Short story
March 28, 2020
சகி
SHARE

புனைகதை :- அவன் ஒரு பைத்தியம். எலும்பும் தோலுமா - எழுத்தும் வாசிப்புமா - பொண்ணும் போதையுமா இருப்பான். கிறுக்கன். கிறுக்கனுக்கு இரு கண். இரண்டும் சிறு கண். மண்டைக்குள்
விண் விண். ஐயோ. ஐய்யய்யோ. அந்த அவன் நான் தான். சரியான பித்துக்குழி. தானும் மாயை ஊனும் மாயை காணும் யாவும் மாயை உங்கள் தலையில் ஓடும் பேனும் மாயை என்பேன். என்பான். சகி சகி
என்றே சாவுவான். சகி பித்து. சகிக்க முடியாத பித்து. தத்து பித்து தமிழே என் சொத்தும்பான். இப்போ புரிஞ்சிருக்கும். அவன் - அதான் நான் - பைத்தியம் தான் என்று. இன்று காலையில்
அருணோதயம் செக்கச் செவேல் என்று, வெட்கச் சாயம் படர்ந்த உன் முகம் போலவே இருந்தது சகி. அருணோதயம் - நினைவில் அருணாவின் உதயம். அருணா அழகி. குண்டு தக்காளி. பள பள னு. தள தள
னு. கொழு கொழு னு. எல்லாம் அருணா தான். ஆனால் நான் இப்படி தான். எப்பவும் வழ வழ , கொழ கொழ னு. "சாப்டலாம் பெரியம்மா?" இவன் எப்பவும் இப்படி தான். எழுதி கிட்டே
பக்கத்துல பேசுவான். பக்கத்துல பேசி கிட்டே எழுதுவான். பக்கத்துல பேசினதயும் எழுதுவான். பேசினதயே பக்கம் பக்கமா எழுதுவான். கிறுக்கன். அந்த பெரியம்மா யாரும் இல்லை. பேரு
பெரிதாயி. அவங்க கணவர் மாரடைப்பால் செத்து வருசம் பத்து ஆகுது. ஆனாலும் தன்னோட ரெண்டு பொம்பள புள்ளைங்க, ஒரு பையன், செத்துப் போன அக்கா மக, அது பெத்த குட்டி பையன் னு
எல்லோரையும் ஒண்டியா ஒழச்சு வளர்த்து வாருவம் பண்ணிருக்கு. மூத்த புள்ளைக்கு கல்யாணம் கட்டி வச்சு துரும்பு (விவாகரத்து) வாங்கியாச்சு. அக்கா பொண்ணும் அப்படியே ஆச்சு.
ஆனாலும் திடங் குறையாம நின்னு சமாளிச்சு பத்து வருசத்த கடந்து வந்திருக்கு. இன்னும் ஒழைக்குது. இதுலாம் பார்க்கும் நமக்கும் ஒரு ஊக்கம் வருதுல்ல. ஆமா இத எதுக்கு இப்போ
சொன்னேன்? மனுசம் புத்திய பாத்திங்களா? அடுத்தவனோட கஷ்டத்துல இருந்து ஆறுதல் தேடுது. ஆறு..... தல். ஆறுதல். மாறுதல். தேறுதல். தேறுதல். தேர்தல்.இப்போ எல்லாம் தேர்தலா
நடக்குது. எல்லாம் ஏமாத்து வேலை. ஊரு உழைப்ப சுரண்டுற வேல. ச்சீ. அந்த சாக்கடைய பத்தி பேச வேணாம். மூக்கடைச்சு கடந்துடலாம். கடந்துட்ட பிறகு யாரு சுத்தம் செய்யறது? நாம தான்.
