Short story
March 21, 2018
சதக்_சத
SHARE

புனைகதை. #சதக்_சதக் பெயர் :ராஜேஷ். வயது: 24 படிப்பு : இயந்திரவியல். காதல் :ஏழெட்டு பெண்களை காதலித்தாயிற்று. எதிலும் மனது ஒட்டவில்லை. வேலை :இப்படி எதையாவது கிறுக்கி கதை
என்று சொல்வது. பிடித்தது :பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது,எழுதுவது. ஆமாம் எனக்கு இசையும் எழுத்தும் ரொம்ப பிடிக்கும். எழுதுவதென்றால் அவ்வளவு பிரியம். பெண்கள் சார்ந்து
நிறைய எழுதுவேன். எனக்கு நானே வைத்துக் கொண்ட பெயர் "பெண் மோகப் பித்தன்". எல்லாப் பெண்ணிலும் ஒரு சுகம் தான். ஆனால் எனக்கு வேண்டியது காமம் அல்ல. கனிந்த அன்பு.
உச்சபட்ச நேசம். என் கதையில் ஒரு பத்திரமாய் வைப்பதற்கான சுவாரஷ்யமான நடை உடை பேச்சு... இன்னும் சொல்லலாம். இவ்வளவு தான். இது மட்டும் போதும். அப்படி ஒரு பெண்ணை தேடி தான்
அலைந்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஒருத்தியையும் மனது இவள் தான் என்று தேர்ந்தெடுக்க வில்லை. கதை எழுதுவதற்காக நிறைய பெண்களை காதலிப்பது போல் பாவனை செய்திருக்கிறேன். ஆனால்
யாரும் அவ்வளவு சுவாரஸ்யமானவர்கள் இல்லை. இப்போது காதலித்து கொண்டிருக்கும் தர்ஷினியும் அப்படி தான். என்ன... நிறைய நெருக்கம் காட்டுகிறாள். அடிக்கடி ம்ம் மட்டும் கொட்டி
ஆத்திரமூட்டுகிறாள். அவளும் நானும் 8 மாதம் 23 நாள் 18 மணி நேரம் 47 நிமிடம்.. வினாடிகளை குறிப்பிட முடியாது அவை சட்டென்று கடந்து விடும் நிமிடமும் அப்படி தான் இந் நேரம்
நான் குறிப்பிட்ட கால அளவோடு இரண்டு மூன்று வினாடிகள் கூடியிருக்கும். நான் கதை எழுதுவதற்காக நிறைய வாசிப்பேன். தேடுவேன். அப்படியொரு தேடலின் போது அறிமுகமானவள் தான் இந்த
தர்ஷினியும். முதுகலை வேதியியல் படிக்கிறாள். என்னை விட மூத்தவள் தான். "பெண்களின் மார்பக வளர்ச்சி க்கு அதாவது சிலருக்கு அது சிறுத்தும் சிலருக்கு பெருத்தும் இருக்க
காரணம் என்ன? அதற்கு காரணமான ஹார்மோன் ஏதும் உண்டா " இப்படி ஒரு பதிவை(கேள்வியை) முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதற்கு பதில் சொல்லி அறிமுகமாகி இப்போது இருவரும்
காதலித்துக் கொண்டிருக்கிறோம். நிறைய குழந்தை தனமாக பேசுவாள்.அதற்கு மீறலாய் அறிவியலோடும் அறிவோடும் பேசுவாள். ஒரு முறை" என்னை எவ்வளவு புடிக்கும். என்னைய நெனைச்சா என்ன
தோனும்" என கேட்டேன். அதற்கு அவள் சொன்ன பதில்... என்னை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. "உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை நினைச்சா பெருசா கவிதைலாம் தோனல. ஒரே ஒரு
சாபம் விடனும் னு தோனுது" "சாபமா?" "ம்ம்ம் ஆமா" "என்ன சாபம் " " என்னை தவிர வேற யார்கிட்ட போனாலும் உன் குறி விறைக்க கூடாது."
