Back

Philosophy

September 16, 2025

காதலோடு ஒரு கொலை!

SHARE

காதலோடு ஒரு கொலை!

இந்தக் கதையை இப்படி தொடங்கி இப்படி முடிக்க வேண்டும் என்று நினைத்து நான் தொடங்கவில்லை. ஆனால் நடந்ததை எழுதும் போது என் விருப்பப்படி எழுதுவது எப்படி சரி ஆகும். அதனால் நடந்ததை நடந்தபடியே எழுதிகொண்டு போகிறேன்.

இப்போது என்னால கொல்லப்பட்டு இதோ இங்கே அருகில் கிடக்கிறானே இவன் பெயர் அஜித். இப்போதைக்கு அவன் மற்ற விவரங்கள் அனாவசியம் என்பதால் அவனை ஏன் கொன்றேன் என்கிற சுவாரஸ்யமான விஷயத்திற்குள் போகலாம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வாரம் சனி ஞாயிறு நாட்களில் நானும் அவனும், அவன் தங்கி இருக்கும் - அதாவது இப்போது அவன் செத்து கிடக்கிற - இந்த அறையில் சந்தித்துக் கொள்வோம். சமைப்போம் உண்போம் படம் பார்ப்போம். காமம் கூடுதலாக சேர்த்து கொண்டு கொஞ்சமாய் காதலிப்போம். பிறகு வழக்கமான தினசரி அலுவலக வேலைக்காக எனது ஆபிஸ்க்கு அருகில் நான் எடுத்து தங்கி இருக்கிற என் ஹாஸ்டல் அறைக்குத் திரும்பி விடுவேன். அவன் இதே அறையில் வொர்க் ப்ரம் ஹோம் செய்வான். எப்போதாவது ஒருவரையருவர் மிஸ் செய்வது போல தோன்றினால் வார நாட்களிலும் கூட சந்தித்துக் கொள்வோம்.

அப்படியான ஒரு ஞாயிற்றுக் கிழமையான இன்றும் நான் அவனை சந்திக்க காலையிலயே வந்துவிட்டேன். நான் வந்த போது அவன் எழவே இல்லை. காலிங் பெல்லை ரெண்டு மூன்று முறை அடித்த பிறகு தான் கதவைத் திறந்தான். திறந்தவன் - கதவை கூட சாற்றாமல் - அப்படியே என்னை அணைத்து கொண்டு வந்து என்னை பெட்டில் தள்ளி கட்டிக் கொண்டு படுத்து விட்டான். அழகாக அமைதியாக தன் குட்டிக் குட்டிக் கண்களை மூடிய படிய தூங்கிக் கொண்டிருந்தான்.

சொல்ல மறந்து விட்டேன். இந்த கதை என்னுடையது தான் என்றாலும் என் பெயரை எங்கேயும் சொல்லாத என் சாமர்த்தியத்தையும் அவன் பெயரை மட்டும் சொல்லி வைத்திருக்கிற குரூரத்தையும் பற்றி எதும் குற்றமாக நினைக்க வேண்டாம். அவன் தான் அவன் பெயரையே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தான்.

ஆமாம், இதோ போல் ஒரு நாளில் நானும் அவனும் கட்டிக் கொண்டு அருகருகே கிடந்த போது ஏதோ ஒரு யோசனையில்,

"உன்ன போல நானும் ஒரு நாள் கதை எழுதுவேன். நீ எழுதற மாதிரி கற்பனை கதையில்ல. நிஜக் கத. நம்மலோட அழகான காதல் கத"
"ம்ம் எழுது. எழுது." என்று எதையோ போனில் டைப் செய்து கொண்டே சொன்னான்
"எழுதினா கதைல உன்னோட பாத்திரத்துக்கு என்ன பேரு வைக்கட்டும்"
"என் பேரே வை"
"இல்ல வேற வைக்கலாம். அஜித்-ன்ற பேரு இப்படி இவ்வளவு காதலிக்கிறவனுக்கு அவ்வளவா பொருத்தமா இல்ல"
என்று சிரித்தேன்.
அவன், தன் போனில் இருந்த கண்ணை திருப்பி என்னை ஒரு மாதிரி கிறக்கமாக பார்த்து, போனை கீழ வைத்து விட்டு மார் நசுங்க இழுத்து அணைத்து
"பின்ன என்ன மன்மதன் னு வைக்கலாமா" என்று உதட்டை கவ்வினான்.