நான் தான். நீ தான். ச்சீ. ச்சீ. ச்சீ னு சொன்னதும் ஷிபோ நினைவுக்கு வராள். அவளுக்காக ஒரு கவிதை எழுதி இருக்கேன். "அன்பே ஷிபோ. நீ சொல்லாதே ச்சீ போ." நல்லா இருக்கு
ல்ல. அது என்ன இருக்கு இல்ல.? நல்லா தான இருக்கு.? ம்ஹூம். நல்லா இருக்கு. தான் தான லாம் கூடாது. தான் னு சொல்றது லாம் தாழ்த்திக்றத போல. புரியுதா? அது சந்தேகச் சொல்லும்
கூட. உ.தா. எங்க அப்பா கூலி வேலை தான் செய்யறாங்க என்பதற்கும் எங்க அப்பா கூலி வேல செய்யறாங்க என்பதற்கும் வேறுபாடு புரியுதா? யலயா? புரியலயா? சரி வேற உ. தா:- எனக்கு சம்பளம்
பத்தாயிரம் தான். எனக்கு பத்தாயிரம் சம்பளம். புரியுதா? இப்போ புரிஞ்சிருக்குமே. தெரியும்.ஏன்னா பணம் பத்தும் செய்யும். பத்தாயிரமும் செய்யும். இப்படி புரிய வைக்கவும்
செய்யும். அச்சச்சோ. பேசி கிட்டே சாப்ட மறத்துட்டேன். அம்மா வந்தா திட்டு வாங்க. ஏற்கனவே எக்கச்சக்கமா வாங்கிட்டு இருக்கேன். சாப்டு கிட்டே பேசுவோம். வாங்களேன் சாப்டுவோம்.
இது தான் விருந்தோம்பல். தெரியுமா? மோப்பக் குழையுமாம் அனிச்சம். இது வள்ளுவன் மொழி. ஆமாம் ஷிபோவ பத்தி இல்ல சொல்லிக் கிட்டு இருந்தேன். ஷிபோ யாரு? சகி ப்ரெண்டு (அருணாவும்).
சகி என்னோட ப்ரெண்டு - காதலி - எல்லாம். . அப்போ ப்ரெண்டோட ப்ரெண்டு எனக்கும் ப்ரெண்டு தான? ப்ரெண்டு தான். ஆனா லவ்வரோட லவ்வர்? லவ்வரோட லவ்வர் நமக்கு எதிரி. சரியான லூசு
நான். சகி பத்தி தான பேசிட்டு இருந்தோம். சகி கூட நேத்து சண்ட. " நீ சொன்னது சரி தான் இனி பேசல" - நான். "பேச மாட்டியா?" "அப்படி தான்
நெனைக்கறேன்" (இது என்ன நெனைக்கறேன்? அவனுக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.) இப்படி கொஞ்ச நேரம், பேசமால் இருக்கப் போவதை பற்றி பேசினார்கள். ஆனால் பேசாமல் இல்லை. பேசி பேசி
பேச்சை வளர்த்து, பேசாமல் இருப்பது பற்றி பேசி முடித்து, இப்படியே பேசிக் கொண்டே இருப்போம் என்று பேசிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் பேசாமல் இல்லை. " i need you aji.
போகாத ப்ளீஸ்" "......" " பேசு அஜி" "......." " மாட்டியா? " "........ " "வந்துடு டா" "சரி போகல.
போயி சாப்டு " " love you aji. வா கட்டிகோ" "ம்ம் கட்டிக்றேன்" "இறுக்கமா? " " ம்ம் இறுக்கமா" "எவ்வளவு இறுக்கமா? "
" ஏய்... " " love you aji.. சொல்லு எவ்வளவு இறுக்கமா" " குட்டி குட்டி மாங்கா நசுங்கற அளவு. " " அது என்ன ரெண்டு குட்டி " "
ஆமா ரெண்டும் குட்டியா தான இருக்கு " " போடா லூசு. " போகாத லூசு. நானே லூசு. நானே சகி. நானே அஜி. எனக்கு வேண்டிய எல்லாமும் நானே. நானே எனக்கு சகி. அவள் போன
பிறகு அவளும் நானானேன். இப்படி பேசி பேசி. வாசி... வாசி. சகி.. சகி.. ஐயோ... அச்சச்சோ.. எனக்கு என்ன ஆச்சோ.? புத்தி பிசகி போச்சோ? "உடையாத இந்த உடலெனுங் கோப்பையில்
கடையாத அமுதிது உன் கை சேர காத்திருப்பதை இப்போதேனும் அறிந்து வா டா" " வரேன் சகி வரேன். ஆமா அது என்ன உன் t shirt ல? I m? ஒரு எம்.. தான தெரியுது. M for mango.