இதை கேட்டதும்... நான் கெட்டதை பார்க்காதே கெட்டதை கேட்காதே கெட்டதை பேசாதே னு கண் காது வாய் மூனையும் மூடி இருக்க குரங்குகள போல கண்ணையும் வாயையும் இறுக மூடிகிட்டு கையை
காதுக்கு கொடுத்துட்டேன். இப்போ நீங்க என்னைய முறைக்றத போல அவளும் முறைச்சு கிட்டே ஒரு சிரிப்பு சிரிச்சா. ஐய்யய்யோ என்ன இது எதையோ சொல்ல ஆரம்பிச்சு எங்கயோ போய்ட்டு
இருக்கேன். Sorry. இப்படித் தான் நான் எதையாவது பேச ஆரம்பிச்சிட்டு எங்கயோ போய்டுவேன். அப்பறம் இன்னொன்னு. என்னன்னா என் எழுத்து ல கருமமா (காமமா) இப்படி எதாவது இருக்கும்.
சரி சொல்ல வந்தத சொல்றேன். பிடித்தது :பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது,எழுதுவது. பிடிக்காதது :என்ன தான் சோப்பு போட்டு குளிச்சிட்டு எண்ணெய் வச்சு தல வாரிட்டு போனாலும்
இன்னைக்கு குளிக்கல தானே னு கேட்கறது. அப்பறம் அந்த தர்ஷினி கொட்டுற "ம்ம்ம் " இப்போ இத எல்லாம் ஏன் சொல்லிட்டு இருக்கேன். எனக்கு அடிக்கடி இப்படி தான் சொல்ல வந்த
விசயம் மறந்து போய்டும். ஆங் ஞாபகம் வந்திடுச்சு. இப்போ நான் தர்ஷினிய கொன்னுட்டு நானும் சாக போறேன். கொல பண்ண போறவன் பண்ண வேண்டி தான ஏன் bio data லாம் சொல்லிட்டு இருக்கேன்
கேலியா நெனைக்காதிங்க. நான் ஒரு சைகோ கேஸ். சட்டுனு கதைக்குள்ள இருந்து கைய நீட்டி கழுத்த நெறிச்சு உங்களையும் கொன்றுவேன். என் bio data வ ஏன் சொல்லிட்டு இருக்கேன்னா
நாளைக்கு நான் செத்தப்றம் யாரு இவன்? பேரு என்ன? ஊரு என்ன னு மீடியாக்கு தேடுதல் வேலை வைக்க வேண்டாம் ன்ற நல்ல எண்ணம் தான்.சிரிக்காதிங்க. எனக்கு கிறுக்கு தான். அதனால தான்
தர்ஷினிய கொன்னுட்டு நானும் சாக போறேன்.இன்னும் கொஞ்ச நேரமும் கொஞ்ச தூரமும் தான் இருக்கு அவள நான் கொல்ல. நான் சாகவும் தான். ஏன் கொல்ல போறேன். எப்படி கொல்ல போறேன்றத
இன்னும் சொல்லல இல்ல. ஏன்னா அவள எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. Yes I love her lot. அவள எப்பவும் என் கூடவே வச்சிக்கனும் னு தோனுது. இன்னும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகல
இல்ல. அப்பறம் எப்படி அவள கூடவே வச்சிக்க முடியும்.கல்யாணம் ஆனாலும்.. இல்ல எப்படி கல்யாணம் ஆகும்.? வேல வெட்டி இல்லாம இப்படி உங்க கிட்ட கதை பேசிகிட்டு காலனா சம்பாதிக்க
துப்பில்லாம சுத்தறவனுக்கு யாரு பொண்ணு குடுப்பாங்க. அவ என்னமோ என்னைய உண்மை யா தான் லவ் பண்றதா சொல்ற. அவளே சம்பாதிச்சு காப்பாத்றாளாம். இது நடக்குமா. என்ன தான் நான்
உத்யோகம் பொண்டாட்டி லட்சணமா மாறுனா பெண்கள் முன்னேறுவாங்க னு போஸ்ட் போட்டாலும்... அத அவ ஏத்துகிட்டாலும் ஊர் உலகம் ஏகத்துக்குமா?. எப்படியும் எனக்கும் அவளுக்கும் கல்யாணம்
நடக்காது . எப்படி ஆகாது ஏன் ஆகாது னு கேட்காதீங்க. அதுல நெறய உட்சிக்கல் இருக்கு. அதை எல்லாம் சொல்ல இப்போ நேரம் இல்ல. ஒரு நிமிசம் இருங்க. "ஆங்.. ஹலோ." ......
