உணர்ச்சிக்கு வசப்பட்ட உயர்திணை சாதியில் பிறந்தவள் எனக்கும் உணர்விருக்காதா? என்ன.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...