Back
Poem
January 23, 2016
கவிதை
SHARE

நெருங்குகிறேன்;
விலகுகிறேன்;
காரணம்,
அடிக்கடி
அடிமனதில்
நெருஞ்சி முள்ளொத்த
நெருடல் நிகழ்கிறது.
அன்பே,
மன்னிக்கவேண்டும்
நெருங்கியதற்கும்
விலகியதற்கும்.
ஆம்
தேளென்றாய் என்னை
வருத்தமில்லை
ஆனாலும்
வருந்துகிறேன்
உன்னை வாட்டியதை எண்ணி.
மறக்கவேண்டும்
என்னை;
இனி உனக்கு
இன்னல் தரமாட்டேன்;
உன்னை
அன்பென்ற பெயரில்
அழவைக்க மாட்டேன்;
என்னை
மன்னித்துவிடு
மறந்துவிடு.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...