"இதோ வந்துட்டேன்" ....... "ஆமா பஸ் ல தான். உங்க தெருவழியா நடந்து வந்திட்டு இருக்கேன்." .... "ம்ம்." "அவ தான். எங்க வந்திட்டு
இருக்க" னு கேட்டாள்.அதான். என்னடா.. எமன கால் பண்ணி கூப்பிட்டு சாவோட கமிட் ஆகறாளே னு பாக்றிங்களா. இன்னைக்கு அவ ரூம் ல இருக்க எல்லாரும் ஏதோ படத்துக்கு
போய்ட்டாங்களாம். இவளுக்கு என்னைய பாக்கனும் போல இருந்ததால தல வலி னு சொல்லிட்டு இருந்துட்டா. ரொம்ப அன்பானவ தான் அதனால தான் அவள என கூடயே வச்சிக்கனும் னு தோனுது. அப்படி
தோனினதால தான் அவள இப்போ கொல்ல போறேன். "ஏய் ஹலோ.." "................" "வந்து கதவ தொறடி" "..........." "டேய் தங்கம் உன்னை
இந்த ரெண்டு மூனு நாளா ரொம்ப மிஸ் பண்ணேன் டா... ஐ லவ் யூ டா.. ஐ லவ் யூ லாட்" னு என்னைய இறுக்கமா கட்டி புடிச்சி கிட்டா. நாங்க காதலிக்க ஆரம்பிச்சதுக்கப்றம் ரெண்டாவது
முறையா.. இத்தனை இறுக்கமா கட்டி பிடிக்கிறாள். " ஆ " இடுப்பில் சொருகி இருந்த கத்தி அழுந்துகிறது. " ஏய்... கிறுக்கி... ஐ லவ் யூ டி...வீட்டுக்கு வந்த
விருந்தாளிய இப்படிதான் நிக்க வச்சு பேசுவியா....?" "விருந்தாளியா... யாரு....?" "நான் தான்" "நீ என் புருசன் டா...my sweetest loveable
husband" "ஆஹான்...அப்படியா?" இடுப்பில் கையோட்டி இறுக்கிய படி உதடு நெருங்குகிறேன்.. " ஏய்... இரு இரு அப்படியே ப்ராக்கெட் ல வருங்கால னு போட்டுக்கோ...
" " புரியல " " என் வருங்கால புருசன் னு சொன்னேன்" "பரவாயில்ல.." மேலுதட்டையும் கீழுதட்டையும் சப்பி ஈரப்படுத்தி கொண்டு... அவள்
மோட்டுவாயை உயர்த்தி கண்களை மூடி கொண்டு உதட்டை உதட்டால் நெருங்குகிறேன்.... அவளும் கண்களை மூடிக் கொண்டால்... நல்ல சந்தர்ப்பம். அவள் இடுப்பில் இருந்து கைகளை விலக்கி என்
இடுப்பில் இருக்கும் கத்தியை தேடுகிறேன்.... காணவில்லை.... ஐய்யோ... சதக்... "ஆ..." என் கை எல்லாம் ரத்தம்... "டேய். உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும் னு
நம்பிக்கை இல்ல டா... அதான் உன்னையும் கொன்னுட்டு... நானும்..." சதக் "ஐ லவ் யூ டா த....... ங்க..... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" உங்களுக்கெதிரே இரண்டு சடலங்கள்
முத்தமிட்ட படி சரிந்திருக்கும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...