சகி. குட்டி மாங்கா. குட்டி குட்டி மாங்கா?" "ஏய்... அது i m osm " " ஆங்.. I am ல ஒரு எம் ஆசம் ல ஒரு எம். இப்போ ரெண்டு எம்மும் தெரியுது" "
டேய்... உன்ன.." "கவிதை சொல்லேன் சகி" " ம்ம்ம்..... என் செழித்த மார் பிரண்டும் உன் நினைவின் சேகரிப்பில் வளர்ந்தவை தானடா" சகி... சகி... "
உன்னிருங் கனத்த முலைகளில் காமத்தையும் தாய்மையையும் ஒரு சேர பருகுகிறேன் நான். அந்தச் சந்தன நிறத்து சதைத்திட்டுகளில் என் முகத்தோடு துயரையும் புதைத்து விடுகிறேன் சகி.
" புதைத்து விடவா? நானே புதைந்து விடவா? எங்கு போனாய் சகி. நீ osm இல்லை சகி. மோசம். இல்லை மோசமும் இல்லை. என் சுவாசம் சகி. என்ன இது என் சட்டை யில் i am osm? ஐயோ சகி..
நீ நானாகி விட்டாயா? லவ் யூ சகி. கும்தலக்கடி கும்மா. சகி வந்துட்டாளே எம்மா. சரி நான் தூங்க போகிறேன் சகி. மாடியில். நீ தூங்கலயா? கனுமா? தூங்கனுமா? சகி, இரவையும் உன்னைப்
போல எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப. சகி இரவைப் பற்றி நான் எழுதினதை படித்திருக்கிறாயா? கலயா? படிக்கலயா? இதோ படி. "மனிதர்கள் ஏன் இப்படி இரவைக் கண்டு
அஞ்சுகிறார்கள்.? (நீயும் அஞ்சுவாயா சகி.? மாட்டாய் தானே? ) ஏன் இப்படி இரவைக் கண்டு கண்ணயர்ந்து போகிறார்கள்? (நான் தூங்கவே மாட்டேன் சகி.உன்னையே நினைத்தபடி உருண்டு கொண்டு
இருப்பேன்) இரவு என்ன அவர்களை அடிக்கவாச் செய்கிறது.? இந்த இரவின் பேரமைதி எத்தனை மகோன்னதமானது. இரவின் அகோர இருட்டை கண்டு அஞ்சுகிறவர்கள் அந்தக் கனத்த கரிய மௌனத்தினூடே உள்ள
நட்சத்திரக் கவிதைகளை வாசிப்பதே இல்லை. (நான் வாசிப்பேன் சகி. அந்த நட்சத்திரங்களில் எல்லாம் உன் கண்ணின் ஒளி) அந்த நட்சத்திரக் கவிதைகளின் ரகசிய உரையாடல்களை யாரும் கேட்பதே
இல்லை. தினம் தினம் எத்தனை நட்சத்திரங்கள் செத்துதிருகின்றன. அதற்கெல்லாம் இவர்கள் அழுவதே இல்லை. பாவம். அநாதை நட்சத்திரங்கள். அவைகளுக்கு நான் தான் எல்லாமும். அதோ அந்த
நட்சத்திரம் எவ்வளவு நயமாய் கண் சிமிட்டி சிமிட்டி பேசுகிறது. (ஆமாம் சகி உன்னைப் போல உன் கண்களைப் போல. உன் கண்கள் எனக்கு நட்சத்திரம் சகி.) ஒளி வார்த்தைகள் உதிர, உருகி ஏதோ
எதுகையும் மோனையுமாய் பேசுகின்றது. கேள் திறனை கூர் திட்டி கேட்கிறேன். என்னை போல் அதற்கும் பேச ஆள் இல்லாத பெருந் தனிமையின் தவிப்பாம். (உன்னைப் போலவே) வார்த்தைகளை கொஞ்சி
கொஞ்சி உதிர்க்கிறது அது. . (உன் உதட்டில் இருந்து வார்த்தைகள் வர மறுப்பதை போல) அதன் கொஞ்சலுக்கு ஆசைப் பட்டும் அவ்வளவு அழகான இடத்தை விட்டு வர மனம் இல்லாமலும் நட்சத்திர
உதட்டில் இருந்து வார்த்தைகள் வெளி வர மறுக்கின்றன இருந்தாலும் (சகி ஏன் முறைக்கிறாய்.?வாசிக்க விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறேனா? சரி பேசல. படி) தன் சிறுத்த ஒளி உதடு
கொண்டு கருத்த இரவோடும் என்னோடும் சொற்பமான சொற்களில் அற்புத அற்புதமாய் கவிதை பேசுகிறது நட்சத்திரம். ஆனால் இந்தச் செவிட்டு இரவுக்கும் உங்களுக்கும் (நீயும் தான் சகி. நான்
பேசுவதை பொருட்படுத்துவதே இல்லை.) அது கேட்பதே இல்லை. வானம் ஆயிரம் நட்சத்திர உதடுகளால் முத்தமிட்டும் கருப்பு போர்வைக்குள்ளே உங்களைப் போல கண் தூங்கியே தொலைக்கிறது இரவு.
விழித்த பாடில்லை. உங்களைப் போலவே இரவும் உணர்ச்சி செத்து (சகி, நீயும் இப்படி தான் நடந்து கொள்கிறாய். என் காதலை கண்டுகொள்ளாமல். உணர்ச்சி செத்த படி) உறங்கிக்
கொண்டிருக்கிறது போல. எப்படியோ இன்னும் கொஞ்ச நேரம் உறங்கித் தொலையுங்கள். அவ்வளவு தான், நான் எல்லா நட்சத்திரங்களையும் அள்ளி வந்து இன்னொரு சூரியன் செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் இரவை பகலாக்க. " சகி. படிச்சிட்டியா? ஏய்.. சகி.. என் சகி.. தூங்கிட்டியா சகி? சரி தூங்கு. ஆனால் நான் தூங்குவதில்லை சகி. உன்னை நினைத்தபடி.. நீ என்னை நினைப்பாயா
என்று நினைத்தபடி? என்னை நினைக்க வில்லை என்றால் அப்படி என்ன நினைப்பாய் என்று நினைத்து, நினைத்ததை எல்லாம் நினைத்து நினைத்து, ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறேன் என்று
நினைத்து, இப்படி நினைக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்து, நினைத்ததை நினைத்து , நினைத்ததால் அழுது, அழுது கண்ணை நனைத்து, எழுதி பேப்பர் நனைத்து, இப்படி எழுதாமல்
இருந்தால் என்ன என்று மீண்டும் நினைத்து, அப்படி நினைத்ததையும் இப்படி எழுதி..ஐயோ சகி. தலைக்குள் சிக்கு புக்கு. கெக்க புக்க. ஹி ஹி.... சகி ஈஈஈ.... "சகி சகி என்கிறாயே
அது யாரென்று கேட்கிறார்கள் சகி. நீ தான் என் உலகானவள் என்று சொன்னால் புரியுமா அவர்களுக்கு?" சகி சகி சகி. வா சகி. என் கவிதை வாசகி. ஐயோ சகி. நான் தானே என் சகி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...