Back

Poem

October 5, 2022

கவிதை

SHARE

கவிதை

அன்புள்ள அக்கா, நான் நலம் . நீ. நலமா ? முதலில் உனக்கென் miss you க்களும் love you க்களும் அக்கா. “அக்காக்களால் பிரியம் கொட்ட முடிகிறதே ஒழிய பால் தர முடிவதில்லை “ என்கிற
கலாப்ரியா கவிதையை வாசித்த போது கண்களில் நீர் துளிர்த்து விட்டது அக்கா. என்னை பெறாத தாயல்லவா நீ? என் காதலிகளுக்கும் மேலான காதலி அக்கா நீ. உலகமே என்னை புறந்தள்ளி
விட்டதாய் உணரும் போது நான் நாடும் புத்தகங்களில் நீ என் முதலான புத்தகம். என் எல்லா கண்ணீரையும் நீ அறிவாய். என் எல்லா காதல் கதைகளையும் நீ அறிவாய். என் எல்லா மவ்னத்தின்
அர்த்தங்களையும் நீ அறிவாய். அக்கா நீ என் முதலான தோழி. என் முதலான வாசகி. என் முதலான ஆசிரியை நீ. அக்கா இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. I love you க்கள் அக்கா. Miss
you க்கள். அக்கா , நீ அப்போது ஆசையாய் கேட்ட jeans உட்பட்ட ஆடைகளை வாங்கி தர இப்போது என்னிடம் காசு இருக்கிறது. ஆனால் ? காலம் கொடியது அக்கா. இந்த சமூகம் கொடியது அக்கா.
குடும்ப அமைப்பு கொடியது அக்கா. பெண்ணுக்கு மாத்திரம் கர்ப்பப்பை தந்த இயற்கை கொடியது அக்கா.கல்யாணம் உனக்குள் இருந்த குழ்ந்தையை , பருவக் கனவுகளை பறித்துக் கொண்டதில்லையா?
அக்கா , நான் - சாதியில் , மதத்தில், குடும்ப அமைப்புகளில் இருக்கிற ஆணாதிக்கத்தை பெண்ணடிமைத்தனத்தை பற்றி யோசிக்க , எதிர்க்க - என - என்னில் அடிமைத்தனதிற்கு எதிரான சிந்தனை
தோன்ற நீயும் நம் அம்மாவுமே முதற் காரணம் அக்கா. உனக்கும் நம் அம்மாவுக்கும் நம் அம்மாவைப் போன்ற அத்தனை பெண்களுக்கும் இந்த ஆணாதிக்க சமூகம் இழைத்த அநீதிக்கு பதில் சொல்லியே
ஆக வேண்டும் அக்கா. எனக்கு வாழ்வின் வெளிச்சங்களை அடையாளம் காட்டிய உனக்காக ஒன்றும் செய்யவே இல்லையல்லவா நான்? எனக்கு எண்ணும் எழுத்தும் போதித்த உனக்கு எதையும் தரவே
இல்லையல்லவா நான்.? உன்னை உன் ஆசைகளை அடக்கி ஒடுக்கி கிழித்தெறிந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்து எதுவும் செய்யவே இல்லையவல்லவா நான்? தியேட்டரில் படம் பார்க்க .. gear பைக்
ஓட்ட .. தனியாய் ஓர் நெடும் பயணம் போக ..உனக்கு பிடித்த உடைகளை அணிய, உனக்கு பிடித்த படிப்பை நீ படிக்க .. ஹாஸ்டலில் தங்கி படிக்க.. உனக்கு பிடித்த வாழ்க்கையை நீ வாழ ..ஏன்
இதை விடவும் குட்டி குட்டியான உன் விருப்பங்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள அனுமத்திக்காத சமூகத்தின் மீதும் .. அதற்கு எந்த வகையிலும் உதவிட முடியாமல் போன என் மீதும் கோவம்
கோவமாய் வருகிறது அக்கா. கூடவே கண்ணீரும். அக்கா இந்த வாழ்க்கை எத்தனை எத்தனை முறை உன்னை அழ வைத்திருக்கும்? அக்கா... அக்கா, இப்போது உன்னிடம் கேட்க ஓர் மன்னிப்பும் சொல்ல
ஓர் love you வையும் தவிர என்னிடம் ஒன்றுமில்லை அக்கா. அக்கா தயுவு பண்ணி உன்னைப் போல உன் பிள்ளையை வளர்த்து விடாதே . அவளுக்கான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியது உன்
பொறுப்பு . அவளை உன்னைப் போல் கோழையாய் வளர்த்து விடாதே. நீ கோழை தான் அக்கா. உனக்கு விருப்பமில்லாத கல்யாணத்திற்கு எதிர் குரல் எழுப்பத் துணிந்த என்னையும் தடுத்து விட்ட
கோழை. அப்பா அம்மா மயிரு மட்டை என வாழ்வை வீணடித்து விட்ட , தன் தலையில் தானே தீ வைத்துக் கொண்ட முட்டாள் கோழை நீ. அக்கா, பெண்ணாய் பிற்ப்பதே பெறும் பாவம் இல்லையா? அக்கா உன்
ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவாவது உனக்கு முன் நான் பிறந்திருக்க கூடாதா? அக்கா என்னை மன்னித்து விடு அக்கா. போதும் .இத்தோடு முடித்துக் கொள்கிறேன் .இதற்கு மேல் என்னிடம்
இயலாமையின் கண்ணீர் தான் இருக்கிறது.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...