போதும். அந்த நாளை அப்படியே விட்டுவிட்டு இந்த நாளுக்கு வருவோம். சரி, உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அவன் பெயரை பயன்படுத்தியது தவறு இல்லை என்பது. ஏன் இதை விளக்குகிறேன் என்றால் ஏற்கனவே ஒரு கொலைக் குற்றத்திற்கு ஆளாகி விட்டேன். அதோடு இந்த பெயர் குற்றத்தையும தூக்கி சுமக்க தெம்பில்லை. அதான்.

அஜித் செத்துக் கிடக்கிறான். அவன் முகத்தில் இன்னும் அந்த கிறுக்கமான புன்னகை மாறாமல் இருக்கிறது. "மன்மதன்னு வைக்கலாமா" என்று சொல்லி என் உதட்டைக் கவ்விய அதே உதடுகள் இப்போது நீல நிறமாக மாறியிருக்கின்றன.

நான் அவனைக் கொன்றேன். ஆமாம், நானே கொன்றேன். அவன் deep thinker. நான் practical dreamer. Perfect combination. so நான் நினைத்திருந்தேன் - இது ஒரு அழகான சமத்துவமான காதல். இருவருக்கும் இடம் இருக்கிற காதல் என.

ஆனால் அவன் என்ன நினைத்தான் தெரியுமா? இது ஒரு அழகான present moment experience. Future promises இல்லாத, expectations இல்லாத, pure connection. அவனளவில் life is like a laboratory. Here we are to experiment everything.

கடந்த சனிக்கிழமை நான் அவன் போன் உரையாடலை எதேச்சையாக கேட்டேன். அவன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.

"மச்சி, நான் எந்த commitment-உம் கொடுக்கல... ஆமாம் டா, multiple relationships... அவளுக்கும் தெரியும் என் philosophy... நான் clear-ஆ சொல்லியிருக்கேன்..."
அந்த வார்த்தைகளைக் கேட்டபோது shock அல்ல, realization. அவன் பொய் சொல்லல. அவன் honest-ஆவே பேசுறான். ஆனால் அவன் honesty எனக்கு என்ன அர்த்தம் என்பதுதான் என் delusion.
நான் அறைக்குள் வந்தேன். " அஜித், நீ யாரோடு பேசிக்கொண்டிருந்தாய்?"
அவன் எவ்வித தயக்கமும் இல்லாமல்
"என் friend. என் relationships பற்றி discuss பண்ணினேன்."
"நம்ம relationship-ஐ எப்படி describe பண்ணின?"
"உண்மையைத்தான் சொன்னேன் டி. நாம emotional and physical connection share பண்றோம். ஆனால் traditional commitment இல்ல."
அவன் பொய் சொல்லல. அவன் exactly அதைத்தான் என்னிடமும் சொல்லியிருந்தான். நான்தான் selective-ஆகக்கேட்டேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு. Book cafe-ல் poetry reading event ல், அவன் stage-ல் நின்று உரக்கச் சொன்னான்:
"உன்னை முத்தமிட்ட
உதடுகள்
வேறெவளையும்
முத்தமிட குவியாதென்றெல்லாம்
பொய்யுரைக்க மாட்டேன் கண்மணி.
மிகையுரைத்துன்னை
ஏமாற்றாது என் காதல்."
அந்த radical honesty! ஒரு love poem-ல் "நான் மற்ற பெண்களையும் முத்தமிடுவேன்" என்று ஓபன் ஆக சொல்லும் துணிவு!
Event முடிந்ததும் நான் அவனிடம் போனேன். "Shocking poem! இப்படி honest-ஆ சொன்னா யாராவது hurt ஆக மாட்டாங்களா?"
"அதான் என் principle. False promises கொடுத்து பிறகு disappoint பண்ணுறதை விட, முன்கூட்டியே expectations set பண்ணிடுவேன்."
"Practical-ஆ work ஆகுமா இந்த approach?"
"கொஞ்ச பேருக்கு வேலைக்கு ஆகும் மத்தவங்க traditional expectations-னால விலகிடுவாங்க."
"நீங்க married-ஆ?"
"இல்லை. திருமணம. பந்தமாக இல்லாமல் நிறைய இடங்கள் ல நிர்பந்தமா இருக்றதால காதலே கதி மோட்சமென காலம் ஓட்டுறேன்"
என் மனதில் ஆச்சர்யம் ததும்ப, இப்படி mature arrangement possible-ஆ? என்று கேள்வி எழுந்து முட்டி நின்றது. மன்னிக்கவும் அவனோடு ஆசை தத்தும்பும் அசைவ பேச்சுகள் பேசி பேசி எனக்கும் அப்படியே ஆகி விட்டது.
"Coffee குடிக்கலாமா?" என்று கேட்டேன்.

Coffee shop-ல், காதலின் மீதான தன் சிந்தாந்தத்தை அவன் இன்னம் detailed-ஆக explain பண்ணினான்:
"நான் நம்புறேன் - love finite resource இல்ல. ஒருத்தரை காதலிச்சா மத்தவங்களை காதலிக்க முடியாதுன்னு யார் சொன்னது?"
"ஆனால் jealousy வராதா?"
"வரும். அது natural. ஆனால் அதை overcome பண்ணணும். Possessiveness-ஐ love-னு confuse பண்ணக் கூடாது."
அவன் philosophical-ஆக பேசினான். "Traditional marriage-ல் what happens? Two people promise பண்றாங்க forever together இருக்கணும்னு. ஆனால் 50% divorces. Better-ஆ present moment-ல் authentic-ஆ இருக்கலாம்."
அந்த logic sound-ஆ இருந்தது.
சூடான காபியும் சுவையான உரையாடலுமாக கழிந்த அந்த பொழுது, அவன்பால் என்னை கவர்ந்திருந்தது.
ஒரு சின்ன சந்திப்பும் கொஞ்சம் காபியும் கொஞ்சம் கவிதையும்
"பெண்களை காதலிப்பது போல் இல்லை ஒரு பெண்ணை காதலிப்பது" என்று பேசும் ஒருவனை காதலிக்க போதுமான காரணமா என்று கொஞ்சமும் நான் யோசிக்கவே இல்லை.
என் உணர்ச்சியின் சூடு அணையும் முன் உடனே கேட்டு விட்டேன்.
"நீங்க என்னோட interested-ஆ?"
"என்ன கேட்டிங்க?"
"உங்களுக்கு கேட்டது தான் கேட்டேன்."
"என்னங்க instant காபி மாதிரி?"
"ஏன் கூடாதா?"
"கூடலாம்." என்றான் சிரித்து கொண்டே.
(அவன் இப்படித தான் அசைவ ஆசாமி)
என் மனதில் excitement! எனக்கு இது adventure மாதிரி தோன்றியது. Traditional possessive relationships-ல் இருந்து liberation!
மனம் ஒரு மாய ஊஞ்சலில் வானுக்கும் மண்ணுக்குமாக ஆடி கொண்டிருந்தது.

சீன மூங்கில் போல் கிடு கிடுவென வளர ஆரம்பித்தது எனக்கும் அவனுக்குமான காதல் உறவு.
நாட்கள் ஓடியது. உரையாடல் வழியாக தொடங்கிய உறவு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
முதன் முறையாக இதே போல் ஒரு நாளில் அவன் அறைக்கு என்னை அழைத்து சென்றான்.
அறையின் சுவர்களில் யாரோ ஒரு பழைய நடிகையின் இளைய போட்டோ நிறைய ஒட்டப் பட்டிருந்தது. எனக்கு யாரென்று தெரியவில்லை.

ஆனால் அழகான பெண். மாடர்ன் உடை, புடவை, கவுன், மிடி - என்ன விதவிதமான ஆடைகளில் விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட நிறைய படங்கள்.
என்னைப் போலவே , மூக்குத்தி போட்டிருந்தாள்; கனகாம்பரம் சூடி இருந்தாள்.
அவன் ஏதோ லேப்டாப்பில் தட்டிக் கொண்டிருந்தான்.
நான் அவனை பார்த்து கொண்டே இவள் யாரென்றேன்
"பொன்னுஞ்சலில் ஆடிய இளமை. ஷோபா. காமிராவின் சட்டர் speed க்கு ஈடாக முகபாவங்களை அள்ளித் தெளித்த அழகி." என்றான்.
நான் அவளின் ஒவ்வொரு படமாக பார்த்து கொண்டிருக்க அவன் அவளை வர்ணித்தான். அவள் வாழ்வை விவரித்தான். செந்தாழம் பூவில் வந்தாடிய தென்றலாம் அவள். 17 வயதில் பூத்து 17 வயதிலேயே உதிர்ந்த விட்ட பருவப் பூவாம். கேரள செழுமையின் பெண் வடிவமாம். அவள் போல் இளைய வயதிலேயே தேசிய விருது வாங்கிய ஆள் இன்றளவும் யாரும் இல்லையாம்.
Intellectual feminism பேசும் இவனுக்குள் இப்படி ஒரு ரசிகன் இருப்பது ஆச்சரியமாகவும் இருந்தது. அதே சமயம் அவளை வர்ண்ணிக்க வர்ண்ணிக்க எரிச்சலும் ஏற்பட்டு விட்டது.
"பருக்கவும் கறுக்கவும் செய்யாத அந்த சின்ன உதட்டில்" என்று அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த போது அவனை உதட்டோடு உதடு பொருத்தி அழுத்த முத்தி அணைத்து கொண்டேன்.
எந்த பெண்ணுக்குதான் தான் விரும்பும் ஆண் இன்னொரு பெண்ணை வர்ணிப்பதை ஏற்றுக கொள்ள முடியும்?
அரையிருள் சூழ்ந்த அந்த அறையில் ஆற அமர அரங்கேற்றியது உடற்கூத்து. மயங்க மயங்க முயங்கி முயங்கி கூடினோம்.
கூடிக் களைந்த பின், என் கை அவன் மேலும் அவன் என் மேலும் பட்டுக் கிடக்க மல்லாந்து கிடந்தோம். எனக்கு rest room போக வேண்டும் போல் இருந்தது. தள்ளாடி தள்ளாடி எழுந்தேன்.
அடித்து போட்ட பாம்பென சுருண்டு படுத்து கடந்தவன் திடுக்கென எழுத்து என்னை அப்படியே நில் என்றான்.
உடலின் விளிம்பில் பட்டு தெரிந்த ஒளியில் என் நிர்வாண அழகை angle மாற்றி மாற்றி போட்டோ எடுத்தான். சுவற்றில் இருந்த ஷோபாவை பார்த்து வெட்கம் மேலிட சிரித்து கொண்டேன். அவன் எடுத்த அத்தனையும் அழகழகாய் இருந்தது. நல்ல ரசிகன்.
பின் இஞ்சி எலக்காய் தட்டிபோட்டு சுட சுட தேநீர் போட்டு தந்தான். பக்கத்தில் அமர்ந்து பருகிக் கொண்டே தன் laptop-ல் latest கவிதைகளைக் காட்டினான்:

“மத்தள பிருஷ்டங்கள்
அதிர நீ
நடக்கும் போதெல்லாம்
உண்டாகி உலுக்குகிறது
எனக்குள்
மன நடுக்கம்” - இதை அப்போது தான் எழுதி இருந்தான் . இதை வாசித்ததும் மேலே சுற்றிக் கொண்டிருந்த பேன் அடிவயிற்றில் சுற்றியது. என் வெட்கத்தை - பார்த்துவிட்டு, இழுத்தணைத்து
காதோடு கவிதை பேசினான்.
“வெட்கத்தால் ஆன ஆடையைத் தவிர வேறெந்த ஆடையை வேண்டுமானாலும் அணிந்து வா. பட்டுத் துணி பருத்தித் துணி எல்லாம் கூடநான் தொட்ட உடன் அவிழ்ந்து விழுகிறது. உன் வெட்கத் துணி மட்டும் நான் தொடத் தொட வளர்ந்து உன் வாலிப உடல் மூடுகிறது.”
என்று சொல்லி - என் பருவக் கனிகளில் கிளி முத்தம் கொடுத்து விட்டு , அடுத்தக் கவிதை வாசித்தான் .

"எண்ணிலா பேர் என்னை காதலித்தாலும்
உன்னிலே மனம் குவிந்து கிடக்கிறதென
உருட்டத் தெரியாது கண்மணி எனக்கு.
காதலிக்காத பேரையும்
காதலித்துருகுமளவு
கனிமையுற்று கிடக்கும் மனம்
காதலிக்கின்ற பேரை காதலிக்காமல் போகுமா என்ன?"

ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது , தொண்டையை குத்தும் மீன் போல குத்தியது அவன் கவிதை. இருந்தாலும் சுதரித்து ,
"இது beautiful! ஆனால் நீங்க என்னை மாத்திரமே love பண்ணமாட்டீங்களா?" என்றேன்.
அவன் என் முகத்தைத் தொட்டான். " இல்ல. ஆனால் special. Different people, different types of connection."
" அப்படி என்ன ஸ்பெஷல்? "
"நான் சந்தித்த சமகால ஷோபா நீ. உன் மூக்குத்தி. உன் கனகாம்பரம் . மின்சாரம் போல எதிர்பாராத நேரத்தில் என்னை தாக்கும் உன் சொல் செயல். ஊதி வைத்த பாலுன் போன்ற... " என்று தொட வந்தவனை தடுத்து நிறுத்தி.
"போதும் போதும். நீங்க இப்போ யாரெல்லாம் date பண்றீங்க?" என்று அச்சமும் possessive ம் மேலிட கேட்டேன் .
"இரண்டு பேர். பிரியா - அவள் college met, poetry-ல் interest. Kavya - software engineer, intellectual discussions நல்லா பண்றா. நீ மூன்றாவது."
அந்த brutal honesty! சராசரி ஆண் இதை hide பண்ணியிருப்பான். ஆனால் அவன் transparent.
"அவங்களுக்கும் என்னைப் பற்றி தெரியுமா?"
"தெரியும். நான் யாரிடமும் secret வைக்கல. எல்லாருக்கும் full disclosure."
"அவங்களுக்கு ஓகேயா?"
"Initially struggle பண்ணினாங்க. ஆனால் இப்போ accept பண்ணியிருக்காங்க."
என் மனதில் confusion. இது possible-ஆ? Jealousy இல்லாம multiple relationships?
"நீ எவ்வளவு time வேணும்னாலும் எடுத்துக்கோ decide பண்ண. No pressure."
அந்த patience! அந்த respect!
"Try பண்றேன்" என்றேன்.

அடுத்த ஆறு மாதங்கள் magical-ஆக் இருந்தது.
ஒரு evening: நாங்க couch-ல் intimate-ஆ இருந்தோம். அவன் என்னைப் பற்றி கவிதை எழுதிக்கொண்டிருந்தான்:
"காதலின் நெடுங்காயிற்றால் சூழற்றி விடப்பட்ட
உன் ஆதி பெருங் காமம்
என் பருவத்தின் ஆணி முனையில்
பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க
முத்த விரல்களால் தீண்டி தீண்டி
உன்னை வான வில்லாய் முளைக்க செய்தது
என் காதல்."
அந்த erotic poetry! என் உடலைப் பற்றி இப்படி beautifully எழுதுறான்!
எனக்குத்தான் என்று தெரிந்தாலும் வேண்டும் என்றே கேட்டேன்.

"இது என்னைப் பற்றியா?"
"ஆமாம். உன் sexuality-ஐ celebrate பண்றேன்."
அன்று இரவு love making-ல் அவன் அந்த கவிதையையே recite பண்ணிக்கொண்டிருந்தான்:
"பிறகு பாலொடு தேன் கலந்த
நம் எச்சிலின் வழவழப்பில்
உன் ஏழு வண்ணங்களையும் குழைத்து
உடலெங்கும் பூசி பூசி
நானுமோர் வானவில்லானேன்."
அந்த moment-ல் நான் அவனது single muse என்று நினைச்சேன். ஆனால் அவன் மற்ற பெண்களைப் பற்றியும் இதே மாதிரி எழுதுறான் என்பது பிறகுதான் தெரிஞ்சுது.
அவன் charm-ன் உச்சகட்டம்:
"டி, இன்னிக்கு ஒரு serious poem எழுதினேன். Women's oppression பற்றி. உன் opinion வேணும்."
அவன் read பண்ணினான். Powerful feminist poem. "மனசத் தொட்டுட்ட அஜித்."
அவன் mischievous grin. "இல்லையே, இன்னும் தொடலயே."
அவன் என் மார்பைத் தொட கை நீட்டி அணைத்துக்கொண்டான். அந்த wordplay! அந்த smooth transition!
" அஜித்! நீ impossible!"
"ம்ஹூம்” என்று முணகிக் கொண்டே.. “Serious moments-ஐ light பண்ணிக்கனும். Life அதிக serious ஆகக் கூடாது."
"traditional love-ல் என்ன problem தெரியுமா? People promise பண்றாங்க forever love பண்றேன்னு. ஆனால் feelings change ஆகும். Better-ஆ present moment-ல் authentic-ஆ இருக்கலாம்."
அவன் என்னைக் kiss பண்ணி, சொன்னான்:
"அன்பே
இந்த நேர இருத்தலை அன்றி
வேறெதையும் நம்புவதில்லை நான்.
இங்கு இப்போது என்னோடு இருக்கிறாய். இருக்கிறோம்.
அவ்வளவு தானே அன்றி,
'எப்போதும் என்னோடு இருப்பாய்! ஒன்றாகவே இருப்போம்' என்பதெல்லாம்
போலி நம்பிக்கை."
அப்போது அது profound-ஆ தோன்றியது. Buddhist mindfulness மாதிரி. Present moment awareness.
"நீங்க relationship-ல் future commitment-ஐ believe பண்ணலையா?"
"பண்ணல. Future uncertain. இன்னிக்கு நான் உன்னை love பண்றேன். நாளைக்கு தெரியாது."
அந்த philosophy intellectually attractive-ஆ இருந்தது. No false promises, no emotional manipulation, complete freedom.
மீண்டும், "Try பண்றேன்" என்றேன்.
அப்போது அது profound-ஆ தோன்றியது. பிறகுதான் realize பண்ணினேன் - இது commitment phobia-க்கு fancy term.

முதல் ஆறு மாதங்கள் blissful-ஆ இருந்தது. அவன் poetry போல் அழகாக இருந்தது. அவன் physical intimacy mind-blowing இருந்தது. Most importantly, pressure இல்லை. எந்த expectations-உம் இல்லை.
என் intellectual growth-ல் genuine interest காட்டினான். Books recommend பண்ணினான், literary discussions encourage பண்ணினான்.
ஒரு நாள் workshop-ல் அவன் என்னை introduce பண்ணினான்: "This is my friend. One of my most insightful readers."
பிரியாவும் அந்த workshop-ல் இருந்தாள். Pretty 22-year-old. அவளும் அவன் poems-ல் expert.
Workshop முடிந்ததும் நான் அவனைக் கேட்டேன்: " பிரியா cute-ஆ இருக்கால்ல?"
அவன் smile. "ஆமாம். அவளும் நல்ல poet."
"அவளோட நீ intimate-ஆ?"
"Sometimes. அவளுக்கும் தெரியும் நம்மளைப் பற்றி. அவள் okay."
அப்போது எனக்கு minor jealousy வந்தது. ஆனால் அவன் honest-ஆ answer பண்ணினான். அவன் hide பண்ணல.
"நானும் வேற யாரையாவது date பண்ணலாமா?"
அவன் encourage பண்ணினான்! "Sure! Experience expand ஆகும். நீ happy-ஆ இருந்தா எனக்கும் happy."
அந்த non-possessiveness refreshing-ஆக இருந்தது.

ஆனால் மெது மெதுவாக என்னுள் dissatisfaction grow ஆக ஆரம்பித்தது.
நான் emotionally monogamous type. அவன் heart divide பண்ணப்பட்டிருந்தது multiple people-க்கு. நான் அவன் full attention வேணும்னு ஆசைப்பட்டேன்.
ஒரு Sunday evening: அவன் Kavya-வுடன் phone-ல் long conversation. Poetry discuss பண்ண, நான் அவன் பக்கத்தில் உட்கார்ந்து wait பண்றேன்.
Call முடிச்சுட்டு அவன் என்னிடம் வந்தான். "Sorry டி. தங்கத்த ரொம்ப காக்க வச்சிட்டேனா? Kavya-க்கு writing guidance கொடுத்துக்கொண்டிருந்தேன்."
"One hour-ஆ phone call guidance கொடுக்கணுமா? நான் இல்லாதப்போ இத பண்ணக் கூடாதா ?"
"Sorry, Sorry, அவளுக்கு detailed explanation வேணுமா இருந்தது."
எனக்கு hurt ஆனதை, என்னால் express பண்ண முடியல. நான்தான் agree பண்ணியிருக்கேன் அவன் philosophy-க்கு.
அன்று இரவு intimacy-ல் கூட என் மனம் முழுமையாக present-ல் இல்லை. என் mind-ல் Kavya-ன் voice echo பண்ணிக்கொண்டிருந்தது.
அவன் என் distraction-ஐ notice பண்ணினான். "என்ன டி? கவர்ச்சி அழகியா இருக்கற இப்போ அ சௌகர்யம் அழகியா இருக்க?"
எனக்கு அவன் பேச்சு கொஞ்சம் கிச்சு கிச்சு பண்ணினாலும், முயன்று முகத்தை இறுக்கி கொண்டு "ஒன்னும் இல்லை i am Okay" என்றேன்.
அவன் என்னைப் பார்த்து smile பண்ணி, தன் favorite philosophy poem recite பண்ணினான்:
"இந்த நேர இருத்தலை அன்றி
வேறெதையும் நம்புவதில்லை நான்.
இங்கு இப்போது என்னோடு இருக்கிறாய். இருக்கிறோம்.
வா..
இந்த கணத்தை..
இந்த நேர இருத்தலை
இந்த முத்தத்தில் இருக்கிற
எச்சில் கவிச்சையை
உயிரின் மெல்லுஷணத்தை
உணர்ந்து அனுபவி - போதும்."
அந்த moment-ல் அவன் sincere-ஆக இருந்தான். அவன் genuine-ஆக present moment-ல் என்னோட connect பண்ண try பண்ணினான்.
ஆனால் என் மனம் accept பண்ணல. எனக்கு future security வேணும். Emotional consistency வேணும். அது அவனால் கொடுக்க முடியாது.

எட்டு மாதங்கள் கழித்து நான் பிரியாவ personally meet பண்ணினேன். அவன் birthday party-ல்.
அவள் sweet, young, enthusiastic. அவளிடம் பேசியபோது எனக்கு அவளைப் பிடித்துப் போயிற்று!
" பிரியா, நீ அஜித்-ன் philosophy-ல் comfortable-ஆ?"
அவள் maturely answer பண்ணினாள்: "Initially difficult இருந்தது. ஆனால் அவர் clear-ஆ explain பண்ணினார். அவர் எனக்கு exclusive commitment கொடுக்க முடியாதுன்னு."
"Jealousy வராதா?"
"வரும். ஆனால் அவர் சொன்னது சரி - அது என் insecurity. அதை overcome பண்ணணும்."
அவள் அவன் philosophy-ஐ genuinely accept பண்ணியிருந்தாள். அவளுக்கு அது work பண்ணிக்கொண்டிருந்தது.
எனக்குத்தான் work ஆகல. நான் traditional emotional attachment வேணும்னு expect பண்ணினேன்.
Party-ல் அவன் எங்கள் மூன்று பேரையும் introduce பண்ணினான். "இவங்க தான் என் close connections."

Kavya is smart, independent. அவளும் dating other people. அவளுக்கும் அவன் philosophy work பண்ணிக்கொண்டிருந்தது.
நான் மட்டும்தான் struggle பண்ணிக்கொண்டிருந்தேன்.

கடந்த மாதம் நான் final confrontation பண்ணினேன்:
" அஜித், எனக்கு இந்த arrangement வேலைக்காது."
அவன் concerned expression. "என்ன problem டி?"
"எனக்கு emotional security வேணும். நீங்க மற்ற பெண்களோட time spend பண்றீங்கன்னு தெரிஞ்சா hurt ஆகுது."
அவன் sympathetic-ஆ பேசினான்: "புரியுது டி. ஆனால் நான் என் nature-ஐ change பண்ண முடியாது. நானும் suffer பண்றேன் exclusive relationship-ல்."
"அப்போ solution என்ன?"
அவன் honest answer: "நம்ம compatibility இல்ல emotional needs-ல். நீ traditional commitment வேணும் என்கிறாய். நான் அதை கொடுக்க முடியாது."
"அப்போ நம்ம relationship end பண்ணணுமா?"
அவன் sad expression. "Probably yes. ஆனால் நான் உன்னை force பண்ண விரும்பல unhappy-ஆ இருக்க."
அந்த maturity! அந்த consideration! அவன் என்னை emotionally manipulate பண்ணல. Truth சொன்னான்.
ஆனால் என்னால் அவனை leave பண்ண முடியல. நான் addicted ஆயிப்போயிருந்தேன் அவன் intellectual stimulation-க்கு, அவன் poetic sensibility-க்கு.

இன்னிக்கு morning அவன் என் பின்னால் வந்து இடுப்பைப் பிடித்தபோது:
"இன்னிக்கு நாள் முழுக்க present moment-ல் focus பண்ணலாம்." என்று,
அவன் ஒரு romantic suggestion-னு நினைச்சு சொன்னான். ஆனால் எனக்கு அது schedule போல் தோன்றியது.
" அஜித், எனக்கு ஒண்ணு clear பண்ணு. நீ என்னை எந்த level-ல் love பண்ற?"
அவன் honest answer: "நான் உன்னை நேசிக்கிறேன் டி. ஆனால் என் capacity-ல். நான் multiple people-ஐ love பண்ண capable. அது என் nature."
"அப்போ நான் உனக்கு special இல்லையா?"
அவன் என் hand-ஐ பிடித்தான். "Special தான். ஆனால் only special இல்ல. பிரியா-வும் special. Kavya-வும் special. Different reasons-க்கு."
அந்த matter-of-fact tone! அந்த casual equality!
" அஜித், எனக்கு exclusive love வேணும். முடியுமா?"
அவன் sad smile. "முடியாது டி. அது என் authentic self இல்ல. நான் force பண்ணி exclusive ஆனா, resentment develop ஆகும். அது நம் relationship-ஐ poison பண்ணும்."
அவன் psychological awareness! அவன் self-knowledge! ஆனால் எனக்கு அது consolation ஆக இல்ல.
"அப்போ நான் என்ன பண்ண?"
அவன் மிகவும் gently சொன்னான்: "நீ உன் nature-க்கு suit ஆகுற relationship கண்டுபிடி. Monogamous partner. நீ அதற்கு deserve பண்ற."
அவன் என்னை encourage பண்ணினான் leave பண்ண! Selfish-ஆ அவன் என்னை hold பண்ணி வைக்கல.
"ஆனால் நான் உன்னை விட்டுப் போக விரும்பல."
"அப்போ இந்த contradiction-ஐ accept பண்ணி வாழணும். Pain இருக்கும். ஆனால் authentic இருக்கும்."

என் patience அன்று break ஆயிற்று அவன் casual tone-ல் சொன்னபோது:
"டி, நீ dramatic ஆக வேண்டாம். நம்ம arrange பண்ணியிருக்கிற setup நல்லா work பண்ணுது. ஏன் அதை complicate பண்ற?"
"Dramatic-ஆ?" என் குரல் rise ஆயிற்று.
"ஆமாம் டி. நீ எல்லா பெண்களையும் மாதிரி possessive ஆகாதே. நம்ம mature-ஆ handle பண்ணலாம்."
அந்த "எல்லா பெண்களையும் மாதிரி" - அந்த generalization எனக்கு கோபத்தை கொண்டு வந்தது!
" அஜித், நீ உன் poetry-ல் women's empowerment பற்றி எழுதுவே. ஆனால் practical-ல் என்னை எப்படி treat பண்ற?"
அவன் defensive ஆனான் first time-க்கு: "நான் உன்னை மிகவும் respectfully treat பண்றேன்! நான் உன் autonomy ஐ respect பண்றேன்!"
"Autonomy respect பண்றியா? அல்லது convenience-க்காக என்னை independent-ஆ keep பண்றியா?"
அவன் frustrated: "டி, நீ என்ன வேணும்னாலும் think பண்ணிக்கோ. நான் என் principles-ல் firm."
"உன் principles-ஆ? அல்லது உன் fear of commitment-ஆ?"
அவன் angry ஆக ஆரம்பித்தான்: "நான் commitment-க்கு பயப்பல! Authentic commitment-ஐ believe பண்றேன்! False promises இல்லாத commitment!"
"அப்போ எனக்கு எந்த commitment-உம் இல்லையா?"

அவன் final honest statement: "Present moment commitment இருக்கு. இந்த instant-ல் நான் உன்னை முழுமையா love பண்றேன். Future-க்கு guarantee கொடுக்க முடியாது."
அந்த existential honesty எனக்கு unbearable! ஆக இருந்தது. எனக்கு security வேணும், stability வேணும், future plans வேணும்!
" அஜித், என்னால இந்த இந்த uncertainty-ல் இருக்க முடியல "
அவன் calm-ஆ சொன்னான்: "அப்போ நீ leave பண்ணு டி. நான் force பண்ண மாட்டேன். நான் change ஆகவும் மாட்டேன்."
அந்த stubborn calmness! அந்த unwillingness to compromise!
"நீ என்னை love பண்றியா இல்லையா?"
"பண்றேன். ஆனால் உன் terms-ல் இல்ல. என் terms-ல்."
அப்போதுதான் knife இருவர் நெஞ்சிலும் இறங்கி போயிற்று. என் நெஞ்சில் உண்மை கத்திபோல் இறங்கியது. அவன் நெஞ்சில் உண்மை கத்தியே இறங்கியது.

இப்போது அவன் செத்துக் கிடக்கும்போது realize பண்றேன் - அவன் யாரையும் ஏமாற்றல. அவன் consistently honest ஆகத்தான் இருந்தான். அவன் எல்லா cards-ஐயும் table-ல் வச்சிருந்தான்.
என் mistake: நான் அவன் change ஆவான்னு நினைச்சேன். நான் special-ஆ இருந்தா அவன் exclusive ஆவான்னு expect பண்ணினேன். ஷோபா போல.
அவன் mistake: அவன் என் emotional needs-ஐ genuinely understand பண்ணல. அவன் intellectual-ஆ accept பண்ணினான், ஆனால் empathize பண்ணல.
எங்கள் ரெண்டு personalities-ம் fundamentally incompatible இருந்தது. அவன் polyamorous existentialist. நான் monogamous romantic.
அவன் feminist தான். ஆனால் அவன் feminism intellectual exercise. Emotional feminism இல்ல. அவன் women-ன் rights-க்கு support பண்ணுவான், ஆனால் women-ன் emotional needs-ஐ understand பண்ண தெரியவில்லை.
கடைசி வரை அவன் honest இருந்தான். "நான் change ஆக மாட்டேன்" என்று clear-ஆ சொன்னான். அவன் false hope கொடுக்கல.
ஆனால் honesty எப்போதும் kindness இல்லை. Sometimes brutal honesty cruelty-ஆ feel ஆகும். அவன் truth சொன்னான், ஆனால் என் pain-ஐ minimize பண்ணினான். அவன் unbending truth என்னை பைத்தியமாக்கியது. அதனால் ஷோபா போல நானும் செய்தேன் ஒரு கொலை. என்றாலும் அவள் தன்னை கொலை செய்து கொண்டாள். நான் - அவனை கொலை செய்தேன் .
முற்றும்.



காதலில் உண்மை கொடுமையானது. பொய் அன்பானது. உண்மையை தாங்க முடியாதவர்கள் கொலையும் செய்வார்கள்.

நன்றி : - மொழி முழுங்கிய மோகினியே